உலகச் செய்திகள்


லிபியாவில் படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலி

ஜப்பானில் தரையிறங்கிய வேளை ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற பயணிகள் விமானம்







லிபியாவில் படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலி


15/04/2015 லிபியாவிற்கு  அருகே படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலியாகியுள்ளதாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில் சுமார் 540 பேர் வரை பயணம் செய்துள்ளனர்.

இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இத்தாலிய கடற் படை வீரர்கள் சுமார் 140 பேர்களை உயிருடன் மீட்டனர்.

விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போனோரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.




நன்றி வீரகேசரி 









ஜப்பானில் தரையிறங்கிய வேளை ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற பயணிகள் விமானம்

16/04/2015 ஜப்­பானின் ஹிரோ­ஷிமா விமான நிலை­யத்தில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு தரை­யி­றங்­கிய வட கொரிய ஏசி­யானா எயார்லைன்ஸ் விமானம் ஓடு­பா­தையை விட்டு விலகிச் சென்­றதில் அந்த விமா­னத்தில் பய­ணித்த 20 பேருக்கும் அதி­க­மானோர் சிறு காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.




74 பய­ணி­க­ளு­டனும் 7 விமான ஊழி­யர்­க­ளு­டனும் பய­ணித்த எயார்பஸ் 320 விமா­னமே இவ்­வாறு ஓடு­பா­தை­யை விட்டு விலகிச் சென்­றுள்­ளது.
மேற்­படி சம்­ப­வத்­திற்கு அந்த விமா­னத்தின் சக்­க­ரங்­களில் ஒன்று ஓடு­பா­தைக்கு அண்­மை­யி­லுள்ள வானொலி தொடர்­பாடல் கட்­ட­மைப்பில் சிக்கிக் கொண்­டதே காரணம் என அந்­நாட்டு போக்­கு­வ­ரத்து அமைச்சு கூறு­கி­றது.


அந்த கட்­ட­மைப்பின் பாக­மொன்றின் சிதைவு அந்த விமா­னத்தின் சக்­க­ரங்­களில் ஒன்றில் சிக்கிய நிலையில் காணப்­பட்­டுள்­ளது.மேற்­படி விமா­னத்தால் குறிப்­பிட்ட 18 அடி கோபு­ரத்­திற்கும் சேதம் ஏற்­பட்­டுள்­ளது.
அத்­துடன் இதன்­போது அந்த விமா­னத்தின் வாலின் இடது பக்­கத்­திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் ஏசியானா விமான சேவை மன்னிப்புக் கோரியுள்ளது.



நன்றி வீரகேசரி
























No comments: