ஏனையகவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 13

.
கிருஷ்ணலீலை
Add caption

எனது நாட்டிய நாடகம்  1975 இலெ தயாரிக்கப்பட்டது. இந்த நாடடிய நாடகத்திற்கு திரு பந்துல ஜெயவர்த்தன எழுதிய நீண்ட விமர்சனத்தின் ஒரு பகுதியை இங்கு தருவதன் மூலம் புதுமைக்கும் பழமைக்கும் உள்ள உறவை அவர் எடுத்து ஆராய்ந்து பலரின் சிந்தனையைக் தூண்டுவதாக அமைந்துள்ளது.

சரியான பாதையிலே

"பழமையானால் மட்டுமே
கவிதைகள் உயருமா?
புதியவை என்பதால்
மாத்திரம் இழியுமா?
வாசமக்களே
தயக்கமேன்
அறிவினால் ஆய்ந்து
மேன்மையை உணருங்கள்"

தமிழ் சிங்கள இலக்கியத்துக்கு எழுச்சியும் உந்தலும் தந்த வடமொழி நாடக மகாகவி காளிதாசனின் கூற்று இது. உண்மையான கவிதைக்கும் பிற கலைகளுக்கும் உரைக்கல்லாக அமைவன பழமை புதுமை என்னும் பண்புகள் அல்ல. கலையின் தரத்தை நிர்ணயிக்கும் பண்புகள் வேறுவகையானவை. இதுவே காளிதாசனின் தீர்க்கமான முடிவு. மரபாளர்களால் இன்று போற்றி புகழப்படும் காளிதாசன் அன்று தான் எழுதிய புதிய கவிகளின் அங்கீகாரத்துக்காக வாதாடினான். அன்று அவனை எதிர்த்த பழமை பிரியர்களுக்கு எதிராக குரல் கொடுத்தான். இதனால் பழமைக்கும் புதுமைக்கும் இடையே எழும் பிரச்சனையை அவனால் நன்குஉணர முடிந்தது.



இப் பிரச்சனைகள் எக்காலத்திலும் எழக் கூடியவையே. தனது காலத்து மக்களுக்குப் பயன் படும் கருத்துள்ள ஆழமான கலையை படைக்க நினைக்கும் எக் கலைஞனும் எதிர் நோக்க வேண்டிய பிரச்சினை இது. மரபைப் பேண வேண்டுமா? அல்லது தூக்கி எறியப்பட வேண்டுமா? இவ்விரண்டு எதிரும் புதிருமான வழிகளுக்கு இடைப்பட்ட பாதை  ஒன்றுண்டா?
கண்ணன் - யோகினி ரத்தினசபாபதி, தாய்- ஆனந்தராணி பாலேந்திரா 

இன்றைய சிங்கள, தமிழ் கலைஞர்  யாவரும் முன் என்றும் இல்லாத வகையில் இப்பிரச்சினையை எதிர் நோக்க வேண்டியவர்களாகின்றனர்.

பழமையான கலை மரபு வளம் கொண்ட ஈழத்தின் இவ்விரு சமூகங்களும், புதியதொரு சமுதாயத்தையும் அதற்கு இசைவான புதியதொரு பண்பாட்டையும் உருவாக்கும் பொதுவான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இப்பண்பாடு முன்னைய குடியேற்ற ஆட்சியினின்றும் மீட்ட புதிய சுதந்திர யுகத்திற்கு ஏற்றதாகும். சிங்கள தமிழ் கூட்டு முயற்சியினால்  உருவானதாகவும் அமைத்தல் வேண்டும்.

இவ்வாறான புதிய கலாசாரத்தை உருவாக்கும் பாதை பழமையையும்  புதுமையையும் தேவைக்கேற்ற வகையில் சாதூரியமாக இணைப்பதேயாகும். ஏனெனில் எமது பழமை செழுமையானது. அதனை ஊதாசீனம் செய்து விட முடியாது. ஆனால் அது சமகாலத் தேவைகட்கு முற்றாக ஏற்றதாகவும் இருக்க முடியாது. இந்நிலையில் கலைஞனின்  பணி மிக பொறுப்பானதாகவும், கடினமானதாகவும் ஆகின்றது. பழமையையும் புதுமையையும் எவ்வாறு, எந்த அளவில் எந்த வகையில் இணைப்பது என்பதற்கு கலைஞன் தரும் விடையே கலைகள் சமூகத்திற்கு ஆற்றும் பணியை எடுத்துக் காட்டக் கூடியது.

கண்ணன் - யோகினி ரத்தினசபாபதி,  வேடன் - உஷா நாதன் 

எமது சமூகத்திற்கு வேண்டிய, பயனுள்ள கலை வடிவங்கள் தனியொரு சமூகத்தினராலேயே மட்டும் உருவாக்க கூடியன வல்ல, என்னும் திடமான நம்பிக்கை, சிங்கள நாடகாசிரியன் என்ற வகையில் எனக்கு உள்ளது.

புதிய பரிசோதனையாளர்களில் திருமதி கார்த்திகா கணேசர் முக்கியமானவர். அவரது முயற்சிகள் கூர்ந்து கவனிக்கத்தக்கன. பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் தெளிவும், அதற்கான சரியான தீர்வுக்கான பாதையைக் தேர்ந்தெடுக்கும் நுண்ணறிவும் அவரிடம் உண்டு. அவரது நாட்டிய நாடகங்களில் ஒன்றான இராமாயணம் புதுமையையும் பழமையையும் அர்த்த நிறைவுடன் இணைக்கும். போற்றத்தக்க முயற்சி.

சில வாரங்களுக்கு முன் கார்த்திகாவின் புதிய நாட்டிய நாடகம் "கிருஷ்ண லீலா" வை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வேற்றுமையில் ஒற்றுமை - பழமையையும், புதுமையையும் இணைக்கும் கார்த்திகாவின் பாணியை "கிருஷ்ணா லீலாவிலும்" நாம் காண  முடிந்தது. கண்ணனின் சாகசங்களை காட்டும் கதை எனினும், கார்திக்காவின் திறமை தெற்றென தெரியும் படியான நடன அமைப்புகளும், மற்றும் பாரதியாரும்  அவரின் சேவகனாக கண்ணன் போன்ற அம்சங்களும் "கிருஷ்ணா லீலா" விலும்  புதுமையை காட்டின.

கடவுளைச் சேவகனாக காட்டியது ஒரு வழியில் உடல் உழைப்பின் மகிமையையும் ,பெருமையையும் உணர்த்தியது போலாயிற்று.

இவற்றில் இருந்து திருமதி கார்த்திகா கணேசர் சரியான பாதையிலே  செல்வது தெளிவாகின்றது. அர்த்த நிறைவுள்ள தமிழ் நாடக மேடை ஓன்று தோன்றுவதற்கு இவருடைய பணிகளும் பெரிதும் துணை நிற்கும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு புதிய ஈழத்தின் புதுப் பண்பாட்டை உருவாக்கும் பணியில் தமிழ் நாடக  மேடையும் பங்கு கொள்ளும் என்பது நிச்சயம்.

ஷீலா , கார்த்திகா 

வீரகேசரி - 29.06.75
கிருஷ்ண லீலா - ஒரு நோக்கு - ச கேசவன்

தமிழ்க் கலைகளின் பழமை பேணும் கருத்து ஆதிக்கம் புரிகின்ற சூழலிலே புதுமையான பயன் நிறைந்த சிறந்த கலைப்படைப்புக்கள் அளிக்க முயன்றுவரும் கலைஞர்கள் , கலை ஆர்வம் கொண்ட இரசிகர்களாலும், திறனாய்வாளர்களாலும் உன்னிப்பாக கவனிக்கப் படுவது இயல்பே. சென்ற ஆண்டிலிருந்து தமிழ் நாட்டிய துறையில் ஒரு புதுமை பூக்கத்தொடங்கி உள்ளது.

திருமதி கார்த்திகா கணேசர் தனது முதற் தயாரிப்பான  "இராமாயணம்" நாட்டிய நாடகத்தை தொடர்ந்து அவரது இரண்டாவது தயாரிப்பாக இரண்டு குறு நாட்டியங்களை அண்மையில் "லயனல் எவனட்" அரங்கத்திலே மேடையேற்றி இருந்தார்.

கிருஷ்ண லீலா சிறுவனிலிருந்து மன்னன் வரை கண்ண பிரான் செய்த சாகசங்களில் முக்கியமானவற்றை இது காட்டியது. புராணக் கதை மூலம் கூட ஒரு புதிய செய்தி அளிக்கப்பட்டது. நாடகத்தின் கடைசி காட்சியில் நவீன கவிஞன்   தோன்றி ஆடினான். அவன் பாடும் பாடலே அந்தச் செய்தியை தாங்கி வந்தது. கண்ணனை கண்ணனாகக் கண்ட நேற்றைய கவிஞன் இன்று கண்ணனை தன் சேவகனாகவும் காண்கிறான். பாரதியின் கவிதையுடன் தொடங்கிய இன் நாட்டியம் கண்ணனின்  லீலைகளைப் பரதநாட்டிய பாணியில் விபரித்து செல்கிறது. வெண்ணை திருடி திரியும் கண்ணன் வெண்ணை உண்ட பின் குழந்தைக்கே உரிய தன் குறும்போடு உறங்கும் அன்னையின் முகத்திலும் எஞ்சியதை பூசிவிட்டு ஓடுவது, இது போலவே இடி முழக்கத்துடன் மழை பொழிகையில் கோபியரையும் கோபாலர்களையும் கண்ணன் காத்தது , கங்கையில் நீராடும் பெண்களிடம் துகில்களை களவாடுவது. அருச்சுனனுக்கு தேரோட்டி கீதோபதேசம் செய்தல் முதலியனவும் எம் மனதை விட்டு அகலாது - ச கேசவன்.

கண்ணனின் பலதரப்பட்ட லீலைகளைச் சித்தரிப்பதோடு, இன் நூற்றாண்டின் மாபெரும் கவிஞரான சுப்ரமணிய பாரதியார் கண்ணனை சேவகனாக கண்டதையும், முதற் காட்சியாக காட்டினேன் இறுதியாக தாயின் சாபத்தால் கண்ணனின் குலம் மது மயக்கத்தினால் அழிந்து விடுகிறது. கண்ணனும் அம்பினால் அடிபட்டு இறந்து போகிறான். கண்ணனும் ஒரு மனிதனே என்பதை  வலியுறுத்தவே கண்ணன் இறப்பை காட்டினேன்.

பாரதியின் சிந்தனையிலே கண்ணன் சேவகனானால், இனிமேல் தோன்றும் புதுயுக கவிஞனின் சிந்தையில் கண்ணன் என் மாதிரி தோன்றுவாரோ என ஒரு நவ யுக கவிஞன் மூலம் கேட்க வைத்தேன்.

"கண்ணனைக் கண்டோம் பாலகனாக
கண்ணனைக் கண்டோம் காலிங்க நர்த்தகனாக
கண்ணனைக் கண்டோம் கன்னியர் கொஞ்சும் காதலனாக
கண்ணனைக் கண்டோம் விந்தை செய்யும் வாலிபனாக
கண்ணனைக் கண்டோம் கீதை சொல்லும் நாயகனாக"

 அன்று மனிதன் பார்த்த பார்வை அப்படி இருக்கு
இன்றைய மனிதன் (பாரதி) பார்க்கும் பார்வை இப்படி இருக்கு (சேவகன் சுட்டிக்காட்டப் படுவது )
நாளைய மனிதன் பார்க்கும் பார்வை எப்படி இருக்குமோ
எப்படி இருக்குமோ? எப்படி இருக்குமோ?

Tribute July 26 1975 - K S Sivakumaran

Krishna legend. The libretto was from Subramania Bharathi. THe message appears to be that interpretation on legendry themes will vary from time to tim,es of changing social patterns. Reason and scientific thinking. In the last analysis will win - is theme.

Apart from teh novelty of the content the dancing of the little children themselves were enjoyable.

Creative dancing - G J - SUnday Times 20.7.75

Karthika was obviously trying to find some creative dancing in the oriental indian that children of a young age could participate in freely with understanding and not something that would be beyond the ?????? of their understanding. So what she has attempoted is a some what new approach to the Tamil dance - The blending of the tradition with the modern idiom