கலக்ஸியும் கந்தசாமியும் நாவல் வெளியீட்டில்

.

என்னை எப்போ தமிழில்  எழுதப்போரிங்க என்று இங்கு வந்திருக்கும்  SBS Renuka Thuraisingham ஒரு முறை கேட்டிருக்கிறார் அப்போ  JKyin ‘kollaipuraththu kathalikal’ பாணி எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன் .அதன் பிறகு அவர் எழுத்துமேல்  காதல் கொண்டேன்.
Wlliam Shakespeare,   George Bernard Shaw இருவரும்  சமூக குறைபாடுகளை கேலிப்பேச்சு அதாவது  satire   மூலம் மக்களுக்கு அவர்கள் காலத்துக்கேகேற்ற பாணியில் எடுத்துரைத்திருக்கின்றனர்உதாரணமாக , Touchstone என்று  oru fool,  Shakespearin As you like it நாடகத்தில்  அப்பப்ப  தோன்றி  மக்களை  சிரிக்க  வைத்தது  மட்டுமல்லாமல்  சிந்திக்கவும்  உதவினார் .
Bernard Shawin Pygmalion நாடகத்தில்  Eliza Doolittle ஒரு  சாதாரண  பூக்காரி. அவளின்  நடை  உடை  பேச்சை  அடியோடு  மாத்தி , London வாழ்  upper class மக்களை  திணறவைக்கிறார்  Professor Henry Higgins.
 Kandhasaamiyum galaxiyum நாவலில்கதாசிரியர்  JK இந்த  satirai கையாளுகிறார் அவரின்   கதாநாயகன் எப்போதும்  அரையில் சாரம்  கட்டி   தோளில்  துவாய் துண்டு போட்டிருப்பார்அதிகாலையில்  வளவுக்கு  போக  சுருட்டு  புஹைப்பார்.   “அய்யய்யோ உலகம் அழியப்போகிது ,” எண்டு  மக்கள்   அலறியடித்து  திண்டாடியபோதும்   தில்லுமுல்லு பண்ணற  சுமந்திரன், “ஏய், மறந்திடாமல்  துவாயை எடுத்து வா,” என்கிறார் . அதன்  ரஹஸ்யம்  thaan என்னஅதுதான் அவர்கள் கலக்ஸியில் போறதுக்கு  magic carpet  போலும்
அதே  நேரத்தில்  அச்சன்  குளத்து  மைதிலி  தின்னவேலி  கடையில்  காலை  உணவு  சாப்பிடுறாள். அவள்  மனசில்  பல  குழப்பங்கள்ஆனா  பச்சைமிளகாயை  கடித்த  மாத்திரத்தில்  அவளுக்கு  ஞானோதயம்  பிறக்கவும்உடனே  தன்   சிநேகிதருடன்  முக  நூலில்  பகிர்ந்து  கொள்ள  நினைக்கவும்எங்கள் அருமையான பூமி  வெடித்து  பொடிபொடியாய்  சிதறுகிறது.


கந்தசாமியும்  சுமந்திரனும்  போடுகிற கோமாளி  விடயங்களை  கந்தர்மடத்தில்  நாங்கள்  பார்த்து  சிரித்திட்டோம்  வயிறு  குலுங்க . அடுத்துநாவலாசிரியர் எங்களுக்கு  பால் மண்டலத்தில் பிரயாணம் செய்ய வாய்ப்பளிக்கிறார்பயணம்  கொழும்புயாழ் A9 பாதையிலும் பார்க்க, ரொம்mmbbba smoothaa, aanaa speed of thought வேகத்தில் விரைகிறது.
கலக்ஸியிலும்  மிஹிந்தர்கள்  பண்ணும்  அட்டூழியங்களை ஜீரணிக்க முடியாது  தவிக்கிறார் கந்தசாமி. அதுகள் இயற்றிய கவிதைகள்  கேட்டு  கந்தசாமிக்கு  வாந்தி  வருது.
பயப்படாதேநாங்கள்  பயணிக்கும்  எதிர்காலத்துக்குள் மிஹிந்தர் வர  மாட்டாதுகள்," என்கிறார் சுமந்திரன் . “ஏன்   எனில்  அவர்கள்  எதிர்காலத்தின்  விளைவுகளை துளியளவும்  பொருட்படுத்துவதில்லை." இதைக்கேட்டு கொஞ்சம் ஆறுதல்  அடைந்தாலும்கந்தசாமி சாரத்தையும்  துவாயைyum  கெட்டியாக  பிடிக்கிறார்.
அங்கேயும்  mental sumanthiran கந்தசாமியை  விட்டபாடில்லை. இவண்டை தொல்லையா அல்லது Mrs செல்வராணி கணவருக்கு கொடுத்த கருக்கு மட்டை  அடியா மோசம்   என்று எனக்கு  oru doubt.
இதிலே  வரும்  விடுப்பு  மீன் பற்றிய  தகவலை  பிரகாராதிரியிலே   வாசித்து    எனக்கு  அன்று  ராத்திரி  துண்டா  நித்திரை  வரல்லே. ஒருவர்  மூளைக்குள்  சென்று  அவர்  நினைக்கும்  அந்தரங்களை  கண்டு  பிடிச்சு  எவ்வளவு  சண்டைகளை  விளைவிக்கிறது  இந்த  விடுப்பு  மீன். இந்தக்கதையில் இருவர்  தத்தம்  மனசில் ஒருவரை  ஒருவர்   கெட்ட  வார்த்தைகளால்  திட்டஇனக்கலவரத்தில் முடிந்தது என்று  வாசித்தேன்இந்த விடுப்பு  மீன்   தான்  அநேக  அபத்தங்களின்  மூல  காரணமோ?
இந்த  நாவலின்  பல  இடங்களில்  ஏதோ பதிலை  தேடுவதும்  பின்னர்  அதற்கேற்ற  கேள்வியை  தெரியாமல்    மிஹிந்தர்களும் சபரி மக்களும்  அலைகின்றனர். “காலமே  ஒரு  அபத்தம் . இந்தப்  பிரபஞ்சம்  ஒரு  அபத்தம் ..."  என்கிறார்  சுமந்திரன். "எல்லாத்தையும்  குழப்புகின்ற  அந்தக்  கேள்வியை மட்டும் ..."
மேலே அவர்  பேச்சை  கேளாமல்  நான் நாவலை மூடி வைத்தேன்.
அன்று  என் சிந்தனை எல்லாம் 2016 American elections மேல் தாவியது. அதை விட   மாபெரும்  அபத்தம் வேறென்னபட்டம்  பதவிக்காக   என்னவெல்லாம்  இரு  தரப்பினரும்  கையாளுகிறார்கள்
அடுத்த  நாட்  காலை  மீண்டும்  கந்தசாமியும்  கலக்ஸியும்  நாவலை  திறந்தேன்எங்கே  அந்த  அச்சன்  குளத்து  பச்சைமிளகாய்  கடித்த    மைதிலி? அவளிடம்  கேள்வி  பதில்  தெரிந்து  கொள்ளலாம்.
அந்த நேரம் பார்த்து CNN channelil Donald Trump mediavukku  interview கொடுத்தார். “I am the 45th American ப்ரெசிடெண்ட் ,” என்று  பெலத்த  குரலில்  கத்திறார்.
Ange யாரோ  ஒருத்தன்  mikkai பிடித்து, “Ok, but  what was the relevant question for your answer?”
Donald Trump திணறுறார்.
அப்போ  அந்தப் paiyan,  “neer eththanaiyaavathu American President?”  என்று  கேட்கிறான். “இந்த கேள்வியை   ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கvum.”
ப்ரெசிடெண்ட் Elect முகம்   சிவந்து  போகிறது .

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. சிரிச்சுக்கொண்டே போகணும் எண்டு. ஆனா இந்த நாவலை வாசித்த பின்னர் நான் அவசரப்பட வேண்டாம் என்று  தோன்றிச்சு . மீண்டும் மீண்டும்  JK  yin படைப்புகளை வாசிக்க சந்தர்ப்பம் கிட்டும் என்ற நம்பிக்கையில், மேலே  போகிறதை கொஞ்சம்  postpone பண்ணியுள்ளேன்.
அவரின்  எழுத்துப்பணி  மேன்மேலும்    உயரட்டும்   என்று  நல்லூர்  கந்தனை  வேண்டுறேன்.

இந்த நாவல் வெற்றி பெற  எனது  வாழ்த்துகள்.

சகுந்தலா கணநாதன் 

No comments: