இலங்கைச் செய்திகள்


மனி­த­குலம் மீதான அன்பை வெளிப்படுத்தும் ஈகைத் திருநாள் : ஜனாதிபதி

இந்த ஆண்டு இறுதிக்குள் எட்கா உடன்பாடு : இலங்கை - இந்தியா இணக்கம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு

60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழில் மீட்பு

யாழ் - வல்லை பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு

தமிழ் தேசிய கீத விவகாரம் : செம்டம்பர் முதலாம் திகதி  மனுவின் விசாரணை

யோசித பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!

ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலையானார் ; தயா மாஸ்டரின் வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் வெட்டிப் படுகொலை  : மூதூரில் பயங்கரம், மூவர் கைது

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மோதல் ; மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள  முஸ்லிம்களை குடியமர்த்த  செயலணி : 21663 வீடுகளுடன்  அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படும்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ; தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்.!

 பெரும்பான்மையினத்தவர்களால் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்  தாக்கப்பட்டு பலி

 'கடைக்குச் சென்ற போது இராணுவத்தினர் சுடத் தொடங்கினர்" : பெண் ஒருவர் வாக்குமூலம்

 சீனா இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திரமாக்கும்

இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்புகள் தொடரும்

மட்டு. விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

 குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு செல்கிறார் ரணில்!










மனி­த­குலம் மீதான அன்பை வெளிப்படுத்தும் ஈகைத் திருநாள் : ஜனாதிபதி

06/07/2016 ஒரு உன்­னத சமயக் கோட்­பாட்டைப் பின்­பற்றும் இஸ்­லா­மி­யர்­க­ளினால் மனித சமூ­கத்­திற்கு கிடைத்­துள்ள சிறந்த வாழ்க்கைப் பெறு­மா­னங்கள் குறித்த ஆழ்ந்த புரி­த­லுடன் ரமழான் நோன்பை நிறை­வு­செய்து ஈதுல் பித்ர் ஈகைத் திரு­நாளைக் கொண்­டாடும் இலங்­கை­யிலும் உல­கெங்­கிலும் வாழும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு இந்த வாழ்த்துச் செய்­தியை அனுப்பி வைப்­பதில் பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கிறேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.
ஜனா­தி­பதி விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,
இயற்­கையின் அரு­ளான இளம் பிறையைக் கண்டு ஆரம்­பிக்கும் ரமழான் நோன்பு புதிய பிறையின் தோற்­றத்­துடன் நிறை­வு­பெ­று­கி­றது. நோன்பு காலப்­ப­கு­தியில் இஸ்­லா­மிய பக்­தர்கள் சொகுசு வாழ்­வி­லி­ருந்து விடு­பட்டு ஆன்­மீக வாழ்வை நோக்கி வரு­வதன் மூலம் ஒரு முன்­னு­தா­ர­ண­மான சமய அனுஷ்­டா­னத்தில் ஈடு­ப­டு­கின்­றனர். பகல் முழுதும் நோன்­பி­ருப்­பதன் மூலம் ஏழை­களின் பசியின் வலியை தாமும் உணர்ந்­து­கொள்ளும் உயர்ந்த மானிடப் பண்பை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.
உண்­மையில் இது சமத்­து­வத்தை எடுத்­துக்­காட்டும் ஒரு சர்­வ­தேசப் பிர­க­ட­ன­மாகும். உல­கெங்­கிலும் வாழும் இஸ்­லா­மிய சமூ­கத்­தினர் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து ஒரே நோக்­குடன் பேரா­சை­களை தள்­ளி­வைத்து மானி­டத்­திற்கு வளத்­தையும் தெளி­வான பன்­மைத்­து­வத்­தையும் சேர்க்கும் வகையில் பரஸ்­பர மரி­யாதை, சமா­தானம், நல்­லி­ணக்கம், தாரா­ளத்­தன்மை மற்றும் ஏழை­க­ளுக்கு உத­வுதல் என்­ப­வற்றின் ஊடாக மனித குலத்தின் மீதான அன்­பையும் கரு­ணை­யையும் வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.
இறை­வ­னுக்கும் மனி­த­னுக்கும் இடை­யி­லான நெருங்­கிய உறவைக் குறிக்கும் வகையில் உட­லி­னாலும் உள்­ளத்­தி­னாலும் அமைந்த ஆன்மீக தூய்மையை அடையாளப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு அவர்களது பிரார்த்தனைகள் வெற்றியளிக்க எனது நல்வாழ்த்துக்கள்.    நன்றி வீரகேசரி 










இந்த ஆண்டு இறுதிக்குள் எட்கா உடன்பாடு : இலங்கை - இந்தியா இணக்கம்

05/07/2016 பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (எட்கா) இந்த ஆண்டு இறுதிக்குள் கைச்சாத்திட இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள (எட்கா) உடன்படிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் மீளாய்வு செய்து விரைவில் தீர்வு எட்டப்படும் என இலங்கையின் வர்த்தக நிபுணர்குழு தெரிவித்துள்ளது. அதேபோல் உடன்படிக்கை தொடர்பில் ஆராய இந்த மாதம் நடுப்பகுதியில் இந்திய வர்த்தக மற்றும் தொழிநுட்ப நிபுணர்குழு இலங்கை வருகின்றது. 
இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் எட்கா உடன்படிக்கை செய்துகொள்வது தொடர்பில் இரண்டு நாடுகளும் தொடர்ச்சியாக அக்கறை செலுத்திவரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு நாடுகளும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக இணக்கம் தெரிவித்துள்ளன. 
இந்தியா சென்றுள்ள இலங்கையின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமர விக்கிரம தலைமையினால இலங்கை பொருளாதார நிபுணர்குழு இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழிநுட்ப நிபுணர்குழுவை நேற்று புது டில்லியில் சந்தித்தது. இந்த சந்திப்பின்போதே இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் கைச்சாத்திட இணக்கம் கண்டுள்ளனர்.    நன்றி வீரகேசரி 













யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு

05/07/2016 யூலை 5ஆம் திகதி தமிழிழ விடுதலைப் புலிகளால் உயிர் நீத்த கரும்புலிகளை நினைவு கூருவதற்கான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழத்தில் இந் நாளை அனுஷ்டித்திருந்தனர். 
இதன்படி  பல்கலைக்கழக மாணவர் ஒன்று கூடும் பகுதியல் இன்று காலை 10.30 மணிக்கு மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி  செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மாணவர் விடுதி உட்பட பல்கலைகழக வாளகத்தினுள்ளும் மற்றும் சில இடங்களிலும் "தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல் " எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 
குறித்த சுவரொட்டிகளுக்கு தமிழீழ மக்கள் படை எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 நன்றி வீரகேசரி 











60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழில் மீட்பு

05/07/2016 யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை யாழ்.மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தலமையிலான விஷேட பொலிஸ் அணியினர் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்துமுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக யாழ் .மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் எமது விஷேட போதைப்பொருள் தடுப்புப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து குருநகர் பகுதியில் சிறிதளவு கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வெளிமாவட்டமொன்றுக்கு கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கேரள கஞ்சாவினை பருத்தித்துறை பகுதியில் இருந்து பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட கஞ்சாவானது கேரள கஞ்சா என்றும் அதன் மொத்த பெறுமதி அறுபது இலட்சம் ரூபா எனவும் பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார். 
கஞ்சா கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
அத்துடன் தொடர்ச்சியான விசாரணைகளின் மூலம் மேலும் கஞ்சா கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி 












யாழ் - வல்லை பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு

04/07/2016 யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் உள்ள தனியார் ஒருவரது காணியில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ் வெடிபொருட்களை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்ட வல்லை வீதியிலுள்ள நெசவு தொழிற்சாலையொன்றிற்கு பின்புறமாகவுள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்தே இன்றைய தினம் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று குறித்த பகுதியில் உள்ள குறித்த தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்துள்ளார். இதன்போது அவரது காணியில் இருந்த கிணற்றுக்குள் வெடிபொருட்கள் இருந்ததை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த கிணற்றுக்குள் இருக்கும் வெடிபொருட்களை மீட்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் நேற்றைய தினம் இவற்றை மீட்கும் பணியியை விஷேட அதிரடிப்படையினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
இதன்படி கிணற்றுக்குள் இருந்த முழு வெடிபொருட்களும் நேற்றுமாலை நான்கு மணியளவில் கிணற்றுக்குள் இருந்து வெளியெடுக்கப்பட்டன.
இந்நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 11மோட்டார் எரிகனைகளும், 25மோட்டார் பரா எறிகனைகளும், 69 கிரணைட் வகை கைக்குண்டுகளும் அடங்குவதாக விஷேட அதிரடிப்படையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் மீட்கப்பட்ட வெடிபொருட்களை இன்றைய தினம் ஆழிப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அவ் அதிகாரி தெரிவித்திருந்தார். 
இதேவேளை குறித்த பகுதியில் முன்னர் இராணுவ முகாம்கள் இருந்ததுடன் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் அப் பகுதியில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி வீரகேசரி 










தமிழ் தேசிய கீத விவகாரம் : செம்டம்பர் முதலாம் திகதி  மனுவின் விசாரணை

04/07/2016 சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சட்டவிரோதமானதெனக்  கூறி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு செப்டம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 
குறித்த விசாரணையானது உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் அடங்கிய குழு முன்னிலையில் இடம்பெறுமென உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் நீதியரசர் ஈவா வனசுந்தர ஆகியோர் தெரிவித்தனர்.
குறித்த மனுவினை பேலியாகொடையை சேர்ந்த மூவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











யோசித பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!

04/07/2016 முன்னான் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஷபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோசித ராஜபக்ஷ இன்று நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 
சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது   நன்றி வீரகேசரி 









ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலையானார் ; தயா மாஸ்டரின் வழக்கு ஒத்திவைப்பு

04/07/2016 விடுதலைப்புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த உத்தரவை வழங்குவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய தெரிவித்தார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் தொடர்பில், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்து, சட்ட மாஅதிபரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் கிடைக்காததால், அவர் மீதான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிவான் அறிவித்தார்.   நன்றி வீரகேசரி 













பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

07/07/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட நால்வரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கின் விசாரணை இன்று (07) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக குறித்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் வெட்டிப் படுகொலை  : மூதூரில் பயங்கரம், மூவர் கைது

07/07/2016 திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்கா பள்ளிவாசலில் காலை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்  மூவரால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக மூதுார் பொலிசார்  தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை  காலை  6.08 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

நேற்று நோன்புப் பெருநாள்நடைபெற்ற நிலையில், இன்று காலையில்  தொழுகையில் ஈடுபட்டிருந்தவரே வாளால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் சம்பந்தபட்ட மூவரை மூதுார் பொலிசார் கைதுசெய்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
வாள்வெட்டுச் சம்பவத்தில் கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தரே கொலைசெய்யப்பட்டவராவார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்றுகாலை  நேரடியாக சென்று பார்வையிட்ட மூதுார் நீதிமன்ற பதில் நீதிவான்,  வாள்வெட்டுச் சம்பவத்தில் பலியானவரின் உடலை வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி  சட்டவைத்திய  அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு  பொலிசாரைப் பணித்தார்.
இதனையடுத்து உடல் பொலிசாரினால் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கொல்லப்பட்வரை கூரிய வாளால் கொலையாளிகள்  பல இடங்களில் வெட்டியிருப்பது நேரடி விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.
 இச்சம்வத்தில்  தொடர்பு பட்டதாகக் கருதப்படும் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சுல்தான் முகமது றிகாஸ், சுல்தான் முகமது கில்மி, சுல்தான் முகமது சியாம் என்ற மூன்று சகோதர்களே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பலியான நபர், அவரது மைத்துனரான  அப்துல்காதர் இக்கிரம்  என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு 9 மாதம் 8 ஆம்  திகதி கட்டுத்துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நடைபெற்று வந்தநிலையில்  கொலையுண்ட நபர்  3 மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையிலேயே இவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. 
வாள் வெட்டைமேற்கொண்டவர்கள் ஏற்கனவே துப்பாக்கி தாக்குதலில் கொலையானவரின்  மனைவியின் சகோதர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
தங்களது சகோதரியின் கணவரான  காதர் இக்கிராமின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் பெருநாளின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்றமையால் கொடூரமான சம்பமொன்பதால் குறித்த பகுதி பெரும் சோகத்தில் முழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மோதல் ; மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

07/07/2016 பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் பத்து மாணவர்களும் ஒரு ஊழியருமே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனைப் பல்கலைக்கழக பகுதியில் பதற்றநிலை நிலவுவதாகவும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி 










வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள  முஸ்லிம்களை குடியமர்த்த  செயலணி : 21663 வீடுகளுடன்  அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படும்

07/07/2016 வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்களை மீள் குடியமர்த்துவதற்கு விசேட செயலணியொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
அதேவேளை மீள்குடியேற்றம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்திய திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் சுவாமி நாதன் அமைச்சரவைக்கு முன்வைத்த தகவல்கள் குறித்தும்   அமைச்சரவை தனது கவனத்தை செலுத்தியுள்ளது. 
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக மேற்கண்ட அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்தார். 
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில், 
1980 ஆம் ஆண்டுகளிலிருந்து மோதல்கள் காரணமாக உள்நாட்டில் தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம்,  சிங்கள மக்களும் இடம்பெயர்ந்தனர். மோதல் முடிவடைந்த நிலையில் அவர்கள் மீண்டும் மீள்குடியேற்றப்பட்டாலும் தேவையான வசதிகள் வழங்கப்படவில்லை. 
நீண்ட நாட்களாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றுவதற்காக காத்திருக்கும் முஸ்லிம் குடும்பங்களிற்கு 16,120 வீடகள் தேவைப்படுகின்றன. அதேபோன்று சிங்கள குடும்பங்களிற்காக 5543வீடுகள் தேவைப்படுவாதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தமாக 21,663 வீடுகள் நிர்மானிக்கப்பட வேண்டியுள்ளன. 
இம் மக்கள் இடம்பெயர்ந்ததால் அவர்களது வாக்குரிமை, அரசியல் உரிமைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பிறப்பு, இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளல் , பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல்  ஆகியவற்றிலும்  சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளதோடு, அரச சேவைகளை பெற்றுக் கொள்வதிலும் நெருக்கடிகளை எதிர்நோக்க  வேண்டியேற்பட்டுள்ளது. 
எனவே இந்த மக்களை மீள்குடியேற்றும்போது அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர்களான ரிஷாத் பதியூதீன், பைஸர் முஸ்தபா ஆகியோரின் இணைத் தலைமையுடன் மாவட்ட உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய  செயலணியொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
இதேவேளை அரச கரும மொழிக் கொள்கையை வினைத்திறனாக அமுல்படுத்த வருடாந்த கணக்கு ஒதுக்கீட்டில் விசேட ஒதுக்கீட்டை முன்னெடுக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
2020 ஆம் ஆண்டளவில் இலங்கை பிரஜைகள் விரும்பிய தேசிய மொழியில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் அரச மொழிகளை நடைமுறைப்படுத்தவும், 2017 தொடக்கம் அனைத்து அமைச்சர்களுக்கும் தனியான விடயத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வது  தொடர்பில் அமைச்சர் மனோ கணசேன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.    நன்றி வீரகேசரி 











காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ; தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்

07/07/2016 காணாமல் போனோர் தொடர்பிலான பதிவுகளை செய்வதற்கு அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள அலுவலகம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். ஒரே நாட்டினுள் இரு வேறு சட்டங்களின் கீழ் ஆட்சி நடத்துவது நாட்டின் இறைமையை பாதிக்கும் என மஹிந்த அதரவு அணியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். 
இந்த அலுவலகம் மூலமாக சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் தமக்கு தேவையான வகையில் ஆதாரங்களை மாற்றியமைப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 
மஹிந்த ஆதரவு அணியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் மேலும் கூறுகையில், 
இறப்புகளின் பதிவுகள் சட்டமூலம் என்ற பெயரில் அரசாங்கம் காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகம் ஒன்றை உருவாக்கும் வகையில் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. எனினும் இந்த வகையிலான சட்டமூலங்களை கொண்டுவருவது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். 
வடக்கு கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் வகையில் சட்டமூலம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டால்  அதன் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு என்ற தனி சட்டம் ஒன்றும் நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு என வேறுவிதமான சட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை ஏற்படும்.  
ஐக்கிய இலங்கைக்குள் சகலருக்கும் ஒரே விதமான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  எனினும் இரண்டு நாடுகள் என்ற வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது.  அதேபோல் இந்த சட்டமூலத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 
மேலும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு காணாமல் போனோர் பதிவுகளை மேற்கொள்ளும் அலுவலகம் அமைக்கப்பட்டால் அதனூடாக சர்வதேச நாடுகளின் புலம்பெயர் அமைப்புகளினதும் பிரிவினைவாதிகளினதும் நேரடியான தலையீடு ஏற்படும்.  இதன் மூலம் எமது நாட்டிலும் புலம்பெயர் அமைப்புகளின் நேரடியான தலையீடுகள் ஏற்படும். இப்போதும் சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் புலி அமைப்புகளும் எமது நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த அரசாங்கம் நாட்டின் தேசிய விடயத்தில் அக்கறை இன்றியே செயற்படுகின்றது என்றார்.  நன்றி வீரகேசரி












சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்.!

08/07/2016 சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வோங் யீ இரு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு சற்றுமுன்னர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 
குறித்த விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோரை சந்­தித்து அவர் கலந்­து­ரை­யாட உள்ளார்.
இலங்­கையில் சீன முத­லீ­டு­களை அதி­க­ரித்தல் மற்றும் துறை­முக நகர் திட்­டத்தின் முன்­னேற்­றங்கள் உள்­ளிட்ட முக்­கிய விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே அவரின் இலங்கை விஜயம் அமைந்­துள்­ளது. 
குறிப்­பாக சீனாவின் முத­லீட்டில் தலை­நகர் கொழும்பில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற பாரிய வேலைத்­திட்­டங்­க­ளான துறை­முக நகர் திட்டம் மற்றும் 5 நட்­சத்­திர ஹோட்­டல்கள் தொடர்பில் தனது விஜ­யத்தின் போது ஆராய உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
குறிப்­பாக ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உட­னான சந்­திப்பின் போது துறைமுக நகர் திட்டம் குறித்து விஷேடமாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.    நன்றி வீரகேசரி













பெரும்பான்மையினத்தவர்களால் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்  தாக்கப்பட்டு பலி

08/07/2016 கல்குடா பொலிஸ் பிரிவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் பொரும்பான்மையினத்தவர்களால் தலையில் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதையடுத்து கல்குடா பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பிரதான வீதி கல்குடாவைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தங்கராசா வயது (51) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வீட்டின் அருகாமையில்  இருந்த கடையொன்றில் இரு நபர்களுடன் பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பும் வழியில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.
வீதியில் மது போதையில்  நின்ற பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த சிலர் வீதியால் வந்த மேற்குறித்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது பின்னர்  கைகலப்பாக மாறி கொலையில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

மேற்படி சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இது வரை 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை கைதுசெய்ய பொலிசார் பொது மக்களின் உதவியினை கேட்டுள்ளார்.
இதேவேளை இச்சம்பவத்தினை கண்டித்து பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டம் ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை காலை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மேற்கொண்டனர்.  
இது தொடர்பாக  பக்கச்சார்பற்ற முறையில் நீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி ஏ.சீ.எச்.கீரகல தெரிவித்தமையினையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் வருகை தந்து பொலிசார் மற்றும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையினை மேற்கொண்டு நிலைமையினை சுமுகமான நிலைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து கல்குடா பிரதேசத்தில் தனியார் வீடுகளில் இருக்கும் பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தவர்கள் இன்று வெள்ளிக்கிழமை  மாலை 3 மணிக்குள் அவர்களது சொந்தஇடம் அல்லது பாசிக்குடா சுற்றுலா விடுதிக்கு திரும்ப வேண்டும். பிரதேசத்திலுள்ள வீடுகளில் தங்கி இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இது தொடர்பாக பொலிசார் மற்றும் அப்பகுதி கிராம சேவகர்களின் துணையுடன்  வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிசாருக்கும் சிவில்பாதுகாப்பு குழுக்களுக்கும் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையில்  கல்குடா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.
 சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை தாம் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 
இது தெடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படடுள்ளதாகவும் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பாசிக்குடா சுற்றுலா விடுதிகளில் தொழில் புரிவதற்க்காக பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த பலர் கல்குடா மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். இதேபோன்றே மேற்குறித்த நபர்களும் வீடொன்றில் தங்கியிருந்னர். 
இதேவேளை எதிர்வரும் 10 ஆம் திகதி பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றின் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தர இன்னும் 2 நாட்கள்  இருக்கும் வேளை தமிழர் ஒருவர் பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தவர்களினால் அடித்துக் கொல்லப்பட்டமை பிரதேசத்தில் அச்சத்தினையும் பதற்ற  நிலையினையும் ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி












 'கடைக்குச் சென்ற போது இராணுவத்தினர் சுடத் தொடங்கினர்" : பெண் ஒருவர் வாக்குமூலம்

08/07/2016 'சம்பவம் நடந்த அன்று நான் காளிமுத்து என்பவரின் கடைக்கு  வெங்காயம் வாங்கச் சென்றேன். இதன்போது வீதியால் வந்த இராணுவத்தினர் சுடத் தொடங்கினர். அங்கு நின்ற பலருடன் உடனே அந்தக் கடைக்குள் புகுந்து விட்டோம்.   இராணுவ வீரர்களில் ஒருவர், என்னை வெளியே வருமாறு அழைத்து தப்பி ஓடுமாறு கூறினார் என ஒன்பதாவது நாளாக சாட்சியமளித்த  குமாரபுரத்தைச் சேர்ந்த 49 வயதுடய லெட்சுமி என்ற பெண் தெரிவித்தார்.
திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரத்தில் பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையில்,  இன்று ஒன்பதாவது நாளாகவும் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன. 
இன்றைய சாட்சி விசாரணைகளில் நான்கு பேர் சாட்சியங்களை வழங்கினர்.
இங்கு மேலும் சாட்சியமளித்த ஜேசுதாசன் லெட்சுமி,
'நான்  எமது கிராமத்தில் உள்ள காளிமுத்து என்பவரின் கடைக்கு வெங்காயம் வாங்குவதற்காக சென்றேன்.  அங்கு மேலும் பலர் நின்று கொண்டிருந்தனர். இராணுவத்தினர் துப்பாக்கி சூடு மேற்கொள்வதை கண்ட பலரும்  கடைக்குள் புகுந்து கொண்டனர். நானும் கடைக்குள் புகுந்தேன். 
இதன்போது கடைக்குள் இருந்த பலரையும் இராணுவத்தினர் சுட்டார்கள்.  அங்குவந்த இராணுவ வீரர்களில் ஒருவரான குமார என்ற இராணுவ வீரர்  கடைக்குள் இருந்த என்னை கையால் அசைத்து கூப்பிட்டார். நான் அவரிடம் சென்ற போது என்னை தப்பி ஓடுமாறு கூறினார். இதனால்தான்  வெடிகாயத்துடன் நான் தப்பித்தேன். அவரைத் தவிர ஏனையவர்கள் துப்பாக்கி சூட்டை நடத்தினார்கள். அதில் பலர் கொல்லப்பட்டார்கள். சிலர் காயப்பட்டார்கள் என்றார்.
இராசையா நாகேஸ்வரி (66) என்பவர் சாட்சியமளிக்கையில், 'நான் வீதியால் சென்று கொண்டிருக்கையில் அவ்வீதியால் வந்த முஸ்லிம் நபர்கள் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் என கூறி அவசரமாக சென்றனர். நான் உடனே அருகில் இருந்த அழகுதுரை லெட்சுமி என்பவரது வீட்டிற்குள் புகுந்தேன். அங்கு வந்த இராணுவத்தினர் சுட்டனர். இதில் லெட்சுமி சுடப்பட்டு இறந்தார். அதனை நான் நேரில் கண்டேன். நான் பதற்றமடைந்தமையால் சுட்டவர் யாரென்று அடையாளம்  தெரியவில்லை. எனக்கும் இச் சம்பவத்தில் காயம் ஏற்பட்டது என்றார்.
இவர்களுடன்  சிற்றம்பலம் கோணேஸ்வரன்(27), நாகராசா சுதாகரன்(28) என்பவர்களும் சாட்சியமளித்தனர். 
மேலும் விசாரணைகள் தொடரவுள்ளன. விசாரணைகளில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், சிவில் கடமையில் சம்பவ தினத்தன்று இருந்த அதிகாரிகளும்  சாட்சியத்திற்கு அழைக்கப்பட வுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   நன்றி வீரகேசரி





சீனா இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திரமாக்கும்
09/07/2016 சீனாவின் கடற்போக்குவரத்துத் துறையுடன் இலங்கை இணையும் பட்சத்தில் இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக இலங்கை உருவாகும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேன் யு தெரிவித்தார்.
நேற்று (08) வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இடம்பெற்ற சந்திப்பு நிறைவுபெற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனை வேன் யு தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் 5 வருடங்களில் கடல் போக்குவரத்தின் அபிவிருத்தியை சீனா முன்னெடுக்கவுள்ளதாகவும், அதனால் இலங்கையை இந்து சமுத்திரத்தின் கடல் போக்குவரத்து கேந்திரமாக மாற்றுவதற்கு சீனா தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குமென அவர் மேலும் தெரிவித்தார். 
நன்றி வீரகேசரி





இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்புகள் தொடரும்
10/07/2016 இலங்­கையின் இறை­யாண்மை மற் றும் சுயா­தீனத் தன்­மையைப் பாதிக்­காத வகையில் அனைத்­து­வி­த­மான ஒத்­து­ழைப்­ பு­க­ளையும் சீனா தொடர்ந்தும் வழங்கும் என சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வோங் யீ பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான சந்­திப்பின் போது உறு­தி­ய­ளித்­துள்ளார்.
உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கையை வந்­த­டைந்த சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வோங் யீ நேற்று சனிக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்துகலந்­து­ரை­யா­டினார்.
மேலும் இலங்­கைக்கும் சீனா­விற்கும் இடை­யி­லான பரஸ்­பர புரிந்­து­ணர்வு மற்றும் வர­லாற்று தொடர்­பு­களை பாது­காக்கும் வகையில் அனைத்து செயற்­பா­டு­க­ளையும் சீனா தொடர்ந்து முன்­னெ­டுக்கும் எனவும் சீன வெளி­வி­வ­கார அமைச்சர் இதன் போது தெரி­வித்­துள்ளார். மேலும் இலங்­கையின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியில் தொடர்ந்தும் சீனா ஒத்­து­ழைப்­புடன் செயற்­படும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.
அத்­துடன் இலங்­கையின் பாது­காப்பு மற்றும் நீர்­வளம் என்­ப­வற்றில் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் ஏற்­க­னவே சீன அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தி திட்­டங்­களைத் தொடர்­வ­தற்கும் தேவை­யான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் செய்­துள்ள நிலையில் பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பின் போது இந்த விடயம் குறித்தும் இரு தரப்பு பேச்சு வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நீண்ட கால தொடர்­பு­களை தொடர்ந்தும் மேம்­ப­டுத்த இவ்­வா­றான பரஸ்­பர கலந்­து­ரை­யா­டல்கள் அவ­சியம் எனவும் கருத்­துக்கள் பரி­மாற்­றப்­பட்­டுள்­ளது. இடையிலான நீண்ட கால தொடர்புகளை தொடர்ந்தும் மேம்படுத்த இவ்வாறான பரஸ்பர கலந்துரையாடல்கள் அவசியம் எனவும் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி














மட்டு. விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி


10/07/2016 290 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உள்ளூர் விமான சேவையையும் ஆரம்பித்து வைத்தார். 
புதிதாக அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையில் எம்.ஏ.60 விமானத்தின் மூலம் வந்து இறங்கிய ஜனாதிபதிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சரகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பளித்தனர். 
இதனையடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வெற்றிலை கொடுத்து வரவேற்றார். 
அதன் பின்னர் விமான நிலையத்துக்கான நினைவுக் கல்லைத் திரை நீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி விமான நிலையத்தினையும் திறந்து வைத்தார். 
1958 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமான நிலையம், 1983ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி விமான சேவைகள் அமைச்சினால் விமானப் படைக்காகவும் சிவில் பாதுகாப்புக்காகவும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி












குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு செல்கிறார் ரணில்!


10/07/2016 கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா மலைக்கோயிலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிபாட்டுக்காக விரைவில் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அவர் 2002 ஆம் ஆண்டு மலைக்கோயிலுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி