'ஞானம்வௌியீட்டு விழாவும் பவள விழாவும்

.

ஈழத்திலிருந்து கடந்த 16 ஆண்டுகளாக வெளிவரும் 'ஞானம்' கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் "நேர்காணல்" சிறப்பிதழாக ஜனவரி மாதம் 22ஆம் திகதி (ஞாயிறு) கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இச்சிறப்புத் தருணத்தில் 'ஞானம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கிவரும் தி.ஞானசேகரனின் பவளவிழாவும் நடைபெறவுள்ளது.
வெளியீட்டு விழாவிலும் பவளவிழாவிலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
காணோளி (Video) அழைப்பிதழை இணைப்பில் காண்க.

பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்!