தமிழ் சினிமா



கொம்பன்


மெட்ராஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி தன் பழைய வேட்டி, சட்டையை மாட்டி நடித்த படம் தான் கொம்பன். பருத்திவீரனுக்கு பிறகு கார்த்தி நடிப்பில் மீண்டும் ஒரு கிராமத்து படம். பருத்திவீரன் அளவிற்கு ஆழமாகவும் மற்றும் அழுத்தமாகவும் இல்லாமல் இருந்தாலும், ஒரு ஜனரஞ்சகமான மாமனார்-மருமகன் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது இந்த கொம்பன்.
இயக்குனர் முத்தையா முந்தைய படத்தில் பயன்படுத்திய அந்த வேட்டி, சட்டையை கார்த்திக்கு கொடுத்து அதே களத்தில் இறக்கி அழகு பார்த்துள்ளார். இதில் ப்ளஸாக அதே வெற்றிப்பட நாயகி லட்சுமி மேனனை, கார்த்திக்கு ஜோடியாக்கியுள்ளார்.
கதை
நீ என்ன பெரிய கொம்பனா? என்ற வார்த்தைக்கு ஏற்றார் போல் கார்த்தி ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்கும் முரட்டு இளைஞனாக வலம் வருகிறார். செம்மநாடு, வெள்ளநாடு, அரசநாடு என்ற மூன்று ஜில்லாக்களிலும் செம்மநாடு, வெள்ளநாடு ஒன்று சேர்ந்து அவர்களின் சொந்த ஊர்காரர்களையே தலைவராக்கி வருகின்றனர், இதை தட்டி கேட்கும் அரசநாட்டை சேர்ந்த பெரிய தலை ஒன்றை கொல்கிறார்கள்.
அதே அரசநாட்டில் தலை தூக்கும் கார்த்தி யாருக்கும் அடங்காத கொம்பனாக இருந்து வருகிறார். அப்போது செம்மநாட்டை சார்ந்த லட்சுமிமேனனை பார்த்ததும் காதல், அவரை பெண் பார்க்க கார்த்தியின் அம்மா கோவை சரளா செல்ல, ‘என் அப்பா என்னுடன் தான் இருப்பார், அதற்கு சம்மதித்தால் தான், கல்யாணம்’ என்று சொல்ல, திருமணம் சுபமாக அரங்கேறுகிறது.
ஆனால், தன் மாமனாரான ராஜ்கிரணை, கார்த்தி மதிக்காமல் தொடர்ந்து அசிங்கப்படுத்தி வர, ஒரு கட்டத்தில் கைகலப்பு வரை செல்கிறது. இதற்கிடையில் ஊரின் பெரும் தலை ஒன்று அநியாய வட்டிக்கு கடன் கொடுத்து அரஜாகம் செய்ய, கார்த்தி அந்த கும்பலின் தலைவரை அடித்து விடுகிறார்.
இதனால் கார்த்தியை பழிவாங்க அந்த கும்பல் லட்சுமி மேனனுக்கு செக் வைத்து ‘உண் புருஷனை வர சொல் என்கிறார்கள். இதை அறிந்து அந்த இடத்திற்கு வரும் ராஜ்கிரண், கார்த்தி வந்தால் அவருக்கு தான் பிரச்சனை என்று அவராகவே நடுரோட்டில் அந்த கும்பலை பந்தாடுகிறார். இதனால் கோபமடைந்த அவர்கள் ’உன்னையும் உன் மருமகனையும் கொன்றே தீருவேன்’ என்று கங்கனம் கட்டுகிறார்கள். இந்த உண்மை அறிந்த கார்த்திக்கு, ராஜ்கிரண் மீது அதிக மரியாதை வருகிறது.
இதற்கு அடுத்து பழிவாங்க வில்லன் குரூப் எடுக்கும் முயற்சியை கார்த்தி முறியடித்தாரா? தன் மாமா ராஜ்கிரணை அவர்களிடமிருந்து காப்பாற்றினாரா? என்பது தான் விறுவிறுப்பான மீதிக்கதை.
நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பங்களிப்பு
கொம்பனாக கார்த்தி வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும், பருத்திவீரனில் இடம்பெற்ற அதே தோரணை. அதேபோல் அம்மாவாக வரும் கோவை சரளா, அண்ணனாக வரும் கருணாஸ், தாய் மாமாவாக வரும் தம்பி ராமையா என நம்மை ஒரு குடும்பத்திற்குள் கொண்டு போய் சேர்த்து விட்டார் முத்தையா. லைட்டா விக்ரமன் சார் படத்துல அதிக வன்முறை சேர்த்த மாதிரி ஒரு பீலிங்.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் நகர மக்கள் இதுவரை பார்க்காத கிராமத்தை அழகாக கண்முன் கொண்டு வந்துள்ளார். இசை ஜி.வி. பிரகாஷ், என்ன பாஸ் ஹீரோவாகிட்டா மற்ற ஹீரோ படங்களை கண்டுக்க மாட்டீங்களா?
க்ளாப்ஸ்
கார்த்தி-ராஜ்கிரண் கெமிஸ்ட்ரி ஹீரோ, ஹீரோயினை விட நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. ராஜ்கிரண் அவர்கள் தான் பிறவி கலைஞன் என்பதை நிருபித்துள்ளார். அட நம்ம கோவை சரளாவா இது? என்று கூறுவது போல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
காலரை தூக்கிவிடும், வேட்டியை மடித்து கட்டும் கார்த்தி செம்ம மாஸ் சார், 50 பேரை அடித்தாலும் நம்பலாம் போல. படத்தின் வசனத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும், ’கோவிலுக்கு ஜாதி ஜனத்தோட போகாதீங்க, ஜாதிய விட்டுட்டு ஜனத்தோடு போங்க’ போன்ற வசனம் கைத்தட்ட வைக்கிறது.
பல்ப்ஸ்
குட்டி புலி படத்தின் சாயல் ரொம்ப தெரியுது முத்தையா சார். பிரச்சனை செய்யும் அளவிற்கு படத்தில் எந்த வசனமும் இல்லை என்றாலும், அங்கங்கு ஜாதி குறியீடு தேவை தானா?
ஜி.வி. பிரகாஷ் சார் என்ன கிளைமேக்ஸில் மங்காத்தா பட தீம் மியூஸிக்கெல்லாம் வருது. கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே. கருப்பு நெறத்தழகி தவிர எந்த பாடலும் முடியல சார்.
மொத்தத்தில் குடும்ப ரசிகர்களையும், B, C செண்டர் ரசிகர்களையும் கவர இறங்கி அடித்துள்ளான் இந்த கொம்பன்.
Rating- 3/5
நன்றி cineulagam


No comments: