தமிழ் மொழி கற்க 192 சிங்கள பொலிஸார் இணைவு
கே.பி.யை கைதுசெய்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை
நெற் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையம்: மக்கள் ஆர்ப்பாட்டம்
கோத்தா, துமிந்த, தனசிறி, உபாலி உள்ளிட்ட 9 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு
கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை
சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து
தமிழ் மொழி கற்க 192 சிங்கள பொலிஸார் இணைவு
31/08/2015 இனவிவகார நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள ஏற்பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ள 192 சிங்கள பொலிஸார் இன்று மட்டக்களப்பில் இணைந்து கொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இப்பயிற்சி நெறிகள் இன்று பயிற்சி பரிசோதகர் ஐ.பி.பேரின்பராசா தலைமையில் ஆரம்பமானது.
5 மாதங்களை கொண்ட இப்பயிற்சி நெறி 11வது பயிற்சி முகாமாகும். இதற்கு முன்னர் கல்லூரியிலிருந்து 1400 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேற்யுள்ளனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திஸ்ஸாநாயக தமிழ் கற்கை நெறிக்குப்பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜினதாச உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பல பொலிஸ் அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர். நன்றி வீரகேசரி
கே.பி.யை கைதுசெய்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை
01/09/2015 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் குமரன் பத்மநாதனுக்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து அவரை கைதுசெய்வதற்கு போதுமான சாட்சியங்கள் கிடைக்கவில்லை என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார்.
குமரன் பத்மநாதன் எனும் கே.பி.யை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மக்கள் விடுதலை முன்னணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அரச சட்ட வாதி துஷித் முதலிகே இதனை மன்றுக்கு நேற்று அறிவித்தார்.
கே.பி.தொடர்பிலான குறித்த வழக்கு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி விஜித் மலல்கொட முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரரான மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் உள்ளிட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி சுனில் வட்டகலவும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்டவாதி துஷித் முதலிகேவும் நீதிமன்றில் ஆஜராகினர்.
மனுதாரர் சார்பாக குமரன் பத்மநாதனுக்கு எதிராக 193 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவை தொடர்பிலேயே கே.பி.யை கைது செய்ய கோரப்பட்டது.
இந் நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது குறித்த 193 குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைசெய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன் அது தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் கோரப்பட்ட 6 மாதகால கால அவகாசத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
நேற்று குறித்த 6 மாத கால அவகாசத்தின் பின்னர் முதன்முதலாக வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன் போது நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டவாதி துஷித் முதலிகே, கே.பி.க்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் குற்றவியல் குற்றச் சாட்டு ஒன்று தொடர்பில் அவரை கைது செய்வதற்கு போதுமான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. எனவே இந்த விசாரணைகளை நிறைவு செய்ய மெலும் 6 வரகால கால அவகசத்தை வழங்குமாறு மன்றைக் கோருகின்றோம் என்று அறிவித்தார்.
இந் நிலையில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சுனில் வட்டகல குறிப்பிடுகையில், விடுதலை புலிகளின் சர்வதேச தலைவர் என அறியப்பட்ட கே.பி.க்கு எதிராக சான்றுகள் இல்லை என குறிப்பிடுவதானது கவலையளிப்பதாகவும், கடந்த அரசாங்க காலத்தில் அவருக்கு எதிராக பகிரங்க குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் சட்ட வாதியின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினார்.
அத்துடன் குமரன் பத்ம நாதனுக்கு குற்றச் சாட்டுக்களுடன் நேரடி தொடர்பு இல்லாவிடினும், புலிகள் மேற்கொன்ட பல குற்றங்களுக்கும் நிதி, திட்ட உதவிகளை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட வேண்டியவர் எனவும் அவர் தெரிவித்தார்.
இந் நிலையில் இரு தரப்பு வாதாங்களையும் கேட்ட நீதிவான் விஜித் மலல்கொட, சட்ட மா அதிபர் கோரிய 6 வாரகால அவகாசத்தை வழங்கியதுடன் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இந் நிலையில் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வழக்கை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது கே.பி. தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பிலான முழுமையான அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் நீதிவான் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நெற் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையம்: மக்கள் ஆர்ப்பாட்டம்
கோத்தா, துமிந்த, தனசிறி, உபாலி உள்ளிட்ட 9 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு
கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை
சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து
நெற் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையம்: மக்கள் ஆர்ப்பாட்டம்
02/09/2015 மத்தள விமான நிலையத்தை நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பிரதேச மக்களால் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல் மூடைகளை இன்று லொறியில் கொண்டுச் செல்லும் போதே பிரதேச வாசிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
கோத்தா, துமிந்த, தனசிறி, உபாலி உள்ளிட்ட 9 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு
02/09/2015 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிகார, தெஹிவளை - கல்கிஸை மாநகர மேயர் தனசிறி அமரதுங்க உள்ளிட்ட ஒன்பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவினரால் விஷேட விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை ஈடுபடுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இவர்களுக்கு பாரிய ஊழல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, மேஜர் ஜெனரல்களான பாலித்த பிரனாந்து, கே.பீ.கொடவெல, எம்.ஆர்.டப்ள்யூ.சொய்சா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களான உபாலி கொடிகார, துமிந்த சில்வா, தனசிறி அமரதுங்க, ஜனக ரத்நாயக்க ஆகியோரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த விசாரணை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவித்தன.
ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் 550 பேரை தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியமை, தேர்தலின் போது அந் நிறுவனத்தின் பணம் 86 லட்சம் பயன்படுத்தியமை தொடர்பில் இந் நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரக்ன லங்கா நிறுவனத்தில் வேலை பார்த்த 550 பேர் அங்கிருந்து அகற்றப்பட்டு அந்த வெற்றிடத்துக்கு சிவில் பாதுகாப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் அகற்றப்பட்டவர்கள் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமையும் விசாரணை ஆணைக் குழுவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரக்ன லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் ஊடாக கோட்டை, கொலன்னாவை, தெஹிவளை, கடுவெல, மஹரகம ஆகிய பிரதேசங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தியமை, ஊழியர்களின் வெற்றிடங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினரை பயன்படுத்தியமை, அவர்களுக்கு ரக்ன லங்கா சீருடை வழங்கப்பட்டமை, அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயுதங்களை உரிமை பத்திரமின்றி களஞ்சியப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த 9 பேரிடமும் விஷேட விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 800 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இரண்டாவது முறைப்பாடு இதுவென தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை
04/09/2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
ரக்ன லங்கா ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து
05/09/2015 எதிர்க் கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்திற்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றிருப்பது நம்பிக்கையை தருகிறது.
இலங்கை தமிழருக்கு உரிய அதிகாரம், நீதி கிடைக்க பாடுபடுவேன் என சம்பந்தன் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment