’’விழுதல் என்பது எழுகையே’’ - நிறைவில் நின்று திரும்பிப்பார்க்கின்றேன்.

.
அன்புக்குரிய தமிழ்முரசு வாசகர்களே 
வாராவாரம்  வெளிவந்துகொண்டிருந்த  ’’விழுதல் என்பது எழுகையே’’  என்ற பெரும் தொடரை ஆவலோடு  வாசித்து வந்த தமிழ்முரசு வாசகர்கள் ஆயிரக்கணக்கானவகள் என்பதை எமது செயலிமூலம் பார்த்து மகிழ்வுகொண்டோம். இதை தமது அயராத முயற்சியினால் உலகெங்கும் கொண்டு சென்ற தமிழ் எழுத்தாளர் இணைய அகம் நிர்வாக பொறுப்பாளர் பண்ணாகம் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்களையும் , நிர்வாக ஒருங்கிணைப்பாளர் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் ஏலையா திரு.க.முருகதாசன் அவர்களையும் தமிழ்முரசு வாசகர்கள்  சார்பாக வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம் .
விரைவில் ஆரம்பிக்க இருக்கும் கவிதைத் தொடரையும் நாம் எடுத்து வருவோம் கவிஞர்களுக்கான இந்தப் பணியில் நாமும் இணைந்து செயற்படுவோம். வாழ்த்துக்களோடு  Sena Paskaran ஆசிரியர்குழு சார்பாக 

வணக்கம் எமது தமிழ்மக்களே! வாசகர்களே! எழுத்தாளர்களே!
நிறைவில் நின்று திரும்பிப்பார்க்கின்றேன்.

 கடந்த 16.5.2014 முதல் இக்கதை ஆரம்பமாகி  10.7.2015 நிறைவு வரை கடந்து வந்த பாதையில்.
- எழுதியவர் - பண்ணாகம் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்கள்

 ’’விழுதல் என்பது எழுகையே’’ பெருந்தொடரின் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் வெளியீட்டாளன் என்ற வகையிலும் பண்ணாகம் இணையத்தள பிரதம ஆசிரியர் என்ற வகையிலும் எனது இலக்கிய நண்பர் ஏலையா முருகதாசன் அவர்களுடன் கடந்து வந்த பாதையைத்  திரும்பிப்பார்க்கின்றேன்.


முதல் வணக்கம்

முதலில் கடந்த ஒரு வருடமாக ஒரு பெருந் தொடர் கதையாக  ’’விழுதல் என்பது எழுகையே’’ என்னும் ஒரு கதையில் தமிழ் அகதியாக இடம் பெயர்ந்த ஒரு பல்கலைக்கழக இளைஞனின் கதையை உலக எழுத்தாளர்கள் 26 பேரை இணைத்து இணையத்தள உலகில் முதல் முதலில் ஒரு தொடர் சாதனை படைக்க உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் முதலில் என்சார்பாகவும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் சார்பாகவும் பண்ணாகம் இணையம் சார்பாகவும் நன்றிகள் பல தெரிவிப்பதில் மிக்க மகிழ்வடைகின்றேன்.

தொடர்புகள் கண்டோம்! தொடர்பு கொண்டேன்!

பண்ணாகம் இணையம் றறற.pயnயெபயஅ.உழஅ ஆரம்பித்த காலம் (2006) தொடக்கம் இன்று வரை இணையத்தில் பலவகையில் தொடர்பு கொண்டவர் எனது அன்பு நண்பரும்  எமது கதை இணைப்பாளருமான திரு.ஏலையா முருகதாசன் அவர்கள் இவர் மிகச்சிறந்த எழுத்தாளரும் சமூகஆர்வலுரும் ஆவார் எமது பண்ணாகம் இணையத்தின் 8ம் ஆண்டு நிறைவில் பண்ணாகம் இணையத்தில் ஒரு தொடர்கதையை பல எழுத்தாளர்கள் மூலம் எழுத தீர்மானித்து இருந்தோம் அதற்காக முருகதாசன் அவர்ளுடன் கதைத்து ஒருசில எழுத்தாளர்களைத் தேடிய போது முதலில் கல்லாறு சதீஸ் அவர்களின் தொடர்பு கிடைத்தது அவர்தான் முதற்பகுதியை எழுதுவதாக முன்வந்தார் பின்னர் திரு.நோர்வே நக்கீரன் அவர்களின் தொடர்பு கிடைத்தது அவர் இதற்கான ஒரு ஆரம்ப அறிமுக காணொளி ஒன்றை உருவாக்கி முகநூலிலும் இணையங்களிலும் வெளியிட்டபின்னர் பல எழுத்தாளர்கள் ஒரு வலைத் தொடரால் ஒருவர் பின் ஒருவராக அறிமுகமாகி இன்று உலகத்தின் நாலாபக்கமும் இருந்து 26 எழுத்தாளர்கள் எழுதிய ஒரு கதையாக மிளிர்ந்து நின்று சாதனைபடைத்து அத்துடன் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் மலர்வதற்குக் காரணமாகவும் அமைந்தது.
இக்கதைகளை வெளியிட முன்வந்த இணையத்தளங்கள்.
பண்ணாகம் இணையத்தளம் (திரு. இக.கிருஸ்ணமூர்த்திஇ ஜேர்மனி)இ அக்கினிக்குஞ்சு இணையத்தளம் (திரு. யாழ் சுதா பாஸ்கர்இஅவுஸ்திரேலியா) வளர்நிலா இணையத்தளம்இ திரு.பிரியாலயம் துரைஸ்இ பிரானஸ்) அலைகள் இணையத்தளம்இ (திரு.கே.எஸ்.துரைஇ டென்மார்க்) யாழ் இணையத்தளம் (லண்டன் ஒத்துழைப்பு திருமதி.நிவேதா உதயராயன்) கோட்டைக்கல்லாறு இணையத்தளம்இ (திரு.நவரோஜ் அருள்பிரகாசம்இ மட்டக்களப்புஇ இலங்கை) எஸ்ரிஎஸ் இணையத்தளம்இ ஜேர்மனி( திரு.எஸ்.தேவராஜா)தமிழ்முரசு இணையத்தளம்இ அவுஸ்திரேலியா( திரு. பாஸ்கரன்) நீயூலங்கா (கனடா) யாழ் ஓசை (யாழ்ப்பாணம்) ஆகிய இணையத்தள ஆசிரியர்களுக்கும் பணிவன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைத்து இணையங்களுக்கும்  அதன் ஆசிரியர்களுக்கும் எம்முடன் இணைந்து எழுத முன்வந்து தவிற்கமுடியாத காரணங்களால் எழுதமுடியாமல் ஒதுங்கிய எழுத்தாளர்களுக்கும். எனது பயணத்தில் கரம் கொடுத்து எழுத்து ஒப்புநோக்காளராகவும் உதவியாளராகவும் செயற்பட்ட எனது மனைவி திருமதி.கி.சர்வாஐpனிதேவி அவர்களுக்கும் அவ்வப்போது தொலைபேசியில் ஊக்கம் தந்து உதவிய திருமதி. மு.nஐயநாயகி அவர்களுக்கும் எமது முதல் நன்றிகள்.

வலிகள் சுமந்தோம்.

இக்கதையின் முதல் பெயர்த் தெரிவில்  விழுதல் என்பது…. ஏன்றே சூட்டியிருந்தோம் கதை மிகவும் ஆர்வமாக தொடர்ந்து எமக்கு புது முகங்கள் அறிமுகமானார்கள் பலமணி நேரங்கள் செலவாகியது  கதையின் 9ம் பகுதிவரை பற்பல சிரமங்களும் தடைகளும் எமக்கு அடிக்கடி ஏற்பட்டவாறு இருந்தது அவற்றை நாம் மிகுந்த சிரமங்கள் மத்தியில் தீர்வு கண்டு தொடர்ந்தோம் ஒரு கட்டத்தில் என்னால் தொடரந்;து செய்ய முடியாதவாறு தொழிற்சாலையில் விபத்து காரணமாக சில வாரங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் அதனால் இதை இத்துடன் நிறுத்தி விடுவோம் என்று கூட எமக்கு எண்ணத் தோன்றியது முருகதாசன் அவர்கள் தொலைபேசியில் என்ன செய்யலாம் எனக்கும் சில பிரச்சனைகளாக உள்ளது பலமணிநேரம் கணனிமுன் உட்காந்து செய்வது சிக்கலாக உள்ளது என்றார்  ஆனாலும் மனத்தை திடருப்படுத்திக் கொண்டு வைத்தியசாலையில் இருந்து கொண்டே மடிக்கணனி மூலம் 4 கிழமைகள் தொடர்கள் கிடைத்தததும் வாசித்து சரிபார்த்து இணையத்திற்கான எழுத்துரு மாற்றி இணையங்களில் வலம்வர செய்வது ஒரு அலுவலக வேலையாக செய்வதை பார்த்த தாதி ஒருவர் என்ன ஓய்வெடுக்காது இப்படி செய்யக் கூடாது என தடைகள் செய்தார். தொடர முற்படும்போது திரு.முருகதாசன் அவர்களின் குடும்பத்தில் அவர் மகனின் சிறு குழந்தையின் இறப்பு அவரை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தி இருந்ததால் மிக சிக்கலாகியது எமது கதைத் தொடர்புகள.;  இப்படி வந்த தடைகள்  கண்டு மனம்வருந்திய எமக்கு ஒரு எண்ணம் தோன்றியது  முதலில் இந்த கதையின் பெயரை மாற்றுவோம் என்றார்   விழுதல் என்பது… சரியில்லை அதனால் பலதடவை விழுந்து விழுந்து வருகின்றோம் என முருகதாசன் அவர்கள் கூற எனக்கும் சரியாக பட்டது அதனால் எப்படி பெயர்மாற்றுவது என மற்றைய  சில எழுத்தாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்தோம் அதன்பயனாக முடிவில் எழுகையே என்ற சொல்லை சேர்த்து விழுதல் என்பது எழுகையே என மற்றி எல்லோருக்கும் அறிவித்தோம். ஆதன்பின் பலர் ஊக்கம் தந்தார்கள் எம்முடன் மேலும் 16 எழுத்தாளர்கள் இணைந்தார்கள்  புதிய இணையத்தள ஆசிரியர்கள் பிரசுரிக்க முன்வந்தார்கள். பெயர்மாற்றம் மிக உற்சாகம் தந்தது.
                   இதை வாசிப்பவர்கள் சிலர் என்ன இது  பெயர்மாற்றினால் எல்லாம் நன்றாக நடக்கிறதா என தமது மனதில் கேட்பது எனக்கு தெரிகிறது. இதை நம்பிக்கை என கூறலாம் சிலர்மனதில் இப்படியர்ன துன்பங்கள் வரும்போது மனதை திடப்படுத்த எடுக்கும் ஒரு உபாயமாக இதைக்கருதலாம் ஆனால் அது எமக்கு ஒரு வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறது நம்பினார் கைவிப்படார்.

அறிவு உறவுகள்

நாம் ஒரு சமூகத்தில் ஏற்பட்ட ஒரு சில விடயங்களை பல கோணங்களில் பல அறிவுஜீவிகளைக் கொண்டு ஒரு பாதையில் ஒருமித்து வந்து அவர்கள் எழுத்தால் சொல்லவைப்பதே எமது நோக்கமாகும்  அதனால்தான் இப்படியான ஒரு அகதியின் கதையை காட்டி அவர்கள் பெற்ற அனுபவங்கள்இ உண்மைகள்இ எண்ணங்கள் அதை பலவிதமாக பலவடிவாக பலரும் ஏற்கக் கூடிய பல முடிவுகளாக  ஒரு கொடியில் பலவித மலர்களாக கடந்த ஒரு வருடமாக சிறப்புடன் செய்திருக்கின்றோம் என்ற எண்ணமும் இத்தனை அறிவு கொண்டவர்களை நாம் சந்திக்க கிடைத்த ஒரு களம் கண்ட பெருமையில் பூரித்து நிற்கின்றோம். எனவேதான் 26 எழுத்தாளர்கள் எழுதிய பெருந் தொடருக்கு ஒரே ஒரு முடிவைக் கொடுக்கவிரும்பாமல் 4 திசை முடிவுகளாக  4 எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது இந்த நான்கு முடிவில் ஏதோ ஒரு முடிவை மற்றைய எழுத்தாளர்கள் ஓரளவாகவோ அல்லது முழுமையாகவோ கொண்டிருப்பார்கள் என்பது எமது எண்ணமாகும் இது வாசகர்களுக்கும் பிடித்திருக்கும் என எண்ணுகின்றோம். இறுதி நிலையில் ஒரு ஒளிப்பதிவில் கதையின் முழுமையை தயாரித்துக் காட்டிய திரு நோர்வே நக்கீரனது செயல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இணையத்தளத்தில் ஒரு புரட்சி

கதைகள் பல வகையாக உள்ளது  சிறுகதைஇ தொடர்கதைஇ நாவல் என்பன ஒருவரால் மட்டும் எழுதப்படுகிறது. அதில் முழக்கமுழக்க அவரது எண்ணங்கள் முடிவுகள் கருத்துக்கள் மட்டுமே இடம்பெறும். அதை நாம் மாற்றியமைத்து ஒரு தலைப்பில்  ஒரு கதை நாயகி நாயகனுடன் 54 வாரங்களாக இணையங்களில் உடனுக்குடன் அவர்களின்  தொடருக்கு உயிர் கொடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒருவருக்கு ஒருவர் முன் அறிமுகமில்லாத முகம் தெரியாத  26 எழுத்தாளர்கள் இதுவரையில் எம்மோடு இணைந்து கொண்டு எழுதிய 26 எழுத்தாளர்கள்.
1. திரு.கல்லாறு சதீஸ் - சுவிற்சலாந்து2. திரு.ஏலையா க.முருகதாசன் - ஜேர்மன 3.  திருமதி. நிவேதா உதயராயன் - லண்டன்  4. திரு.வண்ணை தெய்வம் - பிரான்ஸ் 5. திரு.நோர்வே நக்கீரா – நோர்வே 6. திரு.கே.எஸ் சுதாகர் - அவுஸ்திரேல7. திரு பண்ணாகம் இ.க.கிருஸ்ணமூர்த்தி – ஜேர்மனி  8. திருமதி.ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா – கனடா 9. திரு. லெ. முருகபூபதி – அவுஸ்திரேலியா          10. திரு. குரு அரவிந்தன் - கனடா 11. திரு. நயினை விஜயன் - ஜேர்மனி 12 .திரு. விக்கி நவரட்ணம். – சுவிற்சலாந்து 13. திரு. கே.எஸ்.துரை (கே.செல்லத்துரை) – டென்மார்க்14. திருமதி. தேனம்மை லக்ஸ்மணணன் - கைதராபாத்இ இந்தியா 15. திரு.எம்என்எம். அனஸ் (இளைய அப்துல்லா)  - லண்டன் 16. திரு.பன்னிருகரம் ஜெயக்கொடி (பொலிகை ஜெயா) - சுவிற்சலாந்து 17. திரு. சசிகரன் பசுபதி - இங்கிலாந்து 18. திரு. இணுவையூர் சத்தியதாசன் - டென்மார்க் 19. திரு.மதுவதனன் மௌனசாமி – டென்மார்க் 20. திரு. காசி. வி.நாகலிங்கம் - ஜேர்மனி 21. திரு.ஜெயராமசர்மா – அவுஸ்திரேலியா 22. செல்வன். குலராஜா மகேந்திரன் - பிரான்ஸ் 23. திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க் 24. திருமதி.மாலினி மாலா – ஜேர்மனி 25. திரு.நித்தியானந்தன் சகாதேவன்துரை – யாழ்ப்பாணம்இ இலங்கை 26. திருமதி.அருண் விஜயராணி – அவுஸ்திரேலியா .

ஒன்றிணைத்து அவர்கள் கதையை  பத்து (10) இணையத்தளங்களில் பிரசுரித்து இணைய வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு சாதனையை நம் அனைவரும் புலம்பெயர் தேசங்களிலும் இஇலங்கைஇஇந்தியாவிலும் செய்து முடித்திருப்பதை திரும்பிப்பார்த்து பிரமித்து நிற்கின்றோம். இதற்காக  தமிழ் எழுத்தாளர் இணைய அகம் பெருமைப்படுகின்றது.

நாம்  அனைவரும் எது வித பலனனையும் எதிர்பாராது பல ஆயிரம் மணித்துளிகளை செலவு செய்து இக்கதையை உருவாக்கிய எமது ஒற்றுமையான சேவையை  நினைத்து பார்த்து பெருமிதம் அடைகின்றேன்.

           ’’ஒன்று பட்டால் உண்டு வாழ்வு  ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு’’

நன்றி         நன்றி         நன்றி       நன்றி


இனிய நினைவுகளுடன் உங்கள்

பண்ணாகம் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
நிர்வாக பொறுப்பாளர்

Tamil Writers Net Portal (Tamil WNP)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நன்றி..........நன்றி....

 எழுதியவர்  ஏலையா திரு.க.முருகதாசன்


15.06. 2014 லிருந்து 10.07.2015 வரை எம்மனைவரினதும் „விழுதல் என்பது எழுகையே“ என்ற நெடுந்தொடர் இலக்கியப்பயணத்தில்...........

முதலில் இதுவரையில் எம்மோடு இணைந்து கொண்ட 26 எழுத்தாளர்களானஇ

1. திரு.கல்லாறு சதீஸ் - சுவிற்சலாந்து
2. திரு.ஏலையா க.முருகதாசன் - ஜேர்மனி
3. திருமதி. நிவேதா உதயராயன் - லண்டன்
4. திரு.வண்ணை தெய்வம் - பிரான்ஸ்
5. திரு.நோர்வே நக்கீரா – நோர்வே              
6. திரு.கே.எஸ் சுதாகர் - அவுஸ்திரேலியா        
7. திரு பண்ணாகம் இ.க.கிருஸ்ணமூர்த்தி – ஜேர்மனி
8. திருமதி.ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா – கனடா        
9. திரு. லெ. முருகபூபதி – அவுஸ்திரேலியா        
10. திரு. குரு அரவிந்தன் - கனடா
11. திரு. நயினை விஜயன் - ஜேர்மனி
12 .திரு. விக்கி நவரட்ணம். – சுவிற்சலாந்து
13. திரு. கே.எஸ்.துரை (கே.செல்லத்துரை) – டென்மார்க்
14. திருமதி. தேனம்மை லக்ஸ்மணணன் - கைதராபாத்இ இந்தியா
15. திரு.எம்என்எம். அனஸ் (இளைய அப்துல்லா)  - லண்டன்
16. திரு.பன்னிருகரம் ஜெயக்கொடி (பொலிகை ஜெயா) - சுவிற்சலாந்து
17. திரு. சசிகரன் பசுபதி - இங்கிலாந்து
18. திரு. இணுவையூர் சத்தியதாசன் - டென்மார்க்
19. திரு.மதுவதனன் மௌனசாமி – டென்மார்க்
20. திரு. காசி. வி.நாகலிங்கம் - ஜேர்மனி
21. திரு.ஜெயராமசர்மா – அவுஸ்திரேலியா
22. செல்வன். குலராஜா மகேந்திரன் - பிரான்ஸ்
23. திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க்
24. திருமதி.மாலினி மாலா – ஜேர்மனி
25. திரு.நித்தியானந்தன் சகாதேவன்துரை – யாழ்ப்பாணம்இ இலங்கை
26. திருமதி.அருண் விஜயராணி – அவுஸ்திரேலியா
ஆகியோருக்கும்இ  இந்நெடுந்தொடரை இலக்கியப் பயிராக்க விளைநிலத்தளம் தந்துதவியஇ
பண்ணாகம் இணையத்தளம் (திரு. இக.கிருஸ்ணமூர்த்திஇ ஜேர்மனி)இ அக்கிணிக்குஞ்சு இணையத்தளம் (திரு. யாழ் சுதா பாஸ்கர்இஅவுஸ்திரேலியா) வளர்நிலா இணையத்தளம்இ திரு.பிரியாலயம் துரைஸ்இ பிரானஸ்) அலைகள் இணையத்தளம்இ (திரு.கே.எஸ்.துரைஇ டென்மார்க்) யாழ் இணையத்தளம் (லண்டன் ஒத்துழைப்பு திருமதி.நிவேதா உதயராயன்) கோட்டைக்கல்லாறு இணையத்தளம்இ (திரு.நவரோஜ் அருள்பிரகாசம்இ மட்டக்களப்புஇ இலங்கை) எஸ்ரிஎஸ் இணையத்தளம்இ ஜேர்மனி( திரு.எஸ்.தேவராஜா)தமிழ்முரசு இணையத்தளம்இ அவுஸ்திரேலியா( திரு. பாஸ்கரன்) ஆகிய இணையத்தள ஆசிரியர்களுக்கும் பணிவன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நெடுந்தொடரை வாசித்து விமர்சனங்களையும் நல்ல கருத்துக்களையும் தந்துதவிய வாசகர்களுக்கும் பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இனிஇ
பல ஆண்டுகளுக்கு முன்பாக சுதந்திரன் பத்திரிகையில் செங்கை ஆழியானும்இ செம்பியன் செல்வனும் இணைந்து எழுதிய”நிழல்கள்” என்ற தொடர்கதை என்னுள் ஏற்படுத்திய அதிர்வுதான் எமது இந்நெடுந்தொடருக்கான அத்திவாரமாகும்.
பல படைப்பாளிகளை இணைத்து நெடுந்தொடர்கதை ஒன்றை எழுத வேண்டும் அதனை உங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்க முடியுமா என பண்ணாகம் இணையத்தளத்தின் ஆசிரியர் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்களிடம் கேட்டபொழுது அவர் மனமுவந்து ஒப்புக் கொண்டதுடன் அன்றிலிருந்து இன்றுவரை நாங்களிருவரும் சமாந்தரமாக உழைத்ததன் பயனாக உங்களனைவரையும் சந்திக்கிறோம். முக்கியமாக அவரின் ஒத்துழைப்பும் பங்கும் அளப்பரியது.
எமது இத்திட்டத்தை செயல்படுத்த மற்றைய இணையத்தளங்களின் ஆசிரியர்களுடனும் தொடர்பு கொண்டோம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இத்தொடரின் தொடர்ச்சிகளை பதிவேற்றம் செய்ய முடியுமா என அவர்களை மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தாராளமாக என மகிழ்வோடு ஒப்புக் கொண்டனர்.
ஒரு திரைப்படத்தை ஒரே நாளில் பல திரையரங்குகளில் வெளியீடுதற்கு ஒப்பாக பல இணையத்தளங்களில் ஒரே நாளில் இத்தொடர் வெளிவர வேண்டுமென விரும்பினோம்.
சொல்வதற்கு கசப்பான உண்மையானாலும் எமது ஊடகங்களின் போக்கும் இலக்கிய வட்டங்களும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே ஆரம்பகாலங்களில் செயல்பட்டன என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ஒரு பத்திரிகையில் வெளிவந்த கதையை இன்னொரு பத்திரிகை வெளியிட மறுத்தன. பத்திரிகை ஊடகங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி கண்ட இணையத்தளங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இப்போக்கு இருந்ததெனினும் எமது இந்நெடுந்தொடர் அப்போக்கினை தகர்த்தெறிந்து புதிய பாதையை வகுத்துக் கொண்டது.
2014 ஆண்டு நான் எனக்கான முகநூல் கணக்கொன்றை ஆரம்பித்தவுடன் பல எழுத்தாளர்கள் இணைந்து தொடர்கதை ஒன்றை எழுதுகின்ற திட்டத்தை வெளிக்கொணர்ந்தவுடன் பலர் அதற்கு விருப்பு வாக்கினை இட்டிருந்தார்கள்.
ஆரோக்கியமான கருத்து என சுவிஸ் வாழ் திரு.கல்லாறு சதீஸ் எனது முகநூலில்  தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.அவரின் கவிதைகளை ஈழநாடு பத்திரிகையிலும் தமிழருவி பத்திரிகையிலும்  வாசித்திருந்தேன். அவற்றை எல்லாம் குறிப்பிட்டு அவருக்கு முகநூல் வழியாகச் செய்தி அனுப்பிய போதுஇ அவர் எனது தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டு உடனடியாகவே தொடர்பு கொண்டார்.
எமக்கிடையில் தொலைபேசி வழியாக நீண்டநேர உரையாடலின் மூலமாக் ஒருவருக்கொருவர் எமக்கிருந்த இலக்கிய ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டோம்.
இங்கிருந்துதான்  நெடுந்தொடர் ஆரம்பித்தது…….. இதுதான் ஊற்றுவாய்……
இத்தொலைபேசி உரையாடலின் போது அவர் தான் எழுதி வைத்திருந்த கதையொன்றினை தொலைபேசியில் பார்த்து வாசித்துக் காட்டினார். அவர் அக்கதைக்கு கொடுத்த பெயர் “விழுகை என்பது எழுச்சியின் வடிவமே” என்பதாகும்.
அவர் வாசித்து முடித்ததும் “சரி இதுதான் கதையின் ஆரம்பம் ; இங்கிருந்து ஆரம்பிப்போம் “ என உடன் பதில் சொன்னேன். அன்று மாலையே இக.கிருஸ்ணமூர்த்தி அவர்ளுடன் தொடர்பு கொண்டு கல்லாறு சதீஸ் அவர்களின் கதையிலிருந்து ஆரம்பிப்போம்  என்றேன். அவரும் சம்மதித்தார்.
பொலிகை ஜெயாஇவிக்கி நவரட்ணம்இவேலனையூர் பொன்னண்ணா இஎம்என்எம் அனஸ்இ நோர்வே நக்கீரா ஆகிய எழுத்தாளர்களை கல்லாறு சதீஸே அறிமுகம் செய்து வைத்தார்.நெடுந்தொடர் வெளிவந்து கொண்டிருந்த போது உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார்.
நெடுந்தொடர் வெளிவருவதற்கு முன்னர் அதுபற்றிய முன்னோட்டத்தை காணொளி மூலம் வெளியிட்டால் புதிய உத்தியாக இருக்கும் என நினைத்து நோர்வே நக்கீராவிடம் ஒரு காணொளியைத் தயாரித்துத் தரமுடியுமா எனக் கேட்ட போது உற்சாகத்துடனும் துடிப்புடனும்  ஒப்புக் கொண்டார். அவர் தயாரித்த காணொளி இலக்கியத்தை ஒளி ஊடகத்திற்கூடாக கொண்டு வந்த முதல் முயற்சி என நினைக்கிறோம்.
திரு.நோர்வே நக்கீராவிற்கு இவ்வேளை பணிவான நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறோம்.
கனடாவில் வாழ்ந்துவரும் திருமதி.ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா அவர்கள்தான் முருகபூபதியை அறிமுகம் செய்து வைத்தவர். கனடா வாழ் பல எழுத்தாளர்களை இவர் அறிமுகம் செய்து வைத்திருந்தார். சிலர் பங்கு கொள்ள முடியாத தமது நிலைமைய விளங்கப்படுத்தி பதில் போட்டார்கள். பலர் பதில் போடவில்லை. எமது வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் விட்டவர்களில் மிகச்சிறந்த பழம்பெரும் எழுத்தாளர்களும் உண்டுஇ இந்த முயற்சி தோல்வியில் முடியும் என்றவர்களும் உண்டுஇ இவருடன் எழுத மாட்டேன் என்று மறுத்தவரும் உண்டு. எதுவானாலும் தமது முடிவை துணிவுடன் பதில் போட வேண்டுமென்ற பண்பு தெரியாதவர்களும் உண்டு.
ஓன்றுக்கு மேற்பட்ட பல எழுத்தாளர்கள் எமக்கு முன்னரே இத்தகு திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கதையை எப்படி நகர்த்துவது என்பதை தமக்குள்ளே உரையாடியே தத்தமது பகுதிகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால் எமது கதைத் திட்டம் அபபடியானது அல்ல.
இது ஒரு புதிய உத்திஇ புதிய அணுகுமுறை. படைப்பாளிகள் ஒருவருடன் ஒருவர் உரையாடும் போது தெரிந்தோ தெரியாமலோ கதை சம்பந்தமாக ஒருவர் கொணடுள்ள எண்ணத்தை மற்றவர் உள்வாங்கிக் கொள்ளும் நிலை தோன்றுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும் என்பதால் அதனை மறுத்திருந்தோம்;. ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளாமல் தத்தமது பகுதியை எழுத வேண்டுமென்பதே எமது வேண்டுகோள். அதற்கான காரண காரியங்களை மிகத் தெளிவாக கதைக்கான விதிக்கூடாக ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரவர் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்தோம்.
எங்கள் இந்த யோசனையை மிகச்சிறந்து படைப்பாளியான திரு.முருகபூபதி அவர்கள் அவ்வளாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து அவருடன் மேற்கொண்ட எமது கருத்துப் பகிர்வினால் அவர் எம்முடன் இணைந்து கொண்டார்.
ஓரிருவர் தவிர்ந்த ஏனைய படைப்பாளிகள் அனைவருடனும் முகநூலூடாகவும் மின்னஞ்சல் ஊடாகவுமே தொடர்பு கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றினோம். உண்மையும் வெளிப்படைத் தன்மையுந்தான் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்குக்  காரணம். ஒவ்வொருவரின் மின்னஞ்சலை மிகவும் கவனமாக பாதுகாத்தோம். கடிதங்களை தொகுதியாக அனுப்புவதைத் தவிர்த்தோம்.
ஓவ்வொருவரிடமும் தனித்தனியாகவே மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டோம். எமது திட்டத்தை மட்டுமல்ல எமது நிர்வாகத்தையும் ஒழுங்காகச் செய்வதில் மிகுந்த அக்கறை காட்டினோம்.

இவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை…
மின்னஞ்சல் ஊடாக படைப்பாளிகளிடமிருந்து கதையைப் பெறும் இணைப்பாளராக நானும்இ  கதையை இணையத்தளங்களுக்கு அனுப்பி வைக்கின்ற பொறுப்பாளராக திரு.இக.கிருஸ்ணமூர்த்தி ஆகிய நாங்கள் இருவரும் எமக்குள் எமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாட்டுக்கமையவும் கட்டமைப்புக்கு  அமையவும் புரிந்துணர்விற்குட்பட்டு கதையை இணையத்தளங்களுக்கு வெளியீட்டுப் பொறுப்பாளர் அனுப்பிக் கொண்டிருந்த நாட்களில் ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது.
திரு.இக. கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது என்ற செய்தியால் கவலை அடைந்தேன். இரண்டாம் முறையும் சத்திரசிகிச்சை இடம்பெற்றது.கதையை சிலநாட்களுக்க நிறுத்தி வைப்போமா என அவரிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் இது “அண்ணை ஒன்றும் யோசிக்க வேண்டாம்இ இந்தக் கதையை வெளிக் கொணர நீங்கள் எவ்வளவோ கஸ்டப்படுகிறீர்கள். எல்லாப் பகுதிகளையும் பிரித்துப் பிரித்து இணையத்தளங்களுக்கும்  அனுப்பிட்டேன் என்றார். பராமரிப்பு நிலையத்தில் இருந்த போதும் கiதையை அனுப்பிக் கொண்டிருந்தார். திரு.இக.கிருஸ்ணமூர்த்திக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது ஈடாகாது.
இக்கதைக்கான தலைப்பை மாற்றி மாற்றி அமைத்ததற்கு காரணம் மனித சக்திகளுக்கு அப்பால் இறைவனின் சக்தி உண்டு என்பதை நாங்களிருவரும் நம்பினோம்;. அதே வேளை இதனை விவாதப் பொருளாக்கவும் விரும்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு எனது பேரப்பிள்ளை காலமானபோது நாங்கள சோகத்தில் மூழ்கிக் கிடந்த வேளையில்கூட கதையை நிறுத்த மனம் வரவில்லை….இப்படிப் பல…. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மனந்தளராது எமது இத்திட்டத்தில் தடைகள் ஏற்படாது இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர் திருமதி. சர்வாஜினிதேவி கிருஸ்ணமூர்த்தி அவர்கள் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஒரு சந்தர்ப்பத்தில் கஸ்டம் வருகின்றது என்பதற்காக பெயரை மாற்றுவதா என என்னிடம் கேட்டார்.
படைப்பாளிகள் அவரவரிடத்திலிருக்கும்  கணிணி வளங்களுக்கூடாக தங்கள் பகுதிகளை அனுப்பும் போது அவற்றை எமது செயல்பாட்டுக்கூடாக மாற்றுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதுண்டு.

கதைகளில் எமது கரங்கள்…..
கதைகளில் எமது ரச்அப்  இருந்ததை மறுக்கவில்லை. ஆங்காங்கே தொடர்புகளை இழுத்து இறுக்கியிருக்கிறோம். எவருடைய பெயரையும் வெளியிட விரும்பவில்லை. அது நாகரிகமல்ல.
டென்மார்க்கில் கதை நடந்து கொண்டிருக்கையில் கதையில் சுவிஸ் பிராங்கை குறிப்பிட்டதும் ஞாயிற்றுக்கிழமை டென்மார்க் சந்தை திறந்திருந்தது என்று எழுதியிருந்த போது அது சரியானதுதானா என்பதை அறிய டென்மார்க்கிற்கு ரெலிபோன் செய்து சரியான தகவலைக் கேட்டு கதையைச் சரிப்படுத்தினோம்.
சுவிஸ்ஸில் குளிர்காலத்தில் பூங்காவிற்குள் போவது கஸ்டமானது என்று சுவிஸ்ஸிலிருந்து தொலைபெசி ஊடாக எனக்குத் தகவல் சொன்ன போது கண்ணாடிச் சுவர் கொண்ட பூங்காவை கதைக்குள் உருவாக்கினேன்.
இக்கதையில் இணைந்தெழுதிய ஒரு படைப்:பாளி  தனது தொடர்ச்சியில் தமிழ்ப் பெண்கள் விபச்சார விடுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என எழுதியிருநதார்.
திரு.இக.கிருஸ்ணமூர்த்தியிடம் இதுபற்றிச் சொன்னேன். அதை எடுத்துவிட்டுத்தான் பிரசுரிப்போம் என்றார். ஆனால் எழுதியவரின் அனுமதி இல்லாமல் அதைச் செய்ய எங்களுக்கு உரிமையில்லை என்பதை உணர்ந்து அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “தமிழ்ப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என எழுதியிருக்கிறீர்கள்…..” என நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் “அந்தச் செய்தி எனக்குக் கிடைத்த செய்தி  அந்த உண்மையைத்தான் எழுதினேன் என்றார்இ தொடர்ந்து  அவர் நீங்கள் இக்கதைத் திட்டத்திற்கான எடிட்டர் திருத்துவதற்கும் நீக்குவதற்கும் உரிமை உண்டு பரவாயில்லை நீக்கிவிடுங்கள் என்றார்.
அவரின் மனதை காயப்படுத்திவிட்டேனோ என எனது மனம் குறுகுறுக்க “இல்லை அது இருக்க வேண்டுமென்றால் அப்படியே விட்டுவிடுகிறேன்” என்றேன் அவர்  மீண்டும் வலிறுத்தி நீக்கச் சொன்னார். அவர் செய்து உதவியை மறக்க முடியாது. முழங்கை உடைந்த வேளையில்கூட அதையும் பொருட்படுத்தாது கைகளால் எழுதி அதை ஸ்கான் செய்து அக்கினிக்குஞ்சு இணையத்தள ஆசிரியருக்கு அனுப்பி அவர் தனது நண்பரைக் கொண்டு கணிணியில் பதிவு செய்து அனுப்பி வைத்தார்.
திரு. யாழ் சதா பாஸ்கருக்கும் இவ்வேளை நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த ஒருவருட காலத்தில் நாங்களிருவரும் இந்நெடுந்தொடர்பாக சந்தித்தவை ஏராளம். பகிர்ந்து கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய உண்டு.
நிறைவுப்பகுதியின் காணொளியைத் தயாரித்த திரு.நோர்வே நக்கீராவிற்கு மனமார்ந்த நன்றிகளைச் செலுத்துகின்றோம்.இக்கதையில் இன்னும் இரண்டு படைப்பாளிகள் எழுதவிருந்தனர்.ஒருவர் பன்முக ஆற்றலாளர் விரிவுரையாளர் திரு.ஆதவன் கதிரேசர்பிள்ளை. அவரிடம் கேட்டோம்இ அவர் 133 பக்கங்களையும் வாசிக்க வேண்டுமே எனத் தயங்கி நான் படம் ஒன்றில் நடிக்க வேண்டியிருப்பதால் எனக்கு உதவி செய்தால் நல்லது என்றார். நான் அதற்கு சம்மதித்தேன். அவர் கவிதைத் தொடரில் பங்குபற்றி கவிதையும் அனுப்பிவிட்டார்.
இன்னொரு படைப்பாளி திரு.இந்து மகேஸ் அவர்கள். அவர் சொன்ன காரணங்கள் தனது கணிணி பலநாட்களாக பழுதடைந்துவிட்டதால் கதையை தெடர்ந்து வாசிக்க முடியாமல் போய்விட்டதென்றும் இனி முதலிலிருந்து கதையை வாசிக்க இயலாமலிருப்பதற்கு தனது உடல்நிலை ஒத்துவரவில்லை என்றதுடன் இன்னொரு திட்டத்தில் இணைவதாகச் சொன்னார்;இ ஏற்றுக் கொண்டேன்.
நிறைவுப் பகுதியை ஐந்து படைப்பாளிகளைக் கொண்டு எழுதும் யோசனையைக் திரு.இக. கிருஸ்ணமூர்த்தியின் ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தி நிறைவு செய்வதாக எண்ணிய போது கல்லாறு சதீஸ் அவர்கள் தொழில் நிமித்தமாக தன்னால் எழுத இயலவில்லை என்றார்.
திரு.இந்து மகேஸஇ; கதையை ஆரம்பித்த கல்லாறு சதீஸ் அவர்களைக் கொண்டே கதையை நிறைவு செய்யுங்கள் அல்லது என்னை எழுதச் சொனனார். ஆனால் நாங்கள் எழுதுவதிலும் பார்க்க எமது வேண்டுகோளை ஏற்று ஒருவருடமாக எம்மோடு பணித்தவர்கள் மட்டுமல்ல இனிமேலும் எம்மோடு பயணிக்கப் போகின்ற 26 படைப்பாளிகளில் நால்வரை எழுதுமாறு வேண்டிக் கொண்டோம். அவர்களும் சம்மதித்து ஒத்துழைப்பு வழங்கி எழுதி நிறைவு செய்திருக்கிறார்கள்…… அவர்களுக்கு நன்றி….நன்றி.
இந்நெடுந்தொடர் ஒரு தமிழ் அகதியின் கதை. இக்கதையில் உள்ளீடாக சொல்லப்பட்ட ஒரு அகதி சந்தித்த சம்பவங்களை சோகங்களை அவலங்களைவிட அகதிகளாக புலம்பெயர்ந்த எம்மவர்கள் சந்தித்தவை இன்னும் ஏராளம் ஏராளம் உண்டு. அதிலும் பெண்கள் சந்தித்தவை எழுத முடியாதவை சொல்ல முடியாதவை.
ஆனால் அவற்றை எங்கேயோ ஒரு எழுத்தாளன் துணிவுடன் எழுதும் காலம் வரும். சில வேளை எம்முடன் இணைந்து நிற்கும் படைப்பாளிகள்கூட எழுதலாம்.
பல ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் படைப்பாளிகளை நாம் இணைத்தொரு எழுத்துப்புரட்சியை செய்தோம் என்பதில் நாமிருவரும் உங்களை இணைத்துக் கொண்டு மகிழ்கிறோம்.
ஒரு விடயத்தை இலக்கிய உலகிற்கு ஓங்கிச் சொல்லியுள்ளோம். ஒரு படைப்பாளியுடன் இன்னொரு படைப்பாளியை அவரவரவர் ஆற்றல் ரீதியாக ஒப்பிட முடியாது என்பதையே. ஓவ்வொருவரும்  தனித்தனி ஆற்றல் கொண்டுள்ளவர்கள் என்பதை இத்தொடர் பலருக்கு உணர்த்தியிருக்கலாம்.
அன்புமிகு படைப்பாளிகளே இணையத்தள ஆசிரியர்களே வாசகர்களே எமக்கு ஆலோசனை வழங்கிய நல்ல உள்ளங்களே முகநூல் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் மீண்டுமொருமுறை செலுத்துகின்றோம்.ஊரிலும் புலம்பெயர் நாட்டிலுமாக 47 வருட கலை இலக்கிய பொதுவாழ்வில் 30 வருட எழுத்துலக வாழ்வில் எனது மனைவி வழங்கிய ஒத்துழைப்பு ஏராளம்இ அவருக்கும் எனது அன்பான நன்:றிகள்.
எனது மூத்தமகன் தொiபேசியில் தெடர்பு கொள்ளும் போதெல்லாம் “கதை எப்படிப் போகின்றதுஇ இங்குள்ள அறிவுசார்ந்த விடயங்களை கதையில் கொண்டுவரப் பாருங்கள் “ என ஆலோசனை வழங்குவார்இ அவருக்கும் எனது நன்றிகள்.
இனிவரும் திட்டங்களிலும் நீங்களும் எங்களுடனே வருவீர்கள். நீங்கள் எங்கள் பாசத்துக்குரியவர்கள்.

இனி கவிதைத் தொடரை விரைவில் ஆரம்பிக்கப் போகிறோம்…..

அன்புடன்.
ஏலையா க.முருகதாசன்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

Tamil Writers Net Portal
Mr.E.K.Krishnamoorthy
Editor of Pannagam.com
fomer Editor of Namathu Ilakku
News paper
rGERMANY
Tel: 0049 15229510307
Office Tp 0049 1779750795
Skype pannagam1

No comments: