.
உலகம் அழகிய போர்வையினால் போர்த்தப்பட்டுள்ளது, இங்கு விசித்திரமான, அதிசயமான பல இடங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நாம் காணாவிட்டாலும் கலைஞர்களின், கவிஞ்ஞர்களின் மனக்கண்ணில் படத்தவறுவதில்லை.
எடுததுக்காட்டாக சங்கரின் 'எந்திரன்' படப்பாடலில் வருகின்ற 'கிளிமாஞ்சாரோ' மிகவும் அழகிய அதிசயமான, மிகப் பெரிய நகரும் பனிமலை. அது இற்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுப்பதிவுகளை கொண்ட பழமைவாய்ந்த ஒன்றாகும்.
இது எங்கு அமைந்திருக்கின்றதென்றால், புவிமத்திய கோட்டுக்கு அண்மையில், தான்சான்யா மற்றும் கென்யாவின் தேசிய பூங்காவாக வெண்ணிற வானத்தை உருக்கி வார்த்த பளிங்கு கண்ணாடிபோல் அழகாகக் காட்சி தருகின்றது. அதனால்தான் கவிப்பேரசு ஐஸ்வரிராய்கே ஐஸ் வைச்சிட்டாராக்கும். இதில் இன்னொரு விடயம் என்னவெனில் ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் இருக்கும் இப்பனிமலை மெது மெதுவாக நகரும் தன்மையுடையது. இதன் உச்சியில் ஏறுகின்றவர்களுக்கு அந்த உணர்வினை அறியக்கூடியதாக இருக்கிறதாம்.
இந்த கிளிமாஞ்சரோவின் வசீகரத்தன்மை ஆறறிவு கொண்ட மனிதர்களை மட்டும் ஈர்க்கவில்லை, மேலாக ஐந்தறிவு கொண்ட ஜீவன்களையும் கொள்ளை கொண்டுள்ளது. அதனால்தான் இங்கு பலலெட்சக்கணக்கான வனஜீவராசிகள் நிறையவே சந்தோசமாக உலவித்திரியும் சுதந்திர பூங்காவும் கூட இருக்கிறதாம்.
இருப்பினும் நம்ம ஆளுகள் சூழலுக்கு செய்கின்ற அநியாயங்கள் மீண்டும் விட்டெறியும் பந்துவோல் நம்மையே வந்து சேருகின்றன. காலநிலையில் ஏற்ப்படடுவரும் மிகப்பாரிய மாற்றங்கள் காரணமாக இந்த அழகிய கிளிமாஞ்சாரோ மலைக்கனி மாஞ்சாரோ உருகி குறையத் தொடங்கி வருகிதாம். அப்படியானால் இவற்றை அண்டி வாழ்கின்ற தொல்லை கொடுக்காத ஐந்தறிவு ஜீவன்களின் நிலை என்னவாகும்? அழகு அழகாக இருக்கும்வரை ஒன்னுமில்லை, அது ஆபத்தாக மாறினால் எல்லாம் கேள்விக்குறிதான்.