தமிழ் சினிமா அனேகன்

.

தனுஷ் தொட்டதெல்லாம் பொன் ஆகும் காலம் போல, அந்த வகையில் சென்ற வருடம் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் தனுஷ் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த ஷமிதாப் ஹிந்தி படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது மீண்டும் கோலிவுட்டில் இறங்கி அடிக்க கே.வி.ஆனந்துடன் கைக்கோர்த்து அனேகனாக களம் கண்டுள்ளார். தனுஷ், படத்திற்கு படம் தன் நடிப்பை உயர்த்தி கொண்டே தான் போகிறார். அந்த வகையில் சைக்லாஜிக்கல் த்ரில்லர் கதையம்சத்தில் வந்துள்ளது இந்த அனேகன்.

கதை
படத்தின் ஆரம்பத்திலேயே சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஹீரோயின் அமைராவிற்கு திடிரென்று முன் ஜென்ம நியாபகம் வருகிறது. இதில் பர்மாவில் ஏழை இளைஞனாக தனுஷ் வருகிறார். அங்கு இருவருக்குமிடையே காதல் வளர, பின் அது கைக்கூடாமல் சோகத்தில் முடிகிறது.


இதை தொடர்ந்து ஹீரோயின் வேலை பார்க்கும் அதே கம்பெனியில் தனுஷ் வேலைக்கு சேர, அங்கு பாஸாக வருகிறார் நவரச நாயகன் கார்த்திக். இங்கு அமைரா சொல்லும் கதையை யாரும் நம்பாமல் இருக்க, மீண்டும் மற்றொரு கதை தொடங்குகிறது. இங்கு தான் தனுஷ் சென்னை இளைஞனாக கலக்கியுள்ளார். இந்த எபிசோட் தான் படத்தின் ஹைலட்.
ஆனால், வழக்கம் போல் இதிலும் காதல், பின் அது ஒன்று சேராமல் எதிர்ப்பாரத டுவிஸ்ட்வுடன் முடிகிறது இந்த கதை. தற்போது இந்த கதைகளையெல்லாம் நிகழ் காலத்தில் ஒட்டவைத்து அதிரடி கிளைமேக்ஸுடன் முடிகிறது படம்.
நடிகர், நடிகைகள், மற்றும் படத்தை பற்றிய அலசல்
தனுஷுற்கு நடிக்கவா சொல்லி தர வேண்டும், ஒவ்வொரு காட்சியிலும் அடித்து தூள் கிளப்புகிறார். அதேபோல் கதாநாயகியும் படம் முழுவதும் வந்து மனதில் ஒட்டி செல்கிறார். இதையெல்லாம் விட நவரச நாயகன் கார்த்திக் சார் இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் என்று கேட்கும் அளவிற்கு அவர் வரும் காட்சிகள் அத்தனை எனர்ஜி. குறிப்பாக ஹீரோயினிடம் கதை கேட்கும் தருணத்தில் செம்ம.
சுபா அவர்களின் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் டங்கா மாரி பாடலில் தியேட்டர் இருக்கைகளில் யாரும் இல்லை, எல்லாம் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். ஒளிப்பதிவும் மிகவும் அழகாக உள்ளது. படத்தின் லொக்கேஷன் ஹாலிவுட் தரத்தில் உள்ளது.
க்ளாப்ஸ்
தனுஷ் தன் யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். கார்த்திக் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கியுள்ளார். பாடல்கள் அதை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது. கே.வி.ஆனந்த் எடுத்துக்கொண்ட களம் ஹாலிவுட் படத்தை போல் உள்ளது.
பல்ப்ஸ்
திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகிறது, எல்லோருக்கும் இப்படம் புரியுமா? என்றால் சந்தேகம் தான். சில நீளமான காட்சியமைப்புகளை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் அனேகன் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவன், என்றாலும் ரசிக்க வைப்பவன்
ரேட்டிங்-3.25/5    
நன்றி cineulagam
No comments: