சிட்னியில் பத்திரிகையாளர் சுந்தரதாஸ் எழுதிய மறக்கமுடியாத வில்லன்கள் நூல் வெளியீட்டு அரங்கு

.
சிட்னியில்
 பத்திரிகையாளர்  சுந்தரதாஸ்  எழுதிய மறக்கமுடியாத வில்லன்கள்  நூல்  வெளியீட்டு  அரங்கு
இலங்கையில்   வீரகேசரி,   சிந்தாமணி,  தினகரன் பத்திரிகைகளில் தமிழ்  சினிமா தொடர்பான    ஊடகவியலாளராக   பணியாற்றியவரும்   சினிமா   தொடர்பான  செய்திகளை   தொடர்ந்து   எழுதிவருபவருமான   திரு. . சுந்தரதாஸ்  எழுதிய  மறக்கமுடியாத வில்லன்கள்  நூலின்  வெளியீட்டு  அரங்கு  சிட்னியில்  நடைபெறவுள்ளது.


எதிர்வரும் 31 ஆம்   திகதி (31-05-2015)  ஞாயிற்றுக்கிழமை   சிட்னியில்  Yaarl Function Centre   இல் (221 A, Wentworth Avenue, Pendle hill, N.S.W-2145)  மாலை 4.30  மணிக்கு  நடைபெறும்  இந்நூல் வெளியீட்டில்  கலந்து  சிறப்பிக்குமாறு  அன்பர்கள் அழைக்கப்படுகின்றனர்.
தமிழ்த்திரையுலகில்   புகழ் பெற்று விளங்கிய  வில்லன்  நடிகர்களான நம்பியார்,   நடிகவேள்  எம். ஆர். ராதா,   அசோகன்,   ஆர். எஸ். மனோகர், ..கே. தேவர்,  வி.கே. ராமசாமி,  பி.எஸ். வீரப்பா,   மேஜர்  சுந்தரராஜன், எஸ்.. நடராஜன்  உட்பட  மேலும்  சில  வில்லன்  நடிகர்கள்  பற்றிய  பல சுவாரஸ்யமான   தகவல்கள்  அடங்கிய  நூல்  மறக்க  முடியாத   வில்லன்கள்.
இலங்கை  தினக்குரல்,  அவுஸ்திரேலியா  தமிழோசை,  கனடா  தமிழர் செந்தாமரை,   தமிழ்நாடு  கலைமகள்  முதலான  இதழ்களில் ஒரேசமயத்தில்  வெளியான  தொடர்  மறக்க  முடியாத  வில்லன்கள்.
 தமிழகத்தின்  பிரபல  நூல் வெளியீட்டு  நிறுவனம் கலைஞன்   பதிப்பகம்   வெளியிட்டுள்ள இந்நூலுக்கு - இந்தியாவில்   புகழ்பெற்ற  .வி.எம். தயாரிப்பு   நிறுவனத்தின்  அதிபர்  திரு. .வி.எம்.  சரவணன்,  ஃபிலிம் நியூஸ்  ஆனந்தன்  ஆகியோர்  வாழ்த்துரை  வழங்கியுள்ளனர்

No comments: