சாலைகள் இல்லாத நகரம் - த செல்வரத்னம் (லண்டன்).

இலங்கையில் உள்ள நயினா தீவு போன்ற தீவுகளுக்குப் போவதாயின் கடல்மூலம்தான். பிரயாணம் செய்ய வேண்டும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம்.  அத்துடன் நிலப்பரப்பை அடைந்த பின்னர் அங்குள்ள போக்குவரத்து மற்றைய இடங்களில் உள்ளது போன்று பஸ் கார் ‘ஓட்டோ’ வண்டி வசதிகள் உண்டு என்பதையும் நாம் அறிவோம். ஆனால் இங்கு குறிப்பிடப் போகின்ற விடயம் என்ன வென்றால் சாலை இல்லாத நகரம். அதாவது மோட்டார் பஸ் மோட்டார் கார் ஏன் மோட்டார்  சைக்கிள்  இல்லாத நகரம்.


இது இத்தாலியிலுள்ள வெனிஸ் (Venice) என்னும் நகரத்தில் நான் கண்டவை. நான் கண்ட அனுபவத்தை தமிழ் முரசு  வாசகர்களுடன் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வெனிஸ் நகரம் இத்தாலியின் வடகிழக்கு பிரதேசத்தின் adriatic கடலில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட சிறிய தீவுக் கூட்டமாகும்.  இது 5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் வியாபார கேந்திர முக்கியத்துவம் கொண்ட நகரமாக ஆரம்பிக்கப்பட்டது என்பர். ஆங்கில மேதை Shakespere தனது Merchant of Venice என்ற காவியத்தை இந்நகரத்தில் நடைபெற்ற வியாபார முக்கியத்தை ஒட்டியே படைத்திருக்கக் கூடும் என எண்ணுகின்றேன்.


வெனிஸ் நகரம் தற்போது அதிகமான உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் நகரமாகும். இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களும் அந்த தீவுக்கூட்டங்களை இணைக்கும்  பாலங்களும் அந்த நகரின் அமைப்புமாகும். 121 சிறிய தீவுகளைக் கொண்ட நகரத்தை 435 பாலங்கள் தொடுக்கின்றது. Canal Grande என்று அழைக்கப்படும் மத்திய நீர் ஓடை உல்லாசப் பிரயாணிகளைக் மிகவும் கவர்ந்ததாகும். இந்த நீர் ஓடைமூலம் Gondolaza என அழைக்கப்படும் படகு மூலம் 45 நிமிடம் பிரயாணம் செய்வதற்கு 80 யுரோ செலவாகும். இது தேர்ச்சி பெற்ற ஓட்டுனர்கள் துடுப்பு அசைவின் மூலம் வெவ்வேறு பாலங்கள் ஊடாகவும் கட்டிடங்களுக்கிடையேயும் உள்ள நீர் ஓடை மூலம் மெதுவாக ஓட்டுவார்கள.. ஆங்காங்குள்ள கட்டிடங்களைப்பற்றி நேர் வர்ணனையும் செய்வார்கள.; 
வெனிஸ் நகரம் வருடம் புரா உல்லாசப்பிரயாணிகள் சென்று வருவார்கள். ஆனால் Easter தொடக்கம் October மாதம் வரை அதிக உல்லாசப்பிரயாணிகள் சென்று வருவார்கள்.  வெனிஸ் நகரத்தில் hotel விலை எக்கச்சக்கமாக இருக்கும் ஆதலால் வெனிஸ் நகரத்துக்கு வெளியே கொழும்பு (ஆம் Colombo) என்னும் இடத்தில் தங்கி 15 நிமிடம் பஸ் மூலம் சென்று வந்தோம். London இல் உள்ள Oyster card முறை மூலம் பிரயாணம் செய்தால் செலவைச் சிக்கனப்படுத்திக்; கொள்ளலாம். வெனிஸ் நகரத்தில் தீவுக்கத் தீவு பிரயாணம் செய்வதற்கு Water Bus என்று அழைக்கப்படும் Engine Boat மூலம்தான் பிரயாணம் செய்ய முடியும். ஒரு தீவில் இருந்து மற்றைய தீவுக்குப் பிரயாணம் செய்வதாயின் London இல் உள்ளது போன்று வௌ;வேறு platform மும் வௌ;வேறு line னைப்பிரயோகப் படுத்த வேண்டும். முன்னர் குறிப்பிட்டது போன்று அங்குள்ள தீவுகளில் சாலைகள் இல்லாத படியால் பெரும்பாலான கட்டிடங்களிக்கிடையே உள்ள ஓடைகள் மூலமும் பாலங்களைக் கடந்தும் கால் நடையாகவே பிரயாணம் செய்ய முடியும். அல்லது நீர் ஓடைகள் ஊடாக படகு மூலம் பிரயாணம் செய்ய முடியும். London இல் ஒவ்வொருவருடைய வீட்டுக்கு முன்னால் மோட்டார் வண்டி நிறுத்தி வைத்திருப்பது போல் பெரும்பாலும் அவரவர் வீட்டுக்கு முன்னால் பிரத்தியேகப் படகு நிறுத்தி வைத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இங்கு Benz போன்ற விலை கூடிய கார்கள் இருப்பதைப் போல் அங்கு posh boat களையும் க்காணக் கூடியதாக இருந்தது. அவசரகாலச் சேவையும் (ambulance) படகு மூலம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.வெகு விரைவாகவும் பிரத்தியேகமாகவும் பிரயாணம் செய்வதற்கு water taxi சேவையும் உண்டு. ஒரு படகுக்கும் கூடாரத்தைக் காணவில்லை. winter காலங்களில் எப்படி பிரயாணத்தைச் சமாளிக்கின்றார்களோ தெரியவில்லை. ஆனபடியாற்றான் இக்காலங்களில் உல்லாசப்பிரயாணிகள் குறைவாக உள்ளது. ஆனால் இக்காலங்களில் சன நெருக்கடியி;ன்றி ஆறுதலாகப் பிரசித்தி பெற்ற கட்டிடங்களைப் பார்வையிடலாம். 


வெனிஸ்நகரம் உல்லலாசப்  பிரயாணிக்கான நகரமாக இருந்தாலும் அங்கு சில தீவுகளில் Glass factory களைக்காணக் கூடியதாக இருந்தது. முகமூடி (mask) கைத்தொழிலாக நடைபெற்று உல்லாசப் பிரயாணிகளைக் கவருகின்றது. வெனிஸ்நகரத்தில் பெரும் பாலும் இத்தாலியச் சாப்பாடுதான். Macdonald போன்ற உணவகங்களையும் காணக்கூடியதாக இருந்தது.
London இல் இருந்து சிக்கனமாகப் பிரயாணம் செய்வதாயின் London Stanstead Airport மூலம் Raynair சேவையைப் பயன் படுத்தலாம.; வெனிஸ்நகரத்துக்குப் பிரயாணம் செய்ய விரும்புகின்றவர்கள் மேலதிக விபரங்களுக்கு Lonely Planet போன்ற உல்லாசப்பிரயாணிகளுக்காகப் பிரத்தியேகமாக எழுதப்பட்ட புத்தகத்தின் உதவியை நாடவேண்டும். அல்லது Google உதவியை நாடலாம்.


வெனிஸ்நகரம் உரோமர் (Roman) காலத்துக்கு முன்னர் மிகவும் பிரபல்யமாகவும் அதிகாரமும்கொண்ட நகரமாகும்.                     

No comments: