நடிகை ரேகா மோகன் மர்மான முறையில் இறந்து கிடந்தது.

திருச்சூர் அடிக்குமாடி குடியிருப்பில் மலையாள நடிகை ரேகா மோகன் மர்மான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மலையாளத்தில் உத்தியான பாலகன், யாத்ரா மொழி மற்றும்  நீ வருவோளம் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ரேகா மோகன். மாயம்மா என்ற டிவி சீரியல்களிலும் நடித்தவர். ரேகா மோகன் திருச்சூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர் மோகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக ரேகா மோகன் வெளியே வரவில்லை. துபாயில் உள்ள அவரது கணவரும் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். 

ஆனால் தொலைபேசி அழைப்பை ரேகா மோகன் எடுக்கவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் திருச்சூர் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ரேகா மோகன் வீட்டிற்கு சென்றனர். அங்கு கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரேகா மோகன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். 

போலீசார் அவரதுஉடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரபல மலையாள நடிகை ரேகா மோகன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: