உலகச் செய்திகள்


ஊழல் குற்றச்சாட்டு; மலேசிய பிரதமருக்கு எதிராக போராட்டம்

பாரிஸ் நகரில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ : இரு சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி

மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ள கண்கலங்க வைக்கும் புகைப்படம்: சிரியா யுத்தத்தின் பிரதிபலிப்பு


ஊழல் குற்றச்சாட்டு; மலேசிய பிரதமருக்கு எதிராக போராட்டம்

31/08/2015 ஊழல் குற்­றச்­சாட்­டிற்கு ஆளா­கி­யுள்ள மலே­சிய பிர­த­ம­ருக்கு எதி­ராக பொலி­ஸாரின் தடையை மீறி அந்­நாட்டு தலை­ந­கரில் போராட்டம் நடந்­து­வ­ரு­கி­றது.



சில மாதங்­க­ளுக்கு முன்பு பிர­தமர் நஜிப் ரஸாக்கின் தனிப்­பட்ட வங்கிக் கணக்கில் பல­நூறு மில்­லியன் டொலர் பணம் இருப்­பது தெரி­ய­வந்­தது. இதனை தொடர்ந்து எதிர்­க்கட்­சிகள் அவரை பதவி வில­கும்­படி கூறி­வ­ரு­கி­ன்றன. ஆனால் அவர் தனது வங்கிக் கணக்கில் இருப்­பது நன்­கொடைப் பணம் என்றும் தான் எந்த குற்­றமும் செய்­ய­வில்லை என்றும் கூறி­வ­ரு­கிறார்.
ஆனால் நேற்று, அவர் பதவி வில­கும்­படி வற்­பு­றுத்தி கோலா­லம்­பூரில் மக்கள் ஆயி­ரக்­க­ணக்கில் கூடி போராட்டம் நடத்­தினர். இந்த போராட்டம் மற்றும் பேரணி இரண்டு நாள் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. போராட்­டக்­கா­ரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரி­விக்கும் பொருட்டு மஞ்சல் நிற உடை அணிந்து போராடி வருகிறார்கள். நன்றி வீரகேசரி 






பாரிஸ் நகரில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ : இரு சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி


02/09/2015 பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள குடியிருப்புக் கட்டடமொன்றில் இன்று  இடம்பெற்ற பாரிய தீ அனர்த்தத்தில் சிக்கி இரு சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகரின் வடக்கேயுள்ள அந்தக் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை 100 க்கு மேற்பட்ட தீயணைப்புப் படைவீரர்கள் போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ அனர்த்தத்தின் போது உயிருடன் மீட்கப்பட்டுள்ள நால்வரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மொன்ட்மார்ட்றி குன்றின் அடிவாரத்திலுள்ள மேற்படி குடியிருப்புக் கட்டடத்தில் இடம்பெற்ற இந்தத் தீ அனர்த்தத்திற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தீயால் அந்தப் பிரதேசத்திலுள்ள சுமார் 15 கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளர் பியறி ஹென்றி பிரென்டெற் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி










மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ள கண்கலங்க வைக்கும் புகைப்படம்: சிரியா யுத்தத்தின் பிரதிபலிப்பு

03/09/2015 ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்றை  புகைப்படம் ஒன்று சொல்லி விடும். வியட்னாம் போர், ஆபிரிக்காவின் வறுமை என்பன இதற்கு சான்று. இந்நிலையில் பார்ப்பவர்களின் மனதை நிலைகுலைய வைக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உலக மக்களை துயருற வைத்துள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரைகடலில் முழ்கி இறந்து போன குழந்தை ஒன்றின் புகைப்படமே இது.  

இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு கனம் மனம் மௌனிக்கின்றது.
சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போர் காரணமாக தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் அந் நாட்டு மக்கள் அகதிகளாக செல்கின்றனர்.

 எனினும் உயிரை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து வரும் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக  ஐரோப்பிய நாடுகளின் எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் குறித்த குழந்தையின் புகைப்படம் வெளியாகி மனிதாபிமானத்தை கேள்வி குறியாக்கியுள்ளது.

நன்றி வீரகேசரி









No comments: