கடலோரக் கவிதை

.

மாலை நேரக் காற்று
இளம் பெண்கள் கூந்தலை வருடிச் செல்ல,
ஆதவனோ தன்நாள் வேலை முடிவென
கடலுக்குள் மறைந்து செல்ல,

கடல் அலைகளோ தம் உறவில்
நிலைகொண்டு பொங்கிப் புரண்டு வர,
அவ் வலைகளின் அசைவிலே
சதக் பதக் என ஓர்
இசை மீட்டன கடற் தோணிகள்,கரையோர மணல்களில்
ஓங்கி உயர்ந்திருந்த
தென்னை இலைகளோ
ஆடி அசைந்து இசை மீட்க,

பட்சிகள் பலவடிவ உருவாக்கத்தில்
ஒற்றுமையோடு தம்மின
இசையோடு பறந்து செல்ல,

காதல் ஜோடிகள் கைகோர்த்து
மகிழ்ச்சியோடு வீடு நோக்கி நகர,

ஆழ்கடலில் தம் உயிரை பணயம் வைத்து
உழைப்பே வாழ்வெனும் உறுதிகொண்டு
தோணிகளைத் திருப்பினர்
மீனவர் எனும் உழைப்பாளிகள்,

மீனவர் மனைவி அன்னையர்
ஆண்டவனை வழிபட்டனர்
இம்மீனவ ரெனும் ஆடவரின்
உயிர் வாழ்வுக்கே.

சாண்டில்யன் – கந்தர் பாலநாதன்