NEET – National Eligibility cum Entrance Test (UG) - Muduvai Hidayath

.

MBBS/BDS படிப்புக்களுக்கு இந்த NEET தேர்வில் தேறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தேர்வு எதிர்வரும் 7-May-2017 – இன்று தொடங்கினாலும் இன்னும் 35 நாட்கள் அவகாசமிருக்கிறது சுமார் 2 கிலோவிலிருந்து 5 கிலோவரையுள்ள புத்தகங்கள், மாதிரி கேள்வித்தாள்கள், ஆன்லைன் மாதிரித் தேர்வுகள், ஆன்லைன் பாட விளக்கங்கள், நேர்முகப் பயிற்சிகள் என்று மாணவர்கள் பொழுதைக் கழிக்கமுடியும். சந்தடி சாக்கில் கல்லாக் கட்ட பல கல்வி ஆர்வலர்கள் சந்தைக்கு வந்து அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் துணிமனிகள் தேர்வு செய்வதுபோல இப்போது பிள்ளைகளுக்கான பயிற்சி மையங்களையோ அல்லது பாடப்புத்தகங்களையோ தேர்வு செய்யவேண்டிய நிலை.
இந்த 35 நாட்களுக்கு நமது ஆலோசனை எவ்வித பலனும் அளிக்க முடியுமா என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்தப் பதிவின் தொடர்ச்சியாக அல்லது இந்தப் பதிவின் முடிவில் பின் குறிப்பாக சில ஆலோசனைகள் கொடுத்துள்ளேன். ஆனால், இந்த பதிவின் பிரதானக் கருத்து – மிகவும் முக்கியமானது இதுதான்.


1. NEET தேர்வு CBSE பாடத்திட்டப்படி அமைவது. நமது மாணவர்கள் அதிகமதிகம் சமச்சீர் கல்வித்திட்டப்படி பயிலுபவர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது துல்லியமாக நோக்கும்போது சில பாடவிளக்கங்களின் விரிவுகள் என்று பார்த்தாலும், முக்கியமான வித்தியாசம் என்பது சமச்சீர் முறை 12-ம் வகுப்புத் தேர்வுக்கான பாடமும், 11-ம் வகுப்புக்கான பாடமும் சேர்ந்து படிக்கும் எந்த மாணவர்களும் துனிவுடன் இந்த NEET தேர்வை எதிர்கொள்ளமுடியும். ஆனால், நமது பள்ளிக்கூடங்கள் அனைத்துமே 11-ம் வகுப்பு மாணவர்களையும் 12-ம் வகுப்பு பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்தும்படி பயிற்சியளிக்கின்றன. காரணம் 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே எல்லாக் கவுண்சிலிங்களிலும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வும் கிடையாது. ஆனால் இந்த NEET தேர்வில் சுமார் 55லிருந்து 60 கேள்விகள்வரை 11-ம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து இருக்கும் (மொத்தம் 180 கேள்விகளைல், biology 90 + chemistry 45 + physics 45). எனவே 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை இப்போதாவது திரும்பிப் பார்க்கவேண்டிய கட்டாயம்,
2. சரி, இப்போது NEET தேர்வுக்கு படிப்பவர்கள் இன்னும் 35 நாட்களுக்குள் இவற்றை செய்துகொள்ளட்டும். ஆனால், இந்த வருடம் 10-வது தேறி 11-ம் வகுப்பில் காலடி வைக்கும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் ‘இனியொரு விதி செய்யவேண்டும்’
அது 11-ம் வகுப்பு பாடத்தை பள்ளிகள் ஆண்டு முழுவதும் முழுமையாகக் கற்றுத்தரச்செய்யவேண்டும்!.
3. குறைந்தபட்சம் NEET தேர்வுக்கு தயாராகும் பாடப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இதில் வற்புறுத்தலுடன் இருக்கவேண்டும். பள்ளிகளும் தாமாக முன்வந்து தங்களின் பழய உத்திகளை மாற்றிக்கொள்வர் என்றும் நம்புவோம்.
4. குறிப்பாக 11-ம் வகுப்பு காலக் கட்டத்திலிருந்தே இவர்கள் NEET தேர்வுக்கான தயாரிப்பை தொடங்கிவிடவேண்டும்.
அடுத்து மாணவர்கள் பயிற்சி நிலையங்களில் – குறிப்பாக திடீரென காளான் போன்று முளைத்து 30 நாட்கள் 40 நாட்களில் பயிற்சியளிக்கும் நிலையங்களில் சேரும்முன் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
நீங்கள் மனது வைத்தால், உங்கள் வீட்டிலிருந்தபடியேகூட பயிற்சிமேற்கொள்ளமுடியும்.
குறிப்பிட்ட மாதிரி விணா-விடை அடங்கிய புத்தகங்கள் அல்லது ஆன்லைன் பதிவிகளைத் தரவிரக்கம் செய்துகொள்ளுங்கள். பிறகு,
1. முதலில் உங்களிடம் இருக்கும் மாதிரி விணாக்களில் உங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லாமல் நன்றாக விடைதெரிந்த கேள்விகளை விருவிருவென ஒரு கலர் பென்சில் வைத்து மார்க் செய்து அவற்றை உங்கள் கையிருப்பிலிருந்து நீக்கிவிடுங்கள்.
2. சந்தேகத்திற்குறிய வினாக்களை நீங்கள் ஒருமுறை அவை சம்பந்தப் பட்ட பாடத்தை மட்டும் பார்த்துவிட்டு விடை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் இப்போதும் பதிலளிக்க வேண்டாம். பின்னர் இதுபோல அடுத்தடுத்த கேவிகளில் ஒரு சுற்று விரைவாக முடித்துவிட்டு, மீதியுள்ள கேள்விகளுக்கு விருவிருவென இன்னொரு கலர் பென்சில் வைத்து மார்க் செய்து அவற்றையும் உங்கள் கையிருப்பிலிருந்து நீக்கிவிடுங்கள்.
3. இப்போதும் எஞ்சியிருக்கும் கேள்விகளும், நீங்கள் முதல் இரண்டு கலர் பென்சிலால் மார்க் செய்த கேள்வி பதில்களை சரிபார்த்து அவற்றில் கானும் பிழை (most dangerous errors in your understanding) களையும் பற்றி உங்களுக்குத் தெரிந்த டியூஷன் ஆசிரியரிடம் சென்று கேட்டுத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
4. முதல்முறையே விருவிருவென பதிலளிக்கப்பட்டு – அது சரியாகவும் இருந்துவிட்டால், அவற்றைத் தவிர்த்து மற்ற விணாக்களைப் பொருத்து, மேற்கண்டவாறு வாசித்தல் முழ்வதும் முடிந்து தொடர்ந்து இரண்டுமுறை செய்யவேண்டும். ( ஒரு நாளில் கடுமையாக உழைத்தால் சுமார் 400லிருந்து 500 கேள்விகளை கடாசமுடியும்.). ஆரம்ப நாட்களில் விருவிருவென நன்றாகத் தெரிந்த கேள்விகளை உங்கள் கையிருப்பிலிருந்து கடாசுவதால் அதிக எண்ணிக்கையில் முடியலாம். பின்னர் போகப் போக சந்தேகம் எழும் கேள்விகளைன் எண்ணைக்கை என்பதால் கடாசும் வேகம் குறையும். அப்போது அதிகமாக பாடத்தை மறு வாசிப்பு செய்யவேண்டும். அல்லது ஆசிரியர்களிடம் பாடம் கேட்கவேண்டும்.
குறிப்பாக பரிட்சைக்கு இரண்டு நாட்கள் முன் உங்களால் சரியாக விடையளிக்க முடியாத கேள்விகள் மொத்தமே ஒரு பக்கத்திற்கு மேல் இருக்க வாய்ப்பில்லைதானே?. இதுவரை நீங்கள் பார்க்காத புதிய கேள்விகள் இருக்கலாம் அவற்றை அப்போது பார்த்துவிட அவகாசம் இருக்கலாம்.
இதுபற்றி அதிகமாக எழுதவேண்டியதில்லை. எல்லாம் உங்களுக்கு நன்றாகவே ஏற்கனவே தெரிந்த விசயம். ஆன்லைனிலும் நிறைய இலவச பாடங்கள், மாதிரி விணாத்தாட்கள் உள்ளனவாம். ஆனால் எல்லாவற்றையும் திரட்டி (அதில் பல ஒரே கேள்விகள் திரும்பத்திரும்ப வருபவை) உங்களுக்கு நீங்களே நேர விரயமும் சலிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் ஒரு வரையை அமைத்துக்கொண்டு அதனை முடிக்க முயலுங்கள். அதன் பிறகு அடுத்தக் கட்டத்தில் இன்னும் இன்னும் என்று மேற்செல்ல நேரம் இருந்தால் முயலுங்கள்.
மதுக்கூர், பட்டுக்கோட்டை ( OLI Academy & Training Institute ) மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளிக்க முயற்சித்தோம். ஆனால் உரிய ஆசியர்கள் கிடைக்கவில்லை என்பதால் இந்த வருடத்திற்கு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டோம். என்றால் ஒன்றிரண்டு மாணவர்களுக்கு மேற்கண்ட வழிமுறை சொல்லிக்கொடுத்து அவர்கள் வீட்டிலேயே படித்து வருகிறார்கள். மற்றபடி இணையதள வசதியில்லாத மாணவர்கள் எங்களை அனுகலாம்.
Contact 4373-224444  / 918675353989 olitrustnet@gmail.comnsmsh@yahoo.com

No comments: