நடைமுறைக்கு வந்தது இந்தியாவுக்கான ஒன் அரைவல் விசா


15/04/2015 இந்தியாவுக்கு செல்லும்  இலங்கையர்கள் எதிர்வரும் காலங்களில் அந்நாட்டு விமான நிலையங்களிலேயே வீசாவினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை  நேற்று முதல் நடைமுறை  வந்துள்ளது.

இதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாத இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது அவரால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த வீசா முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 
இந்தியா ஏற்கனவே 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. 
அதனைத் தொடர்ந்து தற்போது இலங்கையை 44 ஆவது நாடாக ஒன் அரைவல் வீசா பட்டியலில் இந்தியா இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

No comments: