சிட்னி தமிழ் அறிவகம் கொடி தினம் 2016 25 06 2016

.

சிட்னி தமிழ் அறிவகம்  கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட  நிகழ்வை  நினைவு கூர்ந்து  வருவதை  தாங்கள்  நன்கு  அறிவீர்கள்.
ஈழத்தமிழர்களின் அறிவாலயமாக விளங்கிய யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை,  இவ்வருடமும் நினைவு கூர்ந்து கொடிதின நிகழ்வை நடாத்த எமது நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. இந்த நிகழ்வு ஜூன் மாதம் 25ஆம் திகதிசனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Homebush Public School மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், சிறப்புரையும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுக்கு வருகை தந்து,  ஞாபகார்த்த கொடி விற்பனையிலும் பங்குபற்றுமாறு உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
காலம்  : 25 . 06. 2016 – சனிக்கிழமை,  மாலை 5.30 மணி.
இடம்   :  Homebush Public School,     Rochester Street,        Homebush
                உங்களை மண்டப வாசலில் வரவேற்க காத்திருக்கும் எமது நிர்வாகக் குழு உறுப்பினரிடம் உங்களது வருகையை அறியத்தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அச்சுதன் மணிமாறன்
செயலாளர்          
தொலைபேசி: 0415 840 058 : அறிவகம் - 9635 5748