தமிழ் சினிமா


Enakku Veru Engum Kilaigal Kidaiyathu

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

கவுண்டமணி இவரை திரையில் பார்த்தாலே ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷம் தான். 80 மற்றும் 90களில் கவுண்டமணியை மட்டும் நம்பியே பல படங்கள் திரைக்கு வந்து வெற்றி வாகை சூடியது, இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படம் 49 ஓ, அதை தொடர்ந்து இன்று கணபதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.

கதைக்களம்

கவுண்டமணி சென்னையில் ஹீரோ, ஹீரோயினுக்கு கேரவன் வழங்கும் வேலைப்பார்த்து வருகிறார், இது மட்டுமின்றி சைடில் காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கின்றார். அப்படி ஒரு கட்டத்தில் சௌந்தர்ராஜன், ரித்விகா காதலை அவர்கள் குடும்பத்தில் எதிர்க்க, மதுரையிலிருந்து சென்னை ஓடி வருகின்றனர்.
அப்படி வருகையில் கவுண்டமணியை யதார்த்தமாக சந்திக்க பிறகு இவர்கள் காதல் என்ன ஆனது, இருவரையும் கவுண்டமணி சேர்த்து வைத்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கவுண்டமணி ஒன் மேன் ஷோ தான், வயது தான் ஏறியிருக்கிறதே தவிர, அவருடைய காமெடி இன்றைய ட்ரண்டிலும் ஒர்க் அவுட் ஆகின்றது, ஒன் லைன் காமெடியின் என்றுமே இவர் தான் கிங், படத்தில் ஒருத்தரையும் விட்டுவைக்கவில்லை, எல்லோரையும் கலாய்த்து தள்ளிவிட்டார்.
சௌந்தர்ராஜன், ரித்விகா ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்திருப்போம் இவர்கள் நடிப்பை, யதார்த்தமாக ஸ்கோர் செய்வார்கள், அப்படியே தான் இந்த படத்திலும் மிக யதார்த்தமாக நடித்துள்ளனர்.
படத்தின் மேக்கிங் தான் பெரும் பலவீனம், ஏதோ குறும்படம், சீரியல் நியாபகம் தான் பல இடங்களில் வந்து செல்கின்றது.

க்ளாப்ஸ்

வேறு என்ன நம்ம கவுண்டமணி அவர்கள் தான், அவர் மட்டுமே படத்தை தாங்கி செல்கிறார்.

பல்ப்ஸ்

பாடல்கள் மேலும் ப்ளஸாக கவுண்டமணி இருந்தாலும் சில இடங்களில் அவர் வசனம் பேச கஷ்டப்படுவது வயது காரணமாக தெரிகிறது.
மொத்தத்தில் கவுண்டமணியை நம்பி அவருக்காக மட்டுமே ஒரு முறை சென்று வரலாம்.
Music:

நன்றி   cineulagam

No comments: