ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 14.

.
 “உய்வு”

எமது நண்பர் Haig Karunratne  ஆங்கில நாடகங்கள் பலவற்றை தயாரித்து பிரபலமானவர். பிரபல சிங்கள ஆடற்கலைஞர்களான சித்திரசேனா, பணிபரத, போன்றோரின் நட்பும் இவருக்கு உண்டு. எனது மேடை நிகழ்ச்சிகட்கு தவறாது வந்தவர் நல்ல நண்பருமாகிவிட்டார். அவர் என்னிடம் அடிக்கடி வரியுறுத்தியது ஆண் பாத்திரத்தை ஆண்களும், பெண் பாத்திரத்தை பெண்களும் ஏற்று நடிப்பதே இயல்பானது. நாட்டிய நாடகங்களில் பெண்கள் ஆண்பாத்திரம் ஏற்று நடிப்பதை அவர் விரும்புவதில்லை.
ஆனால் எமது நாட்டிய நாடகங்கள் மிகை படுத்தப்பட்ட கலை வடிவம். இயல்பு வளி நாடகங்கள் அல்ல ஆந்திர கூச்சிப்புடி நாட்டிய மரபிலே ஆண்களே பெண்பாத்திரம் ஏற்று நடிப்பது சம்பிரதாயம்.  பெண்களையும் விஞ்சிய நளினத்துடன் கவர்சிகரமாக ஆடுபவர் அவர்கள். அந்த விந்தையை பலரும் பாராட்டி உள்ளார்கள்.

கேரளத்தின் கதைகளிலும் ஆண்களே பெண்வேடம் பூண்பது இயல்பு. கேரள கலாமண்டபம் கலைஞர்கள் கொழும்பிலே Tower theater இல் மகாபாரதத்தில் ஒரு கட்டமான சூதாட்ட காட்சியை ஆடி காண்பித்தார்கள். அதில் பாஞ்சாலி வேஷம் போட்டு நடித்த பையன் 18, 20, வயது மதிக்கத்தக்கவர் பெண்ணாக நடித்தபோது, பார்வையாளர்கள் அத்தனைபேரும் அவரை ஒரு பெண் என்றே எண்ணி இருந்தனர். அவரது நடிப்பு அத்தகையது மூன்றாம் நாள் நடந்த நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர்கள் மேடையில் தோன்றினர். பாஞ்சாலியாக நடித்த பையன் மேடைக்கு வரும் போதும் அவரது பெண்மையின் நளினம் சிறிதும் குறையவில்லை. அன்றைய அறிப்பாளர் He is not a women, he is a man என்றார். கரகோஷம் வானைப் பிளந்தது.


இதே நிகழ்ச்சிக்கு எனது மாணவியரை அழைத்துப் போயிருந்தேன் கதகளி ஒப்பனையை காண்பிப்பதற்கு நிகழ்ச்சிக்கு முன்பே அவர்களை கூட்டிப்போயிருந்தேன். பாசசாலி ஒப்பனை நடைபெறும் போது பார்த்து இரசித்தோம். ஒப்பனையாளனி கைகளால் ஒரு ஆண் வசிகரம் மிக்க பெண்ணாக மாறும் விந்தையை கண்டு இரசித்தோம்.


இது கலைக்கே உரித்தான விந்தை. எனது தங்கை உஷா நாதன் இராவணனாக ஆடியபோது அவரை கண்ட ஒரு குழந்தை பயத்திலே வீரிட்டு அழுதது. தந்தையோ பயப்படாதே அவர் நல்ல மாமா என்றார். இங்கு பெண் ஆண்வேடம் தரித்து ஆடினார். ஓப்பனையுடன் முழுமையாக பாத்திரத்தின் குணாதிசயத்தை ஏற்ளு நாட்டியமாக ஆடும்போது பெண் ஆண்வேடமும், ஆண் பெண்  ஆண் வேடமும் பூண்பது இயல்பே. Harold Peris  என்ற நாடககலைஞர் பலதடவை எனது இராமாயன ஒத்திகையை வந்து பார்த்வர். முpக அருமையாக இரசித்து விமர்சிப்பார். அவரிடம் Haig Karunratne கூறியதை பற்றி சொன்னேன். உனது இராவணன் பெண்ணா ஆணா என நான் பார்க்கவில்லை, அவரது நடிப்பு உன்னதமானது என்று கூறியவர் மேலும் ஒரு ஆணில் விட பெண் ஒருத்தி அவ்வாறு ஆடுவது தான் நடிப்புக் கலையின் உன்னத நிலை என்றார். இத்தனைக்கும் எந்தவித ஒப்பனையும் இல்லாமலே ஒத்திகையின்போது இரசித்து பார்த்து கூறிய விமர்சனமே இது.
இத்தனையும் கீழத்தேய மரபு. எமது நண்பர் Haig Karunratne ஆங்கில theater மரபில் ஊறியவர் சிங்களவரது நடனம் அடிப்படையில் ஆண்களதே. பிற்பட்ட காலங்களில் பெண்களுக்கென ஒரு ஆடல் வகை இல்லாமையால் பெண்களும் அதே கண்டியன் நடனங்களை இணைந்து ஆடி வருகிறார்கள். அதுவே அவர்கள் மரபும் ஆகியது. அதனால் அவர்கள் தயாரிப்பு எதுவும் ஆண் பெண் இணைந்ததாகவே இருக்கும். எனக்கு பல சிங்கள கலைஞர்களின் தொடர்பு உள்ளமையால் நானும் அவ்வாறு இணைந்து தயாரிக்க முயல்வது இயற்கையே.


கண்டிய நடனம் கற்ற சிங்கள ஆண் பெண்களும், எமது தமிழ் ஆண் பெண்களும் இணைந்த தயாரிப்பே “உய்வு” எனது நெறியாழ்கையில் ஆட சிங்களவரும் இணைந்து கொண்டமையால் இங்கு தமிழ் மொழியை நான் பயன்படுத்த முடியாது. அதனால் மொழி பிரயோகம் அற்று வாத்திய இசையுடன் நான் நாட்டியத்தை தயாரித்தேன்.

விமர்சனம்:
கார்த்திகாவின் நாட்டிய நாடகம் - யோகா பாலச்சந்திரன்
தினகரன் செப்ரம்பர் 10- 1982

நதிகனர ஒரங்களில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்களின் வாழ்வில் நவீன யந்திரங்கள், மின்சக்தி ஆகியனவற்றின் வருகை ஏற்படுத்திய தாக்கங்களும், நவயுக வர்த்தமான மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பதில் மனிதர்கள் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியுடன் தீரமும், மரபு வழி நாட்டிய குழுவினர் அளித்த “உய்வு” இசை நாடகத்தின் சாராம்சமாகும். பாரம்பரிய நாட்டிய உத்திகளின் மூலம் நவயுகத்தின் தகவல்களைப் பரப்புதல் எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதற்கு இந் நாட்டிய நாடகம் பதிலாக அமைந்துள்ளதெனலாம். முற்றிலும் வாத்திய இசையை பின்னணியாக கொண்டு நடத்தப்பட்ட “உய்வு” நாட்டிய நாடகம் மொழியறியாதோரும் புரிந்து கொள்ள கூடியதாகவும், இரசிக்க கூடியதாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தது பாராட்டுக்குரியது.
சென்நவார இறுதியில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் அமரிக்க தூதுவரின் மனைவி திருமதி கோரா ரீட் தலைமையில் நடைபெற்றது மரபு வழி நாட்டியக் குழுவின் நிகழ்ச்சி.
இரசிகர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை அளித்தமைக்காக மரபுவழி நாட்டியக் குழுவினரையும், குறிப்பாக அதன் இயக்குநரும், நாட்டியத் துறையில் ஆய்வும் புதிய முயற்சிகளும், அவ்வப்போது செய்து வரும் நாட்டிய ஆசிரியையுமான திருமதி கார்ததிகா கணேசருக்கு ஈழத்தின் இளம் நாட்டியக் கலைஞர்களும் இரசிகர்களும் பெரும் கடமைப்பட்டுள்ளனர் என்றே கூறவேண்டும்.


கார்த்திகா பல புதிய இளம் கலைஞாகளை உருவாக்கும் பணியோடு, சமுதாயத்தில் மக்களிடையே பாரம்பரிய நாட்டியக் கலையில் மட்டுமின்றி, அதனூடாக புதிய பரீட்சார்த்த முயற்சிகளையும், புரிந்துணர்ந்து இரசிக்கும் இயல்பினையும் வளர்த்து வருகிற பாங்கினை எத்துணை பாராட்டினாலும் பொருந்தும்.
வளர்க கார்ததிகாவின் கலைப்பணி, வாழ்க அவர்தம் கலைக்கூடம்.

நாட்டிய உலகில் மேலும் புதுமைகள் - சித்திரா
VIRAKESARI ILLUSTRATED WEEKLY 21  JANUARY, 1979
விமர்சனத்தின் ஒரு பகுதி:

தொழில் நுட்பம் போலவே கலையும் மக்கள் மத்தியில் வேண்டப்படும் போதே, அது எமது சமுதாயத் தேவையுடைய தொன்றாகவும், ஜீவனுடையதாகவும், சமுதாயத்தில் பிரபலமடைகிறது. அதாவது தேவையின் நிமித்தமே கலைவடிவமும் ஜன ரஞ்சகமடைகிறது. பரதக்கலையும் ஜீவனுள்ள கலையாக எமது மத்தியில் பரவச் செய்வதற்கு திருமதி கார்த்திகா கணேசர் பாடுபட்டு வருகிறார்.
எமக்கே உரிய நாட்டியக் கலை வடிவங்களும், யுக்திகளும், திறமைகளும், சர்வதேசரீதியில் கணித்து மதிக்கப்பட வேண்டிய தொன்று என்பதை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டது “உய்வு” எனும் நாட்டியம் 
இந்நாட்டியத்தின் கதை, மொழியினது உதவியின்றியே சொல்லப்படுகிறது. மோழியின் தடையை மீறி, சுத்தமான உயர்ந்த இசை மூலமும் ஆடல் மூலமும் “உய்வு” நடிக்கப்படுவதால் எம் மொழியினரேனும் இதை முற்றாகப் புரிந்து இரசிக்க முடியும். நாட்டியம் முடிந்த பின்பு பார்வையாழர்களின் சிந்தனையில் ஓர் ஆழமாக தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது “உய்வு”.
இந் நாட்டியத்தில் ஆண்களும் பெண்களும் ஆடுகின்றனர். அது மட்டுமல்ல, சிங்கள, தமிழ்க் கலைஞர்கள் ஒன்று கூடி ஆடுகின்றனர். சிறந்த தமிழிசையினால் அமைக்கப்பட்ட நாட்டியத்தினை ரசித்து அனைவரும் ஆடுகின்றனர். தமிழ் இளைஞர்களுக்கு ஆடுவதற்கேற்ற நவீன ஆட்ட முறைகளே இல்லையா என்ற குறையை நீக்கிய திருமதி கார்த்திகா கணேசர் விசேட பாராட்டுக் குரியவர். ஆகவே “உய்வு” நாட்டியம் இன, மத, மொழி வேறுபாடின்றி கலை ஆர்வமுள்ள சகல மக்களும் பார்த்து திறனாய வேண்டீயதொன்று.

Dravidian Ballet - Survival by SGN
SUNDAY OBSERVER 14-01-1979

On the 27th at Ramakrishna Hall Karthiga Kanesar will give Dravidian ballet a new dimension. A fine blend of tradition and modernity will be seen in her ballet "Survival" which will be performed by Karthiga ballet troupe Sinhala and Tamil youth, where the play will be seen braking the barriers of language.

For the first time a Dravidian ballet with a modern theme has been choreographed for a true international audience. The story is clearly narrated through rich and appropriate music and dancing without a dull moment at any stage. It is a continuous stream of scenes depicting the need of natural resources. Science and technology and finally courage and self reliance in time of calamities and disasters.