நாநலம் - நானிலம் இன்புறும் சொல்லாடற் களத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்!

.
இனித்தமுடையவர்க்கு, வணக்கம்.
இராமன் அருள், ஆஞ்சனேயன் கருணை, கம்பன் ஆசி அனைத்தும் ஒன்றுகூட,
இவ்வாண்டில், கழகம் தனது பத்தாவது அகவைக்குள் பாதம் பதிக்கின்றது.
இயலும் இசையும் சார்ந்தபல நிகழ்வுகளை அரங்கேற்றியிருந்தோம்.
இதுவரையும் தாங்களளித்த பேராதரவாலேயே இவைகைகூடின.
இனியும் தங்களின் அன்பு தொடரவேண்டும் என்பது எம் அவா.
இவ்வருடத்திலிருந்து புதியதோர் நிகழ்வும் இணைகின்றது.
இகத்தில் பெருஞ்செல்வம் நாவன்மை என்கிறது குறள்,
இனிதாய் ஏற்று நாநலம் என்று பெயரிட்டுள்ளோம்.
இது உங்கள் அன்பு இளவல்களின் இயல் விழா!
இமையோரும் அறிஞரும் மகிழ்ந்து போற்றும்
இயற்றமிழ் வித்தகமிலங்கும் தலைமையில்,
இறைவிகள் ஐவர் இனிக்கப் பேசுவர்,
இன்புற்று மகிழ இரசனை மிகுந்த
இளைஞரும் இல்லறத்தாரும்,                                                
இன்முகப்பெரியரும் வருக!
இனிதே அழைத்தோம்,                                          
இன்சொல் மாந்த,
இசைந்து வாரீர்!
இன்பமேசூழ்க
இங்ஙனம்,

       -கம்பன் கழகத்தார்-