உலகச் செய்திகள்


தாய்­வானின் முத­லா­வது பெண் ஜனா­தி­பதி தெரிவு

ஆங்கிலத்தை கற்காத முஸ்லிம் பெண்கள் நாடு கடத்தபடுவார்கள்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற சீமான் கைது 

யேமனில் பொலிஸ் தலை­மை­யகம் மீது வான் தாக்­குதல்; 25 பேர் உயி­ரி­ழப்பு

தீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு : 21 பேர் பலி: பலர்  காயம்

ரஷ்ய வான் தாக்குதல்களில் 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் பலி




தாய்­வானின் முத­லா­வது பெண் ஜனா­தி­பதி தெரிவு

18/01/2016 தாய்­வானின் முத­லா­வது பெண் ஜனா­தி­ப­தி­யாக தஸாய் இன்க் - வென் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.
அவர் (59 வயது) சீனா­வி­ட­மி­ருந்து தாய்வான் சுதந்­தி­ர­ம­டை­வதை வலி­யு­றுத்தி வரும் ஜன­நா­யக முன்­னேற்ற கட்­சியின் தலை­வ­ராவார்.
தனது தேர்தல் வெற்­றி­யை­ய­டுத்து தஸாய் உரை­யாற்­று­கையில், சீனா­வு­ட­னான தாய்­வானின் நிலைப்­பாட்டை நிலை­நி­றுத்­த­வுள்­ள­தாக சூளு­ரைத்­துள்ளார்.
சீனா தாய்­வானின் ஜன­நா­ய­கத்­துக்கு மதிப்­ப­ளிப்­ப­துடன் இரு தரப்­பி­னரும் சின­மூட்டும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது என அவர் கூறினார்.
சீனா­வா­னது தாய்­வானை தனது நாட்­டி­லி­ருந்து பிரிந்த ஒரு மாகா­ண­மா­கவே நோக்கி வரு­கி­றது. தேவைப்­படும் பட்­சத்தில் தாய்­வானை பல­வந்­த­மாக மீள இணைத்துக் கொள்ள நேரிடும் என அந்­நாடு அச்­சு­றுத்தி வரு­கி­றது.
தாய்­வா­னுக்­கான புதிய சகாப்தம் மலர்ந்­துள்­ள­தாக குறிப்­பிட்ட தஸாய், நாடு எதிர்­கொண்­டுள்ள பிர­தான பிரச்­சி­னைகள் தொடர்பில் ஏனைய கட்­சி­க­ளுடன் கூட்­டி­ணைந்து செயற்­பட உறு­தி­ய­ளித்­துள்ளார்.
இதன்­போது தாய்வான் மற்றும் சீனா ஆகிய இரு தரப்பு நாடு­களும் பரஸ்­பரம் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய வழி­மு­றை­களைக் கையாள வேண்டும் என வலி­யு­றுத்­திய அவர், சின­மூட்டும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வது பிராந்­திய ஸ்திரத்­தன்­மைக்கும் உற­வு­க­ளுக்கும் குந்­தகம் விளை­விக்கும் என எச்­ச­ரித்தார்.
தாய்வான் பிராந்­தி­யத்தில் அமை­தி­யு­டனும் ஸ்திரத்­தன்­மை­யு­டனும் விளங்க ஆத­ரவும் பங்­க­ளிப்­பும் செய்­ய­வுள்­ள­தாக அமெ­ரிக்­காவும் ஜப்­பானும் சூளு­ரைத்­துள்­ளமை குறித்து அந்­நா­டு­க­ளுக்கு அவர் நன்­றியைத் தெரி­வித்தார்.
இந்தத் தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­யுள்ள ஆளும் குவோமிங்டாங் கட்சியின் தலைவர் எறிக் சு தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.
தஸாயிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள எறிக், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்புச் செய்துள்ளார்.


நன்றி வீரகேசரி










ஆங்கிலத்தை கற்காத முஸ்லிம் பெண்கள் நாடு கடத்தபடுவார்கள்

19/01/2016 பிரித்தானியாவிலுள்ள முஸ்லிம் பெண்கள் உயர் தராதரத்துக்கு ஆங்கிலத்தில் புலமை பெறத் தவறுவார்களாயின் நாடு கடத்தப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
ஆங்கில அறிவு குறைந்தவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செய்திகளளால் இலகுவாக பாதிக்கப்பட்டு அவர்கள் பால் கவரப்படுவதாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.
அவரது பழைமைவாத அரசாங்கமானது தனிமைப்படுத்தப்பட்டுள்ள சமூகங்களைச் சேர்ந்த பெண்களை பிரித்தானிய அரசாங்கத்துடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் அங்கமாக அவர்களுக்கு மொழி அறிவூட்டுவதற்கு 26 மில்லியன் யூரோ பெறுமதியான திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையிலேயே டேவிட் கமெரோனின் இந்த அறிவிப்பு வெ ளியாகியுள்ளது.     நன்றி வீரகேசரி 
பிரித்தானியாவிலுள்ள தமது வாழ்க்கைத் துணைகளுடன் இணைந்து கொள்ள வரும் குடியேற்றவாசிகள் பிரித்தானியா வருவதற்கு முன் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருப்பதை அந்நாட்டு குடிவரவு சட்டங்கள் ஏற்கனவே வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவ்வாறு வந்தவர்களும் மேலும் மொழிப் பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ளதாக டேவிட் கமெரோன் குறிப்பிட்டார்.
“நீங்கள் ஆங்கில உங்கள் அறிவை விருத்தி செய்யாவிடில் பிரித்தானியாவில் தங்கியிருப்பதில் உங்களுக்கு உத்தரவாதமில்லை" என அவர் தெரிவித்தார்.
“ எமது நாட்டுக்கு வருபவர்களுக்கு அதற்கேற்ப கடப்பாடுகளும் உள்ளன" என அவர் கூறினார்.
டேவிட் கமெரோனது அரசாங்கத்தின் மதிப்பீடுகளின் பிரகாரம் அந்நாட்டில் 190,000 முஸ்லிம் பெண்கள் உள்ளனர். அவர்களில் 22 சதவீதமானவர்கள் ஆங்கிலத்தில் மிகக் குறைந்தளவில் உரையாற்றக்கூடியவர்களாகவோ அல்லது அறவே அந்த மொழியில் உரையாற்ற முடியாதவர்களாகவோ உள்ளனர்.
அத்துடன் பிரித்தானியாவின் மொத்த 53 மில்லியன் சனத் தொகையில் 2.7 மில்லியன் பேராக முஸ்லிம்கள் உள்ளனர்.    நன்றி வீரகேசரி 












ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற சீமான் கைது 



19/01/2016 தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜல்லிக்கட்டை நடத்த இந்திய உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று சீமான் அறிவித்திருந்த நிலையில் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








யேமனில் பொலிஸ் தலை­மை­யகம் மீது வான் தாக்­குதல்; 25 பேர் உயி­ரி­ழப்பு




20/01/2016 யேம­னிய தலை­நகர் சனா­வி­லுள்ள பொலிஸ் தலை­மை­யகம் மீது சவூதி தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­யினர் நடத்­திய வான் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 25 பேர் பலி­யா­ன­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர்.
மேற்­படி தாக்­கு­தலில் இடிந்து விழுந்த இரு மாடிக் கட்­ட­ட­மொன்றின் இடி­பா­டு­களின் கீழ் சிக்­கியே பலர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
பலி­யா­ன­வர்­களில் அநேகர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் ஹோதி கிளர்ச்­சி­யா­ளர்­களும் என அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
சவூதி தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு யேமனில் அந்­நாட்டு அர­சாங்­கத்­துக்கு உதவும் வகையில் ஹோதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக வான் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் தாக்­கு­த­லுக்கு இலக்­கான பொலிஸ் தலை­மை­யகக் கட்­ட­டத்தை கிளர்ச்­சி­யா­ளர்கள் சில சம­யங்­களில் பயன்­ப­டுத்தி வந்­த­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத அறிக்­கை­யொன்று கூறு­கி­றது.
கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சனா நக­ருக்கு வெளியில் இடம்­பெற்ற வான் தாக்­கு­த­லொன்றில் யேம­னிய ஊட­க­வி­ய­லாளர் ஒரு வர் உயி­ரி­ழந்­தி­ருந்தார்.
அதே­ச­மயம் கடந்த வாரம் இடம்­பெற்ற வான் தாக்­கு­த­லொன்றில் அநேக பொது­மக்கள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

கடந்த வருடத்தில் அந்நாட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை குறைந்தது 8 ஊடக வியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊட கவியலாளர்கள் பாதுகாப்பு சபை தெரிவிக்கிறது.   நன்றி வீரகேசரி









தீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி




20/01/2016      2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈராக்கில் 18 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் 36 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கடந்த வருடம் மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 ஆயிரம் பேர் பலியானதுடன் 7 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரிவிக்கையில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வெண்ணிக்கையை வெளியிட்டுள்ளோம். எனினும் சில வேளைகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வாகவும் இருக்கலாம் என்றார்.

இதேவேளை, ஐ.எஸ். தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.     நன்றி வீரகேசரி









பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு : 21 பேர் பலி: பலர்  காயம்




20/01/2016 பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் இன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 21  பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைபர் பக்துன்கவா  மாகாண அரசினால் நடத்தப்படும் குறித்த பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்கள் தாங்கிய 3 பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி







ரஷ்ய வான் தாக்குதல்களில் 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் பலி




21/01/2016 சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதற்கு ஆரம்பித்தது முதற்கொண்டு இதுவரை 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட மேற்படி வான் தாக்குதல்களில் 200 சிறுவர்கள் உட்பட 1,015 பேர் பலியாகியுள்ளதாக அந்த நிலையம் கூறுகிறது.

அதேசமயம் இந்தத் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த 893 பேரும் எதிர்க் குழுவைச் சேர்ந்த 1,141 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி