பொலிவியாவில் இருந்து ஒரு கூடை பழம் - -எச். ஏ. அஸீஸ்

.

                                                                                                 
ஒரு  கூடை   நிறைய  கனிகள்  கொண்டு  வந்துளேன்
சில  கனிகள்  மிக  அரிதானவை
உண்டு   பார்த்தும்  வந்துள்ளேன்  சில நாள்
இனிமை  இப்பொழுதும்  இருக்கிறது
என்  இதயத்துள்  தொக்கி

ஒவ்வொரு   பழமும்  புதுமையானது
பார்க்க  மிகவும்  புனிதமானது
அழுகாதிருக்கும்  கனிகள்  இவை
ஒரு  அருங்காட்சி   சாலையில்
தொல்பொருட்கள்  போல்பொலிவியா  நாட்டின்
சாந்தா  குரூஸில்
கிராமங்களின்   பொது  சந்தைக்குப் போன போது
கிடைத்தவை  இந்த  கனிகள்

உலகத்தில்  சில  நேரம்  ஒதுக்கப்படும்
அல்லது   ஒதுங்கி  நிற்கும்
ஒரு  மூலை
மனிதாபிமானம்  பூரித்திருக்கும்
ஒரு   பூஞ்சோலை

பொதுச்சந்தையின்   விசித்திரத்தை
ரசித்திருந்த  வேளை  அது
ஒவ்வொரு  பெண்ணும்  கொண்டு  வந்து
நீட்டியது  இந்த  பழங்கள்
பூக்களே   பழங்களை  கைகளில்  திணிப்பது
பார்க்காத  காட்சி  முன்னர்

நான்  சுமந்து  வந்துள்ள  இந்த
ஒரு   கூடைப்பழம்
பொலிவிய  காதலின்   காட்சிக் கூடம்

அன்பினால்  கனிந்த  இதயங்கள்  இவை
எப்பொழுதும்  அழுகாதிருக்கும்
என்னுள்....


-எச். . அஸீஸ்

No comments: