நான் துயரங்கள் சுமப்பவள் - C.Paskaran

 .
என் துயரங்கள் என் சந்தோசங்கள்
நான் மட்டுமே தாங்கிக் கொள்கிறேன்
ஒரு நாள்
நீ நானாக வேண்டும்
என் எண்ணங்களையும்
என் வேதனைகளையும்
ஒருகணம்
நீ சுமந்து  தள்ளாடுவதை
நான் பார்க்க வேண்டும்
அன்று உனக்குப் புரியும்
இவளின்
தினசரி வாழ்க்கை
அப்போதுகூட
நான் உனக்காக
கவலை கொள்வேன்
உன் துயரங்களை
பகிர்ந்து கொள்வேன்
உன்னைப்போல்
எதுவும் தெரியாதவனாய்
வாழ்ந்து கொள்ள மாட்டேன்வெண் மேகக் கூட்டங்கள்
கரு மேகத்தை
அழகாக்குவது போல்
உன் சுமைகளையும்
உன் துயரங்களையும்
துரத்திவிட்டு
உன் புன்னகையை
ரசித்துக்கொண்டிருப்பேன்
ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
நீ நானாக மாறவேண்டும்
நான் நீயாக மாறவேண்டும்
மாறுவாயா ?

செ .பாஸ்கரன் 

No comments: