ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வியின் எதிர்காலம் – கருத்தரங்கு

.
-       அன்பு ஜெயா

 மெல்பர்ன் நகரில் இயங்கி வரும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை 11 ஜூலை 2015-அன்று “ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வியின் எதிர்காலம்” என்ற கருத்தரங்கு ஒன்றை மோனாஷ் பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தியது. இரண்டு பகுதிகளாக நடந்த இந்தக் கருத்தரங்குக்கு பேராசிரியர் ரஸ்ஸல் டிசோசா (UNESCO Chair in Bioethics)  தலைமை ஏற்று நடத்தினார்.
சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகம் (Tamil Virtual Academy) நடத்தும் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றிபெற்ற செல்வன் அனிருத் விஜயராஜ் ஷிவாகிக்கு பேராசிரியர் டிசோசா TVA-ன் சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.
திரைகடல் தாண்டினும் நீந்தமிழைத் திளைக்கச் செய்வீர்” என்ற பொருண்மையில் நடந்த கருத்தரங்கிற்கு விக்டோரியா தமிழ்க் கலாச்சாரக் கழகத்தின் தலைவர் திரு சங்கர சுப்பிரமணியன் பொறுப்பேற்று நடத்தினார். இக்கருத்தரங்கில் மெல்பர்ன் தமிழ்ப் பள்ளிகளிலிருந்து திரு மாவை நித்தியானந்தன், திருமதி இந்துமதி மாதவன்,  திரு மகேஷ் மகாலிங்கம், தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ப்பள்ளியின் முதல்வர் திரு ஜோசப் சேவியர், மற்றும் சமூக ஆர்வலர் திரு சாதிக் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
“தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதில் உள்ள சவால்கள்” என்ற பொருண்மையில் நடந்த கருத்தரங்கிற்கு ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைக் கழகத்தின் தலைவர் திரு ஜெயாராம சர்மா அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். இக்கருத்தரங்கில் சிட்னி தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் திரு அன்பு ஜெயா, திரு. திருவேங்கடம் ஆறுமுகம், திரு அனகன் பாபு, அடிலைட் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு லாரண்ஸ் அண்ணாதுரை, எழுத்தாளர் திரு முருகபூபதி, மருத்துவர் நடேசன் ஆகியோரும் உரையாற்றினர். சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் விஜயராகவன் அவர்களின் ஆசியுரை காணொலியாகக் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திருமதி சாந்தி சிவகுமார் தொகுத்து வழங்கினார்.


ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை முதல்வர் திரு நாகை சுகுமாரன் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். அவற்றில், ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறை ஒன்றை நிறுவுவதும், ஆஸ்திரேலிய தமிழ்ப் பள்ளிகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ்க் கொண்டுவந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதும் முக்கிய தீர்மானங்களாகும். திரு சுகுமாரன் அவர்கள் நன்றியுரை ஆற்ற கருத்தரங்கு இனிதே நிறைவடைந்தது. No comments: