நட்பு - மணிமுத்து

.


இரவு

முழுவதும் யோசித்தும்

ஒன்றும் எழுதவில்லை!

பிறகுதான்

தெரிந்தது!

நமது நட்பை

ஒருவரியில் எழுதமுடியாதென்று!


உன்னுடைய இடத்தை மட்டும்

பூர்த்தி செய்ய

இதுவரை

யாரும் இல்லை தோழி.

நம் கல்லூரியின் கடைசிநாள்

நீ

என்னை சபித்துவீட்டாய் என நினைக்கிறேன்

கவலை வேண்டாம் தோழி!

உன்னை தவிர வேறுயாராலும்

இப்படி ஒரு நட்பை சொல்லித்தர முடியாது.


காலங்கள்

மிகவேகமாக தான் ஓடிவிட்டது.

ஆனால்

இன்றும் சாலை ஓரக் கடைகளை

பார்க்கும் போது

பேருந்துக்காக வைத்திருந்த காசுகளை

எண்ணி கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு

வீட்டுக்கு பேசியபடியே சென்ற

நினைவுகள் கண்ணீர்துளிகளாய்!


ஒவ்வொரு முறை

ஊருக்கு வரும் போதும்

உன்னை

இந்தமுறையாவது சந்திக்க வேண்டும்

என்றே துவங்கும் பயணம்

ஏனோ இன்றுவரை

சந்திக்காமலே முடிகிறது!

நன்றி

No comments: