உலகச் செய்திகள் )


குர்தீஷ் படையினர் உயிருடன் ஐ.எஸ். தீவிரவாதியை சுற்றிவளைக்கும் பயங்கர காணொளி

நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் : சுனாமியின் தாக்கம் அதிகரிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : ஒருவர் பலி

இந்தியாவில் பூமியதிர்ச்சி

 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடையை ரத்து செய்ய முடியாது : உச்ச நீதிமன்றம்

 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள்: டிரம்ப் அதிரடி

இந்திய ரயில் விபத்து : பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் (காணொளி இணைப்பு)





குர்தீஷ் படையினர் உயிருடன் ஐ.எஸ். தீவிரவாதியை சுற்றிவளைக்கும் பயங்கர காணொளி

14/11/2016 ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருக்கும் மொசூல் பகுதியை மீட்கும் நடவடிக்கையில் ஈராக் இராணுவம், குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர், சன்னிபிரிவு அரேபிய மலைவாழ் இன வீரர்கள் மற்றும் ஷியா அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன.
http://video.dailymail.co.uk/video/mol/2016/11/13/3473256891433203309/640x360_MP4_3473256891433203309.mp4
இதன் போது மொசூல் புறநகர் பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஜ.எஸ். தீவிரவாதத்தை சேர்ந்த ஒருவர் சரணடையும் காட்சி இணையத்தளத்தில் பரவி வருகின்றது.
குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் சுற்றிவளைத்த போது குறித்த தீவிரவாதி தன் கைகளை தலைமேல் உயர்த்தியவாறு அச்சத்துடன் முன்வருகின்ற காட்சி படமாக பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சரணடைந்த தீவிரவாதியிடம், சுற்றிவளைக்கும் இடத்தில் வேறு தீவிரவாதிகள் உள்ளனரா? என படையினர் கேள்வியெழுப்பியதற்கு, பதிலளித்த ஐ.எஸ்.தீவிரவாதி, இன்னும் மூன்று அல்லது நான்கு பேர் உள்ளே இருப்பதாகவும், அவர்கள் உயிருடன் இருக்கின்றனர், அவர்களுக்கு சரணடைவதில் உடன்பாடு இல்லையென தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி 
















நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் : சுனாமியின் தாக்கம் அதிகரிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : ஒருவர் பலி

14/11/2016 நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்சில்  பகுதியிலிருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நியூஸிலாந்தின் வடகிழக்கு பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.
சுனாமியின் முதலாவது அலை 8 அடி உயரத்துக்கு தாக்கியுள்ள நிலையில்  சுனாமியின் தாக்கம் தொடர்ந்து காணப்படும் எனவும்  நில அதிர்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

எனவே கடற்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் தற்போதைய நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது. 

 மேலும் குறித்த நிலநடுக்கத்தால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு உயிர் சேதம் அதிரிக்கும் எனவும் அஞ்சப்படுகின்றது.
இதனால் நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்ட்சர்ச்  பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கமானது 185 பேரை பலி கொண்டது. இதன்போது 11 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின.
 இந்த நிலையில் இன்றும் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ரிக்டரில் 7.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 நன்றி வீரகேசரி 











இந்தியாவில் பூமியதிர்ச்சி

17/11/2016 இந்தியாவில் புது டெல்லியில் இன்று அதிகாலை அதிகாலை 4.30 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூமியதிர்ச்சி 4.2 ரிச்டர் அளவில்  பதிவாகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புது டெல்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குறித்த பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 நன்றி வீரகேசரி 













 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடையை ரத்து செய்ய முடியாது : உச்ச நீதிமன்றம்

17/11/2016 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்indian rupeeபான பொது நல வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த அறிவிப்பை தடை செய்ய மறுத்துவிட்டது.

கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோதி, கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி , 500 மற்றும் 1,000 நோட்டுகளை தடை செய்வதாக அறிவித்தார்.

மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

புதிய நோட்டுக்களை பெறுவதற்காக வங்கிகளுக்கு மக்கள் தினமும் வரிசையில் நிற்பதும், ஏடி எம் களில் இரவு பகலாக காத்திருப்பதும் ஒரு வாரத்தை கடந்தும் தொடர்கிறது.

இந்நிலையில்,மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொது மக்களின் அன்றாட வாழக்கையை பாதித்துள்ளதாக கூறி, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் பழைய நோட்டுகளை மாற்ற போதிய அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் பொது நல வழக்குகள் பதியப்பட்டன.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அமர்வில், ஒரு நாளில் ரூ.4,500 மட்டும் எடுக்க முடியும் என்ற அளவை அதிகரிக்கவும், அரசு மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளில் பழைய நோட்டுகளை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

பாதிப்பிலிருந்து மக்கள் மீள என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கையை நவம்பர் 18 ம் தேதிக்குள் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்கை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இந்த வழக்கில் பதிலை பதிவு செய்த அரசு வழக்கறிஞர், ரிசர்வ் வங்கி மூலம், 55,000 கோடி அளவுக்கு புதிய 2,000 மற்றும் 500 மதிப்புள்ள நோட்டுகள் பண புழக்கத்தில் தற்போது உள்ளன என்றும் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.
நன்றி தேனீ














அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள்: டிரம்ப் அதிரடி

அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார் டிரம்ப்.trumph2

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் வரும் 2017 ஜனவரி 20-ஆம் தேதியன்று அதிபராக பதவியேற்க உள்ளார்.

இதனிடையே தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், தான் அதிபராக பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20 அல்லது 30 லட்சம் வெளிநாட்டினரை உடனடியாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், குற்றப் பின்னணியில் இருப்பவர்கள், ரெளவுடிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் என சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைந்து இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று உறுதியளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்பார்த்தே, அவர் அதிபராக தகுதியில்லாதவர் என்று அமெரிக்காவில் பல பிரிவினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.    
நன்றி தேனீ















இந்திய ரயில் விபத்து : பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் (காணொளி இணைப்பு)

20/11/2016 உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே இன்று அதிகாலை  3 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, தடம்புரண்டது. 
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 பேர் பலியானதாக இன்று காலை தகவல் வெளியானது. இந்நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கோரவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா மூன்றரை இலட்சம் மற்றும் படுகாயமைந்தவர்கள் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என  ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்த சுரேஷ் பிரபு கான்பூர் நகருக்கு விரைந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் இவ்விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். 
மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தகோர விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, உத்தரப்பிரதேசம் மாநில கவர்னர் ராம் நாயக்-குக்கு ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜி அனுப்பியுள்ள அனுதாப செய்தியில் 

‘கான்பூர் அருகே இன்று இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ்  ரயில் தடம்புரண்ட விபத்தில் பலர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் வரும் செய்திகளை அறிந்து கவலை அடைந்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த இரங்கல்களை தெரிவியுங்கள் என ஆளுனர் ராம் நாயக்கை கேட்டுக் கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி, இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் எல்லாம்வல்ல இறைவன் அருளட்டும் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், இவ்விபத்து தொடர்பாக அதிர்ச்சி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘பாட்னா-இந்தூர்  ரயில் தடம்புரண்ட விபத்தில் பலர் பலியான செய்தியை அறிந்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி 















No comments: