உலகச் செய்திகள்


ஈராக்­கிய தலை­ந­கரில் குண்டு தாக்­கு­தல்கள் ; 40 பேர் பலி

சிறைக்­கூ­டத்­துக்கு கீழாக அமைக்­கப்­பட்ட சுரங்­கத்­தி­னூ­டாக தப்பிச் சென்ற போதை­வஸ்து கடத்தல் மன்னர்

ஆந்திரா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி : 29 பேர் காயம்

ரோமானிய பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

யூரோ நிபந்தனைகள்; கிரீஸ் நாடாளுமன்றம் ஏற்பு: தலைநகர் ஏதென்ஸில் வன்முறை

ஈராக்­கிய தலை­ந­கரில் குண்டு தாக்­கு­தல்கள் ; 40 பேர் பலி

ஈராக்­கிய தலை­நகர் பக்­தாத்தில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களில்  40 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
வட ஷாப் மாவட்­டத்தில் இடம்­பெற்ற கார் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 10 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அதே­ச­மயம் அரு­கி­லுள்ள சந்­தை­யொன்றில் தற்­கொலைக் குண்­டு­தாரி நடத்­திய தாக்­கு­தலில் மேலும் பலர் பலி­யா­கி­யுள்­ளனர்.
மேலும் அந்­ந­கரின் புனோக் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற பிறி­தொரு கார் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 9 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
இந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கு இது­வரை எந்­த­ வொரு குழுவும் உரிமை கோர­வில்லை.எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகளே இந் தத் தாக்குதல்களுக்கு காரணம் என நம்பப்படுகிறது.  நன்றி வீரகேசரி 
சிறைக்­கூ­டத்­துக்கு கீழாக அமைக்­கப்­பட்ட சுரங்­கத்­தி­னூ­டாக தப்பிச் சென்ற போதை­வஸ்து கடத்தல் மன்னர்

14/07/2015 மெக்­ஸிக்­கோவின் அதி சக்தி வாய்ந்த போதை­வஸ்து கடத்தல் மன்னர் ஜோவாகின் எல்­சப்போ குஸ்மான் எவ்­வாறு பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தனது சிறைக்­கூ­டத்­தி­லி­ருந்து தப்பிச் சென்றார் என்­பது தொடர்­பான விப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அவர் மெக்­ஸிக்­கோவின் ஒஸாமா பின்­லேடன் என செல்­ல­மாக அழைக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
சின­லோவா போதை­வஸ்து கடத்தல் குழுவின் தலை­வ­ரான அவர் மெக்­ஸிக்­கோவின் தலை­ந­க­ரி­லி­ருந்த 50 மைல் தொலை­வி­லுள்ள அல்­தி­பி­ளனோ சிறைச்­சா­லை­யி­லி­ருந்து தப்பிச் சென்­ற­தை­ய­டுத்து அவரைத் தேடும் நட­வ­டிக்கை தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதன் போது அவர் தனது சிறைக்­கூ­டத்­துக்கு கீழாக ஒரு மைல் தூரத்­துக்கு தோண்­டப்­பட்ட சுரங்கப் பாதை­யி­னூ­டாக தப்பிச் சென்­றுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டது.
அவரது சிறைக்­கூ­டத்தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு வீடியோ கரு­வி­களின் பிர­காரம் அவர் அந்த சிறைக்­கூ­டத்தில் இறு­தி­யாக சனிக்­கி­ழமை இரவு 9 மணி வரை காணப்­பட்­டுள்ளார்.
இந்­நி­லையில் திடீ­ரென கண்­கா­ணிப்பு கரு­வி­யி­லி­ருந்து அவர் மாய­மானார்.
இத­னை­ய­டுத்து அவ­ரது சிறைக்­கூ­டத்தைப் பரி­சோ­திக்க அதி­கா­ரிகள் சென்ற போது, அந்த சிறைக்­கூடம் வெறு­மை­யா­க இ­ருந்­த­துடன் அங்­கி­ருந்த குளியல் இடத்­திற்கு அண்­மையில் 20 அங்­குல நீளமும் 20 அங்­குல அக­ல­மு­மு­டைய துளை­யொன்று காணப்­பட்­டது.
அந்தத் துளையை அதிகா­ரிகள் பரி­சோ­தித்த போது அதன் கீழாக சுரங்கப் பாதை­யொன்று அமைக்­கப்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.
அந்த சுரங்­கப்­பா­தை­யா­னது காற்­றோட்ட வசதி, மின்­வி­ளக்­குகள், அவ­ச­ர­கால ஒட்­சிசன் தாங்­கிகள் என்­ப­வற்றைக் கொண்­டி­ருந்­த­துடன் அங்கு ஒரு மோட்­டார் ­சைக்­கிளும் காணப்­பட்­டது.
அந்த சுரங்­கப்­பா­தையின் முடி­வி­லி­ருந்த அரை­கு­றை­யாக கட்டி முடிக்­கப்­பட்ட வீட்­டி­னூ­டா­கவே ஜோவாகின் வெளி­யேறிச் சென்­றுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.
அவர் சிறை­யி­லி­ருந்து தப்பிச் செல்­வது இது இரண்­டா­வது தட­வை­யாகும்.
இதற்கு முன் அவர் 2001 ஆம் ஆண்டில் சிறைக் காவ­லர்­களின் உத­வி­யுடன் சலவைக் கூடையில் மறைந்­தி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்தார்..
அதன் பின் அவர் கடந்த ஆண்டே மீளக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சிறைச்சாலைக்கு கீழாக இத்தனை நீள மான சுரங்கப் பாதையொன்று அமைக்கப் பட்டிருப்பதை அதிகாரிகள் ஏன் கவனிக்கத் தவறினார்கள் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.   நன்றி வீரகேசரி ஆந்திரா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி : 29 பேர் காயம்

14/07/2015 ஆந்திரா கேதாவரி ஆற்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலியானதுடன் 29 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கோதாவரி புஷ்கரம் விழா இன்று ராஜமுந்திரியில் நடைபெற்றது.
இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப்பதால் இவ்விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கிய இவ்விழா எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 12 நாட்கள் நடைபெறும்.முதல் நாளான இன்று கோதாவரியில் புனித நீராட கோடிக் கணக்கான பக்தர்கள் கடும் கூட்டத்திற்கு இடையே ஆற்றில் நீராடினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் அதிக சன நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டன.
நன்றி வீரகேசரி 

ரோமானிய பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

15/07/2015 ரோமா­னிய பிர­தமர் விக்டர் பொன்தா மீது ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. அவர் மோசடி, வரி ஏய்ப்பு, லஞ்சம் போன்ற குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு பிர­த­ம­ராக பத­வி­யேற்­ப­தற்கு முன்னர் சட்­டத்­த­ர­ணி­யாக சேவை­யாற்­றிய கால கட்­டத்தில் அவர் இந்தக் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் தன் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பொன்தா மறுப்புத் தெரி­வித்­துள்ளார். அவர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆளும் சமூக ஜன­நா­யக கட்சித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­தி­ருந்தார்.
எனினும் பிரதமராக தனது கடமைகளைத் தொடரப் போவதாக அவர் தெரிவித்திருந்தார்.   நன்றி வீரகேசரி 
யூரோ நிபந்தனைகள்; கிரீஸ் நாடாளுமன்றம் ஏற்பு: தலைநகர் ஏதென்ஸில் வன்முறை
17/07/2015 பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸன்க்குக் கடன் வழங்க, யூரோ கூட்டமைப்பு விதித்துள்ள நிபந்தனைகளை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏற்றது.
 பொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீள்ஸ மீட்பதற்கு 8,600 கோடி யூரோக்கள் (சுமார் ரூ.5,88,222 கோடி) கடன் வழங்க, அந்த நாடு கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என யூரோ கூட்டமைப்பு நிபந்தனை விதித்தது.
 இதுதொடர்பாக நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பின், அந்த நிபந்தனைகளை ஏற்க கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் கடந்த திங்கள்கிழமை ஒப்புக்கொண்டார்.
 இந்த நிலையில், மூன்றாவது முறையாக கிரீஸன்க்கு கடன் வழங்கும் யூரோ கூட்டமைப்பின் நிபந்தனைகளை செயல்படுத்துவதற்கு அனுமதி கோரும் தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.
 300 உறுப்பினர்களைக் கொண்ட அந்த நாடாளுமன்றத்தில், தீர்மானத்துக்கு ஆதரவாக 229 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
 எனினும், ஆளும் இடதுசாரிக் கட்சியான சிரீஸா கட்சி எம்.பி.க்கள் 149 பேரில், 32 பேர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். 6 பேர் வாக்களிப்பைப் புறக்கணித்தனர்.
 ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தீர்மானத்தை ஆதரித்தனர்.
 இதையடுத்து அந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 இதன் மூலம், யூரோ கூட்டமைப்பிடமிருந்து கடன் பெறுவதற்காக, அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ள வரி உயர்வு, ஓய்வூதியக் குறைப்பு, தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், மின்சாரத் துறையில் தனியார்மயம் ஆகிய நிபந்தனைகளை நிறைவேற்ற கிரீஸ் அரசுக்கு சட்டரீதியிலான அனுமதி கிடைத்துள்ளது.
 "எனக்கு வேறு வழியில்லை'

"பொருளாதாரச் சீரழிவைத் தடுப்பதற்கு யூரோ கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை' என கிரீஸ் பிரதமர் ஸிப்ராஸ் கூறினார்.
 யூரோ கூட்டமைப்பின் கடன் திட்டத்தை ஏற்பது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் உருக்கமாக பேசியதாவது:
 கடன் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, எனக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டன.
 ஒன்று, என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத பல அம்சங்களைக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது; மற்றொன்று நாட்டின் பொருளாதாரத்தை சீரழிய விட்டுவிடுவது.
 இந்த இரண்டைத் தவிர எனக்கு வேறு வழி எதுவும் இல்லாததால், முதலாவதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றிருந்தாலும், உழைக்கும் மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார் அவர். தீர்மானத்துக்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ், எரிசக்தித் துறை அமைச்சர் பனாகியோடிஸ் லஃபாஸனிஸ், நாடாளுமன்றத் தலைவர் ழ்ஸா கான்ஸ்டான்டோபோலோ ஆகியோர் வாக்களித்தனர்.
மசோதா நிறைவேறும் வேளையில், கிரீஸ் நாடாளுமன்றத்துக்கு எதிரே சுமார் 12,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.  நன்றி தேனீ
No comments: