காரைநகர் ஈன்றெடுத்த
கலைமகளின் தவப்புதல்வா
காதலுடன் கலைச்செல்வி
கைப்பிடித்த தமிழ்மகனே
சாதனைகள் பலசெய்தாய்
சோதனையும் பலகண்டாய்
வேதனையில் எமைவிட்டு
வித்தகனே சென்றதேனோ
தமிழ்நாட்டில் கல்விகற்று
தங்கம்வென்ற நாயகனே
தமிழோடு உனையிணைத்து
தளராமல் பணிசெய்தாய்
துணிவாகப் பலபேரும்
எழுதிநிற்கத் துணையானாய்
கனிவான உன்முகத்தை
காண்பதினி எப்போது
இலக்கியப் பாலமாய்
இருந்தவெங்கள் சிற்பியையா
இல்லையெனும் சேதிகேட்க
இதயமெல்லாம் அழுகிறதே
தமிழுலகில் உங்கள்பெயர்
தலைநிமிர்ந்தே நிற்குமையா
எமதருமை சிற்பியையா
இருக்கின்றார் உள்ளமெல்லாம் !
No comments:
Post a Comment