இலங்கைச் செய்திகள்


ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே இவ்வுலகின் இருப்புக்கு அடிப்படை : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

 தீபாவளியை கொண்டாட மட்டு.மாவட்ட மக்கள் ஆயத்தம்

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி

மறைந்த சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரருக்கு மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி

விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலையில்..!

 31 பேருக்கு பிணை : நகர்த்தல் பிரேரணை தாக்கலையடுத்து அனுமதி இன்றைய தினமே விடுவிக்கப்படுவர்

2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்

பல்லினத்தவரின் கண்ணீர் அஞ்சலியுடன் அக்கினியில் சங்கமமானது சோபித தேரரின் பூதவுடல்




ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே இவ்வுலகின் இருப்புக்கு அடிப்படை : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

10/11/2015 ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே பேதங்கள் எது­வு­மற்ற ஐக்­கியம் அர­சாட்சி செலுத்தும் இவ்­வு­லகின் இருப்­புக்குத் தேவை­யான அடிப்­படை நிபந்­தனை என்­பதை மிகவும் பிர­கா­ச­மான விளக்­கொளி பூஜை மூலம் வலி­யு­றுத்தும் நன்­நாளே தீபா­வ­ளித்­தி­ருநாள் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இலங்­கையில் வாழும் அனைத்து இந்­துக்­க­ளுக்கும் இதய பூர்­வ­மான பக்­திப்­பெ­ரு­மித தீபா­வளி பண்­டிகை வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக்கொள்­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.


தீபா­வளித் திரு­நாளை முன்­னிட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ் வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது,
உல­கெங்­கிலும் வாழும் இந்­துக்­களால் வெகுவிம­ரி­சை­யாகக் கொண்­டா­டப்­படும் தீபா­வ­ளித்­தி­ருநாள் உல­கி­லி­ருந்து தீய செயல்­களைப் போக்கி நற்­செ­யல்­களை நிலை­நாட்­டு­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ள­மையால் ஏனைய உலக மக்­க­ளுக்கும் இந்­தி­ருநாள் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு நாளாகக் காணப்­ப­டு­கி­றது.
உலகை சிறந்­ததோர் இட­மாக மாற்­று­வ­தற்கு மனித நாக­ரி­கத்தின் ஆரம்­ப­கால யுகங்­க­ளிலும் மனி­தனால் பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்ற உண்மை தற்­போ­தைய தீபா­வளிக் கொண்­டாட்­டங்­க­ளி­லி­ருந்து நாம் அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­யுள்­ளது.
ஒளி­வி­ளக்­கு­களை ஏற்­று­வதன் மூலம் உரு­வாகும் ஒளி­யா­னது இருளை அகற்­று­வதைப் போன்று தீபா­வ­ளியின் தீப­வொளி அனைத்து மனித மனங்­க­ளிலும் ஒளி­வீ­சு­வதன் கார­ண­மாக அவர்­க­ளுக்குள் எரிந்துகொண்­டி­ருக்கும் ஐக்­கி­யத்­துடன் கூடிய நல்­லி­ணக்கம் உலகின் அனைத்து நாக­ரி­கங்­க­ளுக்கும் உரித்­தான மனி­தர்­களின் பொது­வான பிரார்த்­த­னை­யாக மாற்­ற­ம­டை­கின்­றது.
அது பேதங்கள் எது­வு­மற்ற ஐக்­கிய அர­சாட்சி செலுத்தும் இவ்­வு­லகின் இருப்­புக்குத் தேவை­யான அடிப்­படை நிபந்­தனை என்­பதை மிகவும் பிர­கா­ச­மான விளக்­கொளி பூஜையின் மூலம் எமக்கு வலி­யு­றுத்­து­கி­றது.
இவ்­வா­றான நற்­செ­யல்­களை நோக்­க­மாகக் கொண்ட பொது­வான பழக்கவழக்­கங்­க­ளி­னூ­டா­கவே மானிடப் பரி­ணாம வளர்ச்­சி­யா­னது பய­னு­று­தி­வாய்ந்­த­தாக இன்­று­வரை வியா­பித்­துள்­ளது. இவ்­வாறு அனைத்து காலங்­க­ளுக்கும் பொருந்­து­கின்ற தீபா­வளி போன்ற விழாக்கள் ஆன்­மீக வழி­பாட்டுப் பழக்கவழக்­கங்­களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுவதன் காரணமாக அதன் உன்னத குணவியல்புகள் எதிர்காலத்திலும் நிலைத்திருத்தல் இன்றியமையாததாகும். இலங்கையில் வாழும் சகல இந்துக்களுக்கும் “இதய பூர்வமான பக்திப்பெருமித தீபவொளி வீசும் தீபாவளிப் பண்டிகை” மலரட்டும் என பிரார்த்திக்கின்றேன்.  நன்றி வீரகேசரி 









தீபாவளியை கொண்டாட மட்டு.மாவட்ட மக்கள் ஆயத்தம்

09/11/2015 மலரவுள்ள தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை கொண்டாட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தயாராகிவருகின்றனர்.மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை, காத்தான்குடி, கொக்கடிச்சோலை உட்பட முக்கிய நகரங்களில் தீபாவளிக்கென ஆடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய வருவோரின் எண்ணிக்கை பெருமளவில் காணப்படுகின்றது.
நன்றி வீரகேசரி 












வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி

11/11/2015 உள்ளூரில் உற்பத்திசெய்யக்கூடிய உண வுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மான தொகை செலவாகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படவேண்டும். இதன் பொரு ட்டு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இவ் விடங்கள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.






இதேவேளை உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக் குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை நேர­டி­யாகக் கண்­ட­றி­வ­தற்­காக அங்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார். உணவு உற்­பத்தி தேசிய வேலைத் திட்­டத்தின் முன்­னேற்றம் தொடர்­பாக ஜனா­தி­பதி தலை­மையில் கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
நாட்டில் விவ­சா­யத்தை மேற்­கொள்­ளக்­கூ­டிய ஒவ்­வொரு காணித்­துண்­டையும் விவ­சா­யத்­திற்கு உட்­ப­டுத்தி இலங்­கையில் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய உணவுவகைகளிலான உற்பத்தியில் தன்­னி­றைவு பெறுவது தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, எதிர்­கா­லத்தில் நான் ஒவ்­வொரு மாவட்­டத்திற்கும் விஜயம் செய்து இவ்­வே­லைத்­திட்­டத்தின் செயற்­றிறன் தொடர்பில் ஆரா­ய­வுள்ளேன்.
வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை நேர­டி­யாகக் கண்­ட­றி­வ­தற்­காக அங்கு விஜயம் செய்­ய­வுள்ளேன்.
உள்­நாட்டு உணவு உற்­பத்­தியை மக்கள் மத்­தியில் ஊக்­கு­விப்­ப­தற்­காக சிறந்த விவ­சா­யி­யை தெரிவு செய்யும் வேலைத்­திட்­டமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.
தேசிய உணவு உற்­பத்­திக்­கான சந்தை வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொ­டுத்தல் மற்றும் விவ­சா­யி­களை பலப்­ப­டுத்­துதல் நட­வ­டிக்­கை­களை கமத்­தொழில் அமைச்சு மற்றும் வர்த்­தக அமைச்­சுடன் கூட்­டி­ணைந்து மேற்­கொள்­வது முக்கியமானதாகும். உண­வு­வ­கை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­காக 200 பில்­லியன் ரூபா­வுக்கு அதி­க­மா­ன­தொகை செல­வா­கி­றது. எனவே உள்ளூர் உற்­பத்­தி­களை அதி­க­ரிப்­பதன் மூலம் இதனை தடுக்க முடியும்.
இர­சா­யனப் பொருட்கள், கிருமி நாசி­னிகள் பாவ­னையை குறைத்து சூழ­லுக்கு உகந்த முறை­மை­களை முன்­னெ­டுத்து உள்ளூர் உற்பத்தியை முன்னெடுப்பதே உணவு உற்­பத்தி தேசிய வேலைத்­திட்­டத்தின் நோக்­க­மாகும்.    நன்றி வீரகேசரி 














மறைந்த சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரருக்கு மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி


11/11/2015 மறைந்த சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் மறைவையொட்டி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களும் தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.

வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் முக்கிய இடங்களில் மஞ்சள் கொடிகளை பறக்க விடப்பட்டுள்ளதுடன் அவரது ஞாபகார்த்த பதாதைகளும் தேரரின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் பல இடங்களில் தொங்க விடப்பட்டுள்ளன.
தேரர் ஒருவரின் மறைவிற்காக இவ்வாறு இம்மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.   நன்றி வீரகேசரி 














விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலையில்..!



11/11/2015 பிணையில் விடுதலை செய்யப்பட்ட 31 அரசியல் தமிழ் கைதிகளை பிணையில் எடுப்பதற்கு எவரும் முன் வராதமையால் மீண்டும் அவர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.    நன்றி வீரகேசரி 












31 பேருக்கு பிணை : நகர்த்தல் பிரேரணை தாக்கலையடுத்து அனுமதி இன்றைய தினமே விடுவிக்கப்படுவர்

12/11/2015 தமிழ் அர­சியல் கைதிகள் 31 பேருக்கு நிபந்­த­னை­யு­ட­னான 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்­பி­ணையில் செல்­வ­தற்கு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப் பிட்­டிய நேற்­றைய தினம்­ அ­னு­ம­தி­ய­ளித்­துள்ளார்.

எனினும் ஆட்­பி­ணைக்­கான கையொப்­ப­மி­டு­வதற்கு நேற்­றைய தினம் எவரும் சமு­க­ம­ளித்­தி­ருக்­கா­ததன் கார­ண­மாக இன்­றைய தினம் அந்­ந­டை­மு­றைகள் நிறை­வேற்­ றப்­பட்­டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட வர்கள் வீடு திரும்­பு­வார்­க­ளென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தேகத்தின் பேரில் பயங்­க­ர­வா­த தடைச்­சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 24 ஆண்கள்இ 2 பெண்கள் உள்­ளிட்ட 26 தமிழ் அர­சியல் கைதிகள் மீதான வழக்கு விசா­ரணை கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தின் ஐந்தாம் இலக்க மன்றில் நீதி­பதி அருணி ஆட்­டி­கல முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு நேற்­றைய தினம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.
இதன்­போது பிர­தி­வா­திகள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான பி.கிரி­ஷாந்தன், வி.நிரஞ்சன் ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். ­அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்­கு­வ­தற்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் எதிர்ப்புத் தெரி­விக்க கூடா­தென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெ ளியா­கி­யுள்­ளன. சட்­டமா அதிபர் திணைக்­க­ளமும் பிணை­வ­ழங்கும் செயற்­பா­டுளை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. ஆகவே எமது தரப்­பி­ன­ருக்கு பிணை வழங்­க­வேண்­டு­மென சட்­டத்­த­ர­ணிகள், கோரினர்.
இதன்­போது நீதி­பதி அருணி ஆட்­டிக்­கல பிர­தி­வா­தி­க­ளுக்கு விடு­த­லை­ய­ளிப்­பது தொடர்­பாக பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் அதி­கா­ரியின் கருத்தை வின­வினார். அதன்­போது பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் அதி­காரிஇ சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தால் தமக்கு எவ்­வி­த­மான உத்­த­ர­வு­களும் பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை. எனவே பிர­தி­வா­தி­க­ளுக்கு பிணை­ய­ளிப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யா­தென குறிப்­பிட்­டனர்.
இத­னை­ய­டுத்து நீதி­பதி அருணி ஆட்­டிக்­கல எதிர்­வரும் 24ஆம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைப்­ப­தாக உத்­த­ரவு பிறப்­பித்தார். இந்நிலையில் தமிழ் அர­சியல் கைதிகள் மீண்டும் மகசின் சிறைச்­சா­லைக்கு கொண்டு செல்­ல­வ­தற்­காக சிறைச்­சாலை வாக­னத்தில் ஏற்­றப்­பட்­டனர்.
இதன்­போது வாக்­கு­று­தி­களை வழங்கி எம்மை ஏமாற்றி விட்­டார்கள், நாம் ஏமாற்­றப்­பட்டு விட்டோம். எமக்கு விடு­த­லை­ய­ளி­யுங்கள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்­றா­தீர்கள், நல்­லாட்­சியில் எமக்கு இதுவா நிலை­மை­யென கோஷ­மெ­ழுப்­பி­ய­வாறு சிறைச்­சாலை வாக­னத்­திற்குள் சென்­றனர். வாக­னத்­திற்குள் சென்றும் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி பலத்த சத்­தத்தில் கோஷ­மெ­ழுப்­பினர்.
அதே­நேரம்இ தமது உற­வு­க­ளுக்கு இன்று(நேற்று) விடு­த­லை­ய­ளிக்­கப்­ப­டு­மென்ற பாரிய எதிர்­பார்ப்­புடன் நீதி­மன்ற வாயிலில் கூடி­யி­ருந்த உற­வு­களும் தமது உற­வு­களை விடு­தலை செய்­யு­மாறு கோஷங்­களை எழுப்­பினர். அவ்­வி­டத்­திற்கு வருகை தந்­தி­ருந்த மனித உரிமை செயற்­பாட்­டாளர் அருட்­தந்தை சக்­திவேல், அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான குழுவின் தலைவர் சுந்­தரம் மகேந்­திரன் உள்­ளிட்­டோரும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு விடு­த­லை­ய­ளிக்க வேண்­டு­மென வலி­யு­றுத்­தினர்.
இதனால் அவ்­வி­டத்தில் பொலி­ஸா­ருக்கும் கோஷ­மெ­ழுப்­பி­ய­வர்­க­ளுக்­கு­மி­டையில் முறுகல் நிலைமை ஏற்­பட்­டதால் பதற்­ற­நி­லை­யொன்று உரு­வா­னது. எனினும் பொலிஸார் நீதி­மன்ற முன்­றலில் குழு­மி­யி­ருந்­த­வர்­களை அகற்­றி­ய­துடன் தமிழ் அர­சியல் கைதி­களை சிறைச்­சாலை வாக­னத்தில் ஏற்­றி­ய­னுப்பி வைத்­தனர்.
அதனைத் தொடர்ந்து நண்­ப­க­லுக்கு பின்னர் மீண்டும் நீதிவான் நீதி­மன்ற அமர்­வுகள் ஆரம்­பித்­த­வேளை சட்­டமா அதிபர் திணைக்­களம் 31தமிழ் அர­சியல் கைதி­களை பிணையில் விடு­தலை செய்­வ­தற்­கான அனு­ம­தியை அளித்து நகர்த்தல் பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பித்­தது. இதன்­போது மூன்று பெண்கள் உட்­பட 31 தமிழ் அர­சியல் கைதிகள் நீதிவான் நீதி­மன்­றத்தின் பிர­தான மன்றில் பிர­தம நீதி­பதி கிஹான் பிலப்­பிட்­டிய முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.
இதன்­போது சிரேஷ்ட அரச சட்­டத்­த­ரணி நவாவி, பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் பணிப்­பாளர், நீதி­மன்ற அலு­வகர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர். பிர­தி­வா­திகள் தரப்பில் பி.கிரி­ஷாந்தன்இ மங்­களா சங்கர் உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழ­வினர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.
சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தால் சமர்ப்­பிக்­கப்­பட்ட நகர்த்தல் பிரே­ரணை மீதான விசா­ர­ணையின் போது சட்­டமா அதி­பரின் அனு­ம­தியைக் கருத்திற் கொண்ட நீதிவான் நீதி­மன்­றத்தின் பிர­தம நீதி­பதி கிஹான் பிலப்பிட்­டிய கைதிகளை பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன் குறித்த 31பேரும் பிணையில் செல்­வ­தானால் 10 இலட்சம்ரூபா பெறுமதியில் தலா இருவர் ஆட்­பி­ணைக்­கான கையொப்­ப­மி­ட­வேண்­டி­யது அவ­சியம்இ எவ­ரி­டத்­தி­லா­வது கட­வுச்­சீட்டு காணப்­ப­டு­மானால் அது நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும். கொழும்பு அல்­லது வவு­னி­யாவில் அமைந்­துள்ள பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவு அலு­வ­ல­கத்தில் 14நாட்­க­ளுக்கு ஒருதடவை 9மணி முதல் 12 மணி வரையிலான காலவேளையில் கையொப்பம் இடவேண்டியது அவசியம் ஆகிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனவரி மாதம் இவ்வழக்கு மீதான விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்படுமென அறிவித்தார்.
எனினும் பிணையில் செல்வதற்கான அனுமதி குறித்த 31பேருக்கும் வழங்கப்பட்டபோதும் அவர்களுக்கான ஆட்பிணைக் கையொப்பமிடுவதற்கான நபர்கள் இன்மையால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இன்றைய தினம் அவர்களின் பிணை தொடர்பான நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டு வீடு செல்வர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி










2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்

12/11/2015 அரசாங்கம் 2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நவின்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எமக்கு பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க 2000 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 90 வீதமானோர் சிங்களவர்களும், 10 வீதமானோர் தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் அடங்குவர்.

இதில் அநேகமானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இரட்டை பிராஜவுரிமை வழங்கும் வைபவம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலமையில் நடைப்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி













பல்லினத்தவரின் கண்ணீர் அஞ்சலியுடன் அக்கினியில் சங்கமமானது சோபித தேரரின் பூதவுடல்




12/11/2015 மறைந்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு ­வாவே சோபித தேரரின் பூதவுடல் சற்றுமுன்னர் பாராளுமன்ற மைதானத்தில் பல்லாயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் சற்றுமுன்னர் அக்கினியில் சங்கமமானது.   நன்றி வீரகேசரி




No comments: