இலங்கைச் செய்திகள்


ஐ.ம.சு.கூ.வின் குருநாகல் வேட்பாளர் பட்டியல் வெளியானது: மஹிந்த முதலிடத்தில்

மேர்வின், துமிந்த உள்ளிட்ட நால்வருக்கு வேட்புமனுக்கள் இல்லை

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன்: ஜனாதிபதி உறுதியாக தெரிவிப்பு

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் : 30 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நோர்வூட்டில்அஞ்சலி

ஐ.ம.சு.கூ.வின் குருநாகல் வேட்பாளர் பட்டியல் வெளியானது: மஹிந்த முதலிடத்தில்

13/07/2015 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர், வேட்பாளர் பெயர் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது.   நன்றி வீரகேசரி

மேர்வின், துமிந்த உள்ளிட்ட நால்வருக்கு வேட்புமனுக்கள் இல்லை13/07/2015 முன்னாள் பாராமன்ற உறுப்பினர்களாக மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, சரன குணவர்தன, சஜின்வாஸ் ஆகியோருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பவில்லை என கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க சென்ற போதே சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி


மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன்: ஜனாதிபதி உறுதியாக தெரிவிப்பு

14/07/2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன சற்றுமுன்னர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட அனுமதியளித்தது ஏன் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஒருவர் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றமைக்கு எக்காரணம் கொண்டும் ஆதரவு வழங்க மாட்டேன் என ஜனாதிபதி உறுதிப்பட தெரிவித்தார்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலில் தனக்கு எதிராக பல தேர்தல் கூட்டங்களை நடத்தியிருந்தார். ஆனால் நான் அமைதியாக இருந்தேன் எனவும் குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் : 30 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

15/07/2015 யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  30 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை இன்று யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவரை யாழ் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நோர்வூட்டில்அஞ்சலி

16/07/2015 மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நோர்வூட் வாத்திய கலைஞர்களின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நோர்வூட் கீழ்பிரிவு தோட்ட பாலர்பாடசாலையில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அமரர் எம்.எஸ். வியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி அன்னாரது இசையமைப்பில் ஒலித்த பாடல்களை இசைத்து அஞ்சலி செலுத்தினர்.

நன்றி வீரகேசரிNo comments: