கன்பராவில் ஞானம் ஆசிரியருக்கு பாராட்டு விழா

.

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கமும் கன்பரா  கலை இலக்கிய  வட்டமும்  
இணைந்து,  கன்பராவில்  கலை இலக்கியம் - 2016  என்னும்  நிகழ்ச்சியை  கன்பரா  தமிழ்  மூத்த  பிரஜைகள் மண்டபத்தில்  (Canberra Tamil Senior Citizens Hall, 11 Brumby Street, Isaacs, ACT 2607) சென்ற சனிக்கிழமை  4 ஆம்  திகதி  (04062016)   சனிக்கிழமை  மாலை 3.00மணிஇலிருந்து 7.00 மணிவரை இடம் பெற்றது.

நான்கு   அமர்வுகளாக  இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  தலைவர் பேராசிரியர் ஆசி.கந்தராஜாவின்    தலைமையில்  நடைபெற்ற  இந்நிகழ்வில்   இலங்கையின் மூத்த  படைப்பாளியும்  ஞானம் ஆசிரியருமான  டொக்டர்  திஞானசேகரனின் அயராத இலக்கியசேவைகளை   பாராட்டி  எழுத்தாளர்  திருமதி  யோகேஸ்வரிகணேசலிங்கம்   உரையாற்றினார் .

 ஞானசேகரனுக்கு    அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்   சார்பில் விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டது 
டொக்டர்  ஞானசேகரன்  தமது  ஏற்புரையுடன்  "  ஈழத்து இலக்கியமரபின் இன்றைய  நிலை "  என்னும்   தலைப்பில்  உரை நிகழ்த்தினார். 







கருத்தரங்கு புத்தக வெளியீடு குறும்படம் என பல நிகழ்வுகள் மண்டபம் நிறைந்த மக்களோடு இடம் பெற்றது. 

இது பற்றிய விரிவான பார்வை அடுத்தவாரம் தமிழ்முரசில் வெளிவரும்.