.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில், சட்டசபை கூட்டம், நாளை
துவங்குகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கூடும் இந்த கூட்டத்திற்கு, அ.தி.மு.க.,
சசிகலாவின் அதிருப்தியாளர் என கருதப்படும், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கப் போவதால், ஆளுங்கட்சி இவருக்கு கட்டுப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெ., மறைவுக்கு பின், முதன்முறையாக, நாளை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில், சட்டசபை குழுக்கள் அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், குழுக் கள் அமைக்கப்படவில்லை. சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை குழுக்கள் அமைக்க
வலியுறுத்தி, சபாநாயகர் அலுவலகத்தில், மனு கொடுத்தனர்.
முழுவதையும் பார்க்க OLD Post என்பதை அழுத்தவும்
மாணவர்கள் போராட்டம்
அதே போல், காங்., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்களும் மனு
கொடுத்தனர்; இதுவரை நடவடிக்கை இல்லை. அதன்பின், தமிழகத்தில் நிலவும் வறட்சி தொடர் பாக விவாதிக்க, சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத் தின; ஆனால், கூட்டப்படவில்லை. தற்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.இந்த சூழ்நிலையில், நாளை சட்டசபையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றுகிறார்.அதை தொடர்ந்து, கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறும். விவாதத்தின் போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை எடுத்துரைக்க, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மேலும், சட்டசபை குழுக்கள் அமைக்கப் படாதது; வளர்ச்சி திட்டப் பணிகளில் தேக்கம்
ஏற்பட்டுள்ளது ஆகியவை குறித்து, எதிர்க்கட்சியினர் பேச உள்ளனர்.
எதிர்பார்ப்பு
தற்போது,ஆளுங்கட்சியில் ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. 'பன்னீர் பதவி விலக வேண்டும்; சசிகலா முதல்வராக வேண்டும்' என, வலியுறுத்தும் அமைச்சர்கள், முதல்வர் பேச்சுக்கு கட்டுப்படுவரா, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு, முறையாக பதிலளிப்பரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, நடை பெற உள்ளசட்டசபை கூட்டத்தொடரில், அனல் பறக்கும் விவாதமும், ஆளுங்கட்சியில் பரபரப்பும் இருக்கலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது. -