உலகச் செய்திகள்


ரொறன்ரோ கல்விச் சபையில் தமிழ் மரபுத் திங்கள் பிரகடனம்

எகிப்தில் ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் முக்கிய செயற்­பாட்­டாளர் சுட்டுக்கொலை

சூகியின் கட்சி அபார வெற்றி

கடும் வறட்சியால் உணவுத் தட்டுப்பாடு

 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல் : 158 பேர் பலி , 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை, 100 பேர் பணயக் கைதிகளாக பிடிப்பு


ரொறன்ரோ கல்விச் சபையில் தமிழ் மரபுத் திங்கள் பிரகடனம்

09/11/2015 அதிகூடிய பல்லின மாணவரைக் கொண்ட கல்விச் சபைகளில் ஒன்றுமான ரொறன்ரோ கல்விச் சபையானது ஜனவரித் திங்களை தமிழ் மரபுத் திங்களாக பிரகடனம் செய்துள்ளது. 
இப்பிரகடனமானது ரொறன்ரோ கல்விச் சபையில் உள்ள பாடசாலைகளில் தமிழர் மரபு, பண்பாடு, மொழி, வரலாற்றைத் தமிழ் மாணவரோடு மட்டுமல்லாது வேற்றின மாணவருடனும் கொண்டாடும் வாய்ப்பை நல்கி உள்ளது.
ரொறன்ரோ கல்விச் சபையானது ரொறன்ரோவின் பல்வேறு பாகங்களிலும் உள்ள 595 பாடசாலைகளில் கல்வி கற்கும் 246,000 மாணவர்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது. 
இதில் 12,272 மாணவர்கள், அதாவது மொத்த மாணவர் தொகையில் ஏறத்தாழ 5.5% தமிழ் மாணவர்கள். 

தமிழ் மொழியானது ரொறன்ரோ கல்விச் சபையில் இரண்டாவது பெரும் மொழி குழுவாகவும், இரண்டாவது அதிகம் கற்பிக்கப்படும் மொழியாகவும் உள்ளது.
கனடியத்தமிழர் பேரவை, இந்தப் பிரகடனத்திற்கு வழிகோலிய அறங்காவலர் பார்த்தி கந்தவேள் அவர்களை வாழ்த்துவதோடு, இப்பிரகடனத்தை ஒருமுகமாக நிறைவேற்றிய அனைத்து அறங்காவலருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.  நன்றி வீரகேசரி 
எகிப்தில் ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் முக்கிய செயற்­பாட்­டாளர் சுட்டுக்கொலை11/11/2015 எகிப்­திய தலை­நகர் கெய்­ரோவில் செயற்­பட்டு வந்த ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் முக்கிய செயற்­பாட்­டாளர் ஒரு­வரை தாம் சுட்டுக் கொன்­றுள்­ள­தாக அந்­நாட்டு பொலிஸார் திங்­கட்­கி­ழமை அறி­வித்­துள்­ளனர்.

அஷ்ரப் அலி அலி ஹஸ­னெயின் அல் கரா­பிலி என்ற மேற்­படி செயற்­பாட்­டா­ளரைக் கைது­செய்யச் சென்ற வேளை, அவர் தம் மீது துப்­பாக்கிப் பிர­யோ­கத்தை மேற்­கொண்­ட­தா­கவும் இத­னை­ய­டுத்து தாம் நடத்­திய பதில் துப்­பாக்கிச் சூட்டில் அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் அந்­நாட்டு உள்­துறை அமைச்சு தெரி­விக்­கி­றது.

இந்த செயற்­பாட்­டா­ளரை தேடப்­படும் ஒரு­வ­ராக அந்­நாட்டு பொலிஸார் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் குறிப்பிட்டு அறிவித்தல் ஒன்றை பிறப் பித்திருந்தனர்.   நன்றி வீரகேசரி 


சூகியின் கட்சி அபார வெற்றி

12/11/2015 மியன்மார் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங்சாங் சூ கீயின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அங்கு ஜனநாயக ரீதியிலான பொதுத் தேர்தல் நடைபெற்றது. 

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 149 கீழ்சபை தொகுதிகளில் 135 தொகுதிகளை சூகியின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 
மேலும் அவர்கள் 90 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


கடும் வறட்சியால் உணவுத் தட்டுப்பாடு


12/11/2015 எத்தியோப்பியாவின் நகரப் பகுதிகளில் பெரும் பொருளாதார முன்னேற்றம் காணப்பட்டாலும், கடுமையான வறட்சி காரணமாக உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாகவும்  அடுத்த வருட முற்பகுதியில் அங்கு ஒன்றரைக் கோடி மக்களுக்கு உணவு உதவி தேவைப்படும் என்றும் ஐநா கூறியுள்ளது.    நன்றி வீரகேசரி  பாரீஸ் பயங்கரவாத தாக்குதல் : 158 பேர் பலி , 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை, 100 பேர் பணயக் கைதிகளாக பிடிப்பு

14/11/2015 பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் மர்ம நபர்கள் 7 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 158க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளதோடு 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.


 பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற திரையரங்கிற்குள் நுழைந்த நபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளார்.
இதில்  26 பேர்பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பின்னர் 158 ஆக பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


மேலும் 100 பேர் பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலாண்ட் பிரான்சில் தற்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்    நன்றி வீரகேசரி 

No comments: