.
அப்பா மரணித்து விட்டார்
அவரை நான்
முதல் தர சவச்சாலையில் வைத்துள்ளேன்
அதி முக்கிய அதிதிகளுக்கான
'மல் சாலாவ'
இந்த சமூகத்தில்
எத்தனை பேர் இறந்து போயினர்
அப்பாவுக்கு மட்டுமே
இந்த அதீத மரியாதை
ஒரு பக்கம் நிறைய
படம் ஒன்று போட்டு
பத்திரிகையில் பிரசுரித்ததும்
எத்தனை பேர் வந்துள்ளனர்
மலர் மாலைகளுடன் இங்கு
அப்பா பெரியவர்
அவரின் கடைசி ஆசை
தனது இறப்பு நன்றாக
அமைய வேண்டும் என்பது
முதல் தர சவச்சாலை
அதனால் தான்
வந்த அதிதிகளுடன் 'மல் சாலா'வில்
மகன் சிரித்து கதைப்பது கேட்கிறது
அப்பா மரணித்து விட்டார்
- எச்.ஏ.
அஸீஸ்
பிற்குறிப்பு:
""""""""""""""
- நேற்று வரை அப்பாவிடம்
மருந்துக்கும்
பணம் இருக்கவில்லை
சேரிக் குடிசையில்
சாக்குக் கட்டிலில்
செத்துப்போயிருந்தார் அப்பா
எவருமே கண்டு கொள்ளாது.
- 'மல் சாலாவ' (in Sinhaha) - Funeral parlour )