மலரும் முகம் பார்க்கும் காலம் 20 - தொடர் கவிதை

.
„மலரும் முகம் பார்க்கும் காலம்“கவிதையின் இருபதாவது (20) கவிதையை எழுதியவர் அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவரும் தமிழ்முரசு இணையத்தள ஆசிரியரும் படைப்பாளியுமான  திரு.செல்லையா பாஸ்கரன் அவர்கள்.


வளர்பிறையாய் வாழ்ந்திடவே
வரவேண்டும் பொற்காலம்
மனம் ஏங்கித் தவிக்கிறது
மஞ்சள் வெய்யிலும்
மாலைநேரக் குளிர்காற்றும்கூட
மனதிற்கு மகிழ்வைத் தரவில்லை
நீ "வருவாய்" என்ற
ஒற்றைச் சொல் மட்டுமே
எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது
சுவாசிக்கும் காற்றில்கூட
உன் வாசத்தின் வருடல்கள்
விடுமுறையை எண்ணிப்பார்க்கும்
பள்ளிச் சிறுவனைப்போல்
உன் வருகைக்கான நாளை
சுவரெங்கும் கிறுக்கி வைக்கிறேன்
கிறுக்கலில் ஜனித்த ஓவியமாய்
நிஜத்தின் விம்பமாய் தெரிகிறது
மலரும் முகம்பார்க்கும் காலம்
பிரிவுத் துயரின் வலிகூட – இப்போ
மனதில் மழையாய் பொழிகிறது.

No comments: