துருக்கி விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலி ( காணொளி இணைப்பு )
துருக்கி விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலி ( காணொளி இணைப்பு )
16/01/2017 துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான போயிங் 747 என்ற சரக்கு விமானமொன்று இவ் விபத்தில் சிக்கியுள்ளது.
இதில் பயணித்த விமானி உட்பட விமான சிப்பந்திகள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த விமானம் குடியிருப்பு பகுதிக்குள் வீழந்துள்ளதால் 15 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 6 குழந்தைகள் உட்பட பல குடியிருப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.