02/06/2016 காணாமல்போன எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டியானது  மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிலிருந்து எகிப்து நோக்கிப் பயணித்த எகிப்துக்குச் சொந்தமான விமானமொன்று கடந்த மாதம்  66 பேருடன்  காணாமல் போயிருந்தது.
குறித்த விமானம் காணாமல்போனதற்கான  காரணங்கள்  இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து  கிடைக்கப்பெற்ற  ஒலி அலைகளின் சமிக்ஞைகள்  மூலம் குறித்த விமானத்தின் கறுப்புப்பெட்டியானது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கப்பல் ஒன்றின் மூலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புப்பெட்டியின் உதவியுடன் குறித்த விமானம் பற்றிய பல புதிய  தகவல்கள் வெளிவருமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி