ஓர் இசைப் பாரம்பரியம் மேடை ஏறுகிறது - பராசக்தி சுந்தரலிங்கம்

.

 லக்ஷ்மி நுண்கலைக் கழகத்தின் ஆதரவிலே இன்று மார்ச்  12'ம் திகதி 2016 -சிட்னி பரமட்டா ரிவர் சைட் அரங்கிலே        செல்வி மதுவந்தி  பகீரதனின் இசைஅரங்கேற்ற  நிகழ்வு    பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தது

திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா என்றால் இலங்கையிலே தெரியாதவர்கள் இருக்க முடியாது. இலங்கையின் எம் எஸ் சுப்புலட்சுமி என்று இசை ;உலகிலே பெயர் பெற்று ஒரு சங்கீத பரம்பரையைத் தோற்றுவித்தவர்.--அவரின் சகோதரி ;தனலக்ஷ்மி   சண்முகராஜாவும்  சிறந்த பாடகி. இருவருமே இலங்கை வானொலிக் கலைஞர்கள்.இவர்களின் வாரிசு செல்வி மதுவந்தி -
-தனலக்ஷ்மியின் மகள் பாடகி கேதீஸ்வரி பகீரதனின்   மகள்.இவர் .
.இந்தப் பாரம்பரியத்திலே வந்த.மதுவந்தி நாம் கேட்டு மகிழ்ந்த அந்த இசை உலகை மீண்டும் எங்களுக்கு  வழங்கி மகிழ்வித்துவிட்டார்  என்பது பெருமையாக இருக்கிறது
இதிலே வியப்பொன்றும் இல்லை !  மதுவந்தி  என்னும் அழகிய ராகத்தைப் பெயராகக் கொண்டுள்ள பாடகி வேறு எப்படி இருக்க முடியும் !

  மதுவந்தியைச் சிறுவயதுமுதலே  அறிந்திருக்கிறேன்.;மாதந்தோறும் நடைபெறும் சிவயோக சுவாமிகளின் குரு பூசைக்கு ;தாயார் தந்தையார் ;மற்றும்; தம்பியாருடனும்; தவறாமல் வருவா - தாயார் நற்சிந்தனைப் பாடல்களைப் பாடும்போது பிள்ளைகள் ; இருவரும் சிலவேளைகளிலே  சேர்ந்து பாடுவார்கள் -சமீப காலங்களிலே மதுவந்தி;தனியாகவும்  பாடத்.தொடங்கி விட்டா.அப்பொழுதுதான் மதுவந்தியின் கணீரென்ற ;இனிமையான குரலைக் கேட்கும் வாய்ப்பு எமக்கும் ஏற்பட்டது

இசை உலகிலே இக்குழந்தைக்கு நல்லதோர் எதிர்காலம் இருக்கிறது என்பது அன்றே;உறுதியாகி விட்டது .
மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேணுமா.? இன்று இந்த அரங்கேற்ற நிகழ்வு வெற்றிகரமாக  அமைவதற்கு  சிவயோகசுவாமிகளின்;பூரணமான அருளும் சேர்ந்து ;விட்டதுசுவாமிகளின் பாடல்களையே பாடிப் பாடி வளர்ந்த குழந்தையல்லவா!!!!

இன்றைய நிகழ்ச்சியிலே தமிழிசையே பிரதானமாக விளங்கிய காரணத்தால் எமக்கும்  இரட்டிப்பு மகிழ்ச்சி  என்பது உண்மை
இசைக்கு மொழி இல்லை -அது மொழியைக் கடந்தது -- இது எமக்குத் தெரிந்திருந்தாலும் தாய்மொழியிலே பாடல்களைக்கேட்டு கருத்தோடு பாடலை ரசிப்பதில் தனிச்சுவை உண்டு என்பதை மறுக்கமுடியாது

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் பாடலொன்று இவ்வேளையில் நினைவுக்கு வருகிறது

பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.


இந்தப் பாடல்வரிகள் இன்றைய அரங்கேற்றத்திற்குப் பொருந்திவருவதை நாம் உணர்ந்தோம் தனித் தமிழ்ப் பாடல்களையே பாடி மதுவந்தி ரசிகர்களைத் தம் வசப் படுத்திவிட்டார் என்று நாம் பெருமைப்படலாம்  இத்தனைக்கும்  மதுவந்தி அவுஸ்திரேலியாவிலே பிறந்து வளர்ந்த பெண் -  -இவர் சிட்னி மக்குவாரி பல்கலைக்கழக மாணவி -தமிழ்மொழி இவர் நாவிலே சரளமாக வருகிறது !!!!!

 தாயார் திருமதி கேதீஸ்வரி பகீரதன் அவர்களே மதுவந்திக்குக்  குருவாக அமைந்தது அவருடைய அதிர்ஷ்டம்   

 திருமதி லலிதா சிவகுமாரன் அவர்களிடம் மேலும் பயிற்சி  பெற்றுத்   தமது திறமையை வளர்த்துக்கொண்டார்   

இவருடைய இன்றைய கச்சேரியிலே பாபநாசன் சிவன் அவர்கள் முருகன் சிவன் ஆகியோர் மீது பாடிய  பல பாடல்கள் குரு லலிதா சிவகுமார் இயற்றிய    பாடல்கள்  சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் சுப்பிரமணிய பாரதியார் யாழ்பாணம் சிவயோக சுவாமிகள்     ஆகியோரின் பாடல்கள் இடம் பெற்றன 


எல்லாமே இனிய தமிழ்ப் பாடல்கள் -  இதனால்  தான் ''தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ''என அப்பரடிகள் பாடினாரோ என எண்ணத் தோன்றுகிறது  !
பாபநாசம் சிவன் அவர்கள் ஆபோகி ராகத்தில் இயற்றிய தஞ்சம் என்றாலே என்னும் வர்ணத்துடன்  மதுவந்தி தனது கச்சேரியை ஆரம்பித்தது மிகப் பொருத்தமாக இருந்தது 

தொடர்ந்துவந்தது திருமதி லலிதா சிவகுமார் அவர்கள் இயற்றிய கம்பீரநாட்டையில் அமைந்த  சித்திவிநாயகனே என்னும் துதி
 பாபநாசம் சிவனின் இரண்டு பாடல்கள் சரஸ்வதி   மற்றும் வா சரவண பவா கரகரப்பிரியா பிலஹரி ஆகிய ராகங்களில் தொடர்ந்தன --

சுந்தரமூர்த்தி நாயனாரின்  தேவாரம்  '' நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கை தொழுவேன் '' பந்துவராளியிலே தொடர்ந்தது 
 சரவணபவனே குகனே சண்முகனே  மற்றும்  பார்வதி நாயகனே    என 
 மத்தியமாவதி   ஷமுகப்பிரியாவிலே மீண்டும்  பாபநாசன் சிவனைக் கேட்டு மகிழ்ந்தோம் 

இடைவேளையின் பின்னர்  முருகா முருகா   என்னும்  பாரதியாரின்  பாடலைத்  தொடர்ந்து 
   லலிதா சிவகுமார் காம்போதி ராகத்தில் இசைஅமைத்த கந்தா கதிர்காம முருகா குஹா என்னும் பல்லவியை   மதுவந்தி  பல      ராகங்களிலே பாடித் தனது வித்துவத்தைக் காட்டி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்!  பதின்நான்கு ராகங்களை அவர்  பாடியதாகக் கூறியபோது வியப்படையாமல் இருக்க முடியவில்லை --சாமா கல்யாணி ஹிந்தோளம் கேதாரம் ரஞ்சனி ஆனந்தபைரவி    ஹம்சானந்தம் நாட்டை விஜயநகரி சாருகேசி கௌளை ஆரபி வராளி சிறீ !!!!!!!!!!

இத்தனை   ராகங்களைக் கையாள்வது என்பது சாதாரணமல்ல --மதுவந்தியின் இசைஞானம் எம்மை வியப்பில் ஆழ்த்திவிட்டது.
    இன்றைய நிகழ்ச்சியின் மகுடமாக இது விளங்கியது என்று கூற முடியும்

பல்லவி  பாடுவது  மதுவந்தியின் குருவின் தனிச் சிறப்பு -அவரின் வழிகாட்டலில் சிஷ்யையும்   வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது 

நமச்சிவாய  வாழ்க என நாங்கள் பாடவேண்டும்  என்னும் சிவயோகசுவாமிகளின் பாடலை   பக்திபூர்வமாகப் பாடிய பின்னர்    அகிர் பைரவியிலே திருபுரா குமரன்  கந்தன் மீது இயற்றிய  பாடலை  பாடி லால்குடியின் ரேவதி ராகத் தில்லானாவைத் தொடர்ந்து  மங்களத்துடன்  நிறைவுசெய்தபோது சபையோர் மகிழ்ச்சியில் திளைத்தனர்

மதுவந்தி முருகன் மீது பல பாடல்களை பாடியதை  உணர்ந்தபோது  கந்த புராணக் கலாச்சாரத்திலே ஊறி வளர்ந்து கதிர்காமக் கந்தனின்  அருளிலே திளைத்த எமது  இனத்தின்   முருக பக்தியை இன்றைய அரங்கேற்றம் பிரதிபலித்தது என்ற எண்ணம் மனதிலே  தோன்றியது 


மதுவந்தியின் தந்தையார்  திரு பகீரதன் அவர்களும் திரு குலசேகரம் சஞ்சயன் அவர்களும் நிகழ்ச்சியை அழகாகத்தொகுத்து  வழங்கி  அரங்கேற்றம் தொய்வில்லாமல் நிறைவேற   உதவினார்கள்

இன்றைய அரங்கேற்றத்திற்கு மெருகூட்டிய பக்கவாத்தியக் கலைஞர்களைப்   பற்றி விசேடமாகக் கூற வேண்டும் 

மிருதங்கக் கலைஞர் கலைமாமணி திரு சிவகுமார்    வயலின் வித்வான் திரு சுரேஷ் பாபு  கஞ்சிராக்   கலைஞர் ஜனகன் எல்லோருமே  பாடகிக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்தவண்ணம் இருந்தனர் -

தனி  ஆவர்த்தனத்தின் போது  கலைஞர்களினது வாசிப்பு  எம்மை வியக்க வைத்து  விட்டது என்றால் மிகையில்லை 
தம்புரா மீட்டிய சிறுவர்கள் ரமணன்  கிரன் குமரன்  ஆகியோரின் இசை ஞானத்தையும் உணர முடிந்தது    
எல்லோரும் சேர்ந்து இயங்கிய   இந்தக்  கூட்டு  இசை அரங்கம் ரசிகர்களையும் தம்மோடு இணைத்துக்
கொண்டதால் அரங்கேற்றம்  சிறப்பாக  அமைந்து விட்டது    என்று பெருமைப்படலாம் 

திரு சுரேஷ் பாபு அவர்கள் பாரம்பரியம் மிக்க இசைக்குடும்பதிலே பிறந்தவர் அவருடைய பாட்டனார் சிறீ வி கோவிந்தசாமி நாயக்கர் பிரபல வயலின் மேதை -திரு சுரேஷ் பாபு  அவர்கள் .  சென்னை சங்கீத வித்வத்   சபையின் ''சிறந்த வயலின் வித்துவான் ''விருதை பெற்றவர் 


திரு ஜனகன் சுதந்திரராஜ் அவர்கள் சிறந்த தாள வாத்தியக் கலைஞர் -அத்துடன்   புல்லாங்குழல் கலைஞர்   இவர் பங்கு பற்றாத சிட்னி மேடை நிகழ்ச்சிகளே இல்லை எனலாம் 

கலைமாமணி சிவகுமாரும் மனைவி லலிதா சிவகுமாரும் இசைபாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  
ஒருவர் பிரபல இசைக் கலைஞர் திருமதி டி கே பட்டம்மாளின் மகன் மற்றும் இசைக் கலைஞர்  திரு டி கே ஜெயராமனின் மருமகன் -மற்றவரோ பிரபல மிருதங்க வித்துவான் பாலக்காடு மணி  அவர்களின்  மகள் -அத்துடன் டி கே பட்டம்மாளின் மருமகள்

பிரபல மிருதங்க வித்துவான்  சிவகுமார் போன்ற ஒரு பெரியார் மதுவந்திக்கு அனுசரணையாக வாசித்ததும் இறையருள் 

இவர்களின் ஆசியுடனும் வழிகாட்டலுடனும் மதுவந்தி இன்று இசை உலகில் காலடி எடுத்து வைக்க இறைவன் சித்தம் அருள்புரிந்திருக்கிறது


 திருமதி பட்டம்மாள் அவர்கள் மதுவந்தியின் முன்னோர் திருமதி நாகேஸ்வரி பிரமானந்தா அவர்களுக்குத்   தனது   தம்புராவையே உவந்தளித்துக்    கௌரவித்திருக்கிறார் என அறிந்தபோது மேலும் மகிழ்ச்சி   அடைகிறோம் 

    இரண்டு இசைக் குடும்பங்களின் சங்கமம் இது  என்பது மிகப்பொருத்தம்
    இசை உலகிலே செல்வி மதுவந்தி பகீரதன்  பிரகாசிக்க நாமும் ஆசி கூறி வாழ்த்துவோம்