.
ஆஸ்திரேலியாவில் தமிழகத்துப் பல்கலைக் கழகங்களில் ஒன்றான SRM-பல்கலைக் கழகத்தின் ‘அயலகத் தமிழாசிரியர்’ (Diaspora Tamil
Teacher – Diploma Course) பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்த தமிழாசிரியர்களுக்கு
பட்டமளிப்பு விழா மெல்பர்ன் நகரின் மோனாஷ் பல்கலைக் கழக வளாகத்தில் 11 ஜூலை
2015-அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. தாயகப் பல்கலைக் கழகத்தின் தமிழுக்கான
பட்டமளிப்பு விழா இங்கு நடைபெறுவது ஆஸ்திரேலிய தமிழ்க்கல்வி சரித்திரத்தில் இதுவே
முதல் நிகழ்வாகும். இந்த, ஒரு வருடப் பட்டயப் படிப்பையும்
பட்டமளிப்பு விழாவையும் மெல்பர்ன் நகரில் வெற்றிகரமாக நடத்திய ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை
நிறுவனரும் தலைவருமான திரு நாகை சுகுமாரன் அவர்களும்,
அவருடைய மகள், வள்ளுவர் அறக்கட்டளையின் இயக்குனரும், ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையின் செயலருமான மருத்துவர் செல்வி புவனேசுவரி
சுகுமாரனும், அவர்களுடன் உழைத்த தன்னார்வலர்களும்
பாராட்டுக்குரியவர்கள்.
இந்தப் பட்டமளிப்பு விழாவினை SRM பல்கலைக் கழகத்தின்
தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் முனைவர் பொன்னுசாமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி, 11 ஆசிரியர்களுக்கு ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில்
விக்டோரியா மாநில சட்டமன்ற பல்லினக் கலாசார செயலர் மாண்புமிகு ஹாங் லிம், விக்டோரியா மாநில பல்லினக் கலாசார ஆணையர் திரு சிதம்பரம் சீனிவாசன், பேராசிரியர் ரஸ்ஸல் டிசோசா,
மருத்துவர் அருணோதயராஜ், பேராசிரியர் மார்க் ரோஸ், மருத்துவர் மகாலிங்கம், திரு வாசன் சீனிவாசன்
முதலியோர் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். இந்த விழாவில்
200க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். மருத்துவர் புவனேசுவரி
சுகுமாரன் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை திருமதி விஜயலட்சுமி ராமச்சந்திரன்
தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment