கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்த காட்சியை வெளியிட்டது ஐ.எஸ் அமைப்பு
மத்தியதரைக்கடலை கடந்து இத்தாலி செல்ல முயற்சித்த 2,000 குடியேற்றவாசிகள் மீட்பு
எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு தீபற்றியது..!
பாகிஸ்தானில் பொலிஸ் தலைமையகங்களுக்கு அருகில் குண்டு வெடிப்பு; 8 பேர் பலி
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 45 பேர் எரியூட்டப்பட்டு படுகொலை
கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்த காட்சியை வெளியிட்டது ஐ.எஸ் அமைப்பு
16/02/2015 எகிப்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பிணைக் கைதிகள் 21 பேரை வரிசையாக வைத்து, அவர்களது தலையை துண்டிக்கும் வீடியோ காட்சியை ஐ.எஸ். அமைப்பு பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
அதில், எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை கடற்கரைப் பகுதியில் வரிசையாக முழந்தாளிட வைத்து, அவர்களுக்கு பின்னால் ஐ.எஸ். அமைப்பினர் முகமூடியுடன் நிற்பதாகவும் காண்பிக்கப்படுகிறது.
பின்னர், அவ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பேசும் காட்சியும், சிறிது இடைவெளியில் கடற்கரையில் 21 பேரின் இரத்தத்தை அலைகள் அடித்துச் செல்லும்படியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
வீடியோவில் தோன்றிப் பேசும் குறித்த உறுப்பினர் கிறிஸ்தவர்களை குறிப்பிடும்படியாக,
"சிலுவைப் போராளிகளே, அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக ஒன்றுப்பட்டு இயங்கும் நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஒசாமா பின் லேடனை புதைத்த இந்தக் கடலில் உங்களது இரத்தத்தைக் கலப்போம் என்று அல்லாவுக்கு உறுதி அளிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
வீடியோவில் தோன்றுபவர் ஐ.எஸ் க்கு ஆதரவான லிபிய நாட்டவர் என்று தன்னை வட அமெரிக்க ஆங்கில மொழித் தோரணையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஐ.எஸின் இந்த கொடூரச் செயலை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. எகிப்து அரசு, இந்த சம்பவத்தை அடுத்து தங்களது நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனை எகிப்தில் உள்ள சன்னி இஸ்லாமியர்களின் தலைமையாகமான அல்-ஹஷாரும் கண்டித்துள்ளது.
இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அல்-ஹஷாருக்கு அப்பாவி எகிப்தியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தி கிடைத்தது. மிகவும் வருந்தக்கூடிய விடயம்.
ஐ.எஸ். நடத்தும் செயற்பாடுகளுக்கும் இஸ்லாமியத்துக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் செய்வது மனிதாபிமானத்துக்கும் இஸ்லாமியத்துக்கும் எதிரானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
மத்தியதரைக்கடலை கடந்து இத்தாலி செல்ல முயற்சித்த 2,000 குடியேற்றவாசிகள் மீட்பு
17/02/2015 இத்தாலிய கரையோர காவல் படையினர் லிபிய கடற்கரைக்கு அப்பால் மேற்கொண்ட பிரதான தேடுதல் நடவடிக்கையின் போது, 2000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகளை மீட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது லிபியாவிலிருந்து அதிவேக படகுகளில் இத்தாலியை நோக்கி வந்த துப்பாக்கிகளை ஏந்திய குழுவொன்றால் கரையோர காவல் படையினர் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் மத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கியதால் குறைந்தது 300 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லிபிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 50 மைல் தொலைவில் 600 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிந்திய மீட்பு நடவடிக்கையில் ஒரு விமானம், 4 கரையோர காவல்படை கப்பல்கள், இரு படகுகள், ஒரு கடற்படை கப்பல் என்பன ஈடுபட்டன.
அந்தக் குடியேற்றவாசிகள் 12 படகுகளிலிருந்து மீட்கப்பட்டு இத்தாலிக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இத்தாலிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது துப்பாக்கியுடன் காணப்பட்ட 4 ஆண்கள், குடியேற்றவாசிகள் பயணம் செய்த படகு ஒன்றுக்கு திரும்ப கரையோர காவல் படையினருக்கு உத்தரவிட்டு விட்டு படையினரின் படகில் ஏறி தப்பிச் சென்றதாக போக்குவரத்து அமைச்சர் மோரிஸியோ லுபி கூறினார்.
கடந்த ஆண்டில் ஐரோப்பாவை சென்றடையும் முகமாக மத்தியதரைக்கடலைக் கடக்க மேற்கொண்ட முயற்சியின் போது 3500 பேர் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் தெரிவிக்கிறது.
அக் காலப் பகுதியில் 200,000 பேருக்கும் அதிகமானோர் உயிருடன் மீட்கப்பட்டனர். நன்றி வீரகேசரி
எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு தீபற்றியது..!
17/02/2015 அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வடக்கு டக்கோடாவில் இருந்து யார்க்டவுனுக்கு எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த ரயில் அதீனா மற்றும் பூமர் நகரங்களுக்கு இடையே கனவா ஆற்றின் கரையோரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே திடீரென தடம் புரண்டது. இதனால், எண்ணெய் ஏற்றிச் சென்ற 13 பீப்பாய்களும் கவிழ்ந்து தீபற்றியுள்ளன.
இவ்விபத்திலிருந்து வெளியாகும் தீ பொது மக்களின் இருப்பிடங்களுக்குள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விபத்து நடந்த பகுதியான விர்ஜினியாவில் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு, எங்கும் பனிபடர்ந்து கிடப்பதனால் விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை. நன்றி வீரகேசரி
பாகிஸ்தானில் பொலிஸ் தலைமையகங்களுக்கு அருகில் குண்டு வெடிப்பு; 8 பேர் பலி
18/02/2015 பாகிஸ்தானின் லாகூர் நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 8 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பானது அந்நகரிலுள்ள பொலிஸ் தலைமையகங்களுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் இரண்டாவது மிகப் பெரிய நகரும் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அதிகார தளமாகவும் லாகூர் நகர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு நகரான பெஷாவரில் பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 22 பேர் பலியான சம்பவத்துக்கு சில நாட்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானிய தலிபான் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் டொக்டர் உஸ்மான் என்ற போராளிக்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைக்கு பழிதீர்க்கும் முகமாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
பெஷாவரிலுள்ள பாடசாலையில் 150 க்கு மேற்பட்டவர்கள் தலியான் துப்பாக்கி தாரிகளால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் மரணதண்டனைகளை நிறைவேற்றுவதில் நிலவிய ஸ்தம்பித நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நன்றி வீரகேசரி
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 45 பேர் எரியூட்டப்பட்டு படுகொலை
19/02/2015 மேற்கு ஈராக்கிய நகரான அல்-பக்டாடியில் 45 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸ் தலைவர் தெரிவித்தார்.
அவர்கள் எதற்காக கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது அறியப்படாத நிலையில், அவர்களில் சிலர் பாதுகாப்புப்படை உறுப்பின ர்கள் என நம்புவதாக பொலிஸ் தலைவரான கேணல் காஸிம் அல் -பெய்டி தெரிவித்தார்.
அயின் அல் -அஸாத் விமான தளத்திற்கு அண்மையிலுள்ள அந்நகரின் பெருமளவான பிரதேசங்கள் ஐ.எஸ். போராளிக் குழுவால் கடந்த வாரம் கைப்பற்றப்பட்டிருந்தன.
மேற்படி தாக்குதல் நடவடிக்கையின் போது ஐ.எஸ். போராளிகள் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் உத்தியோகத்தர்களது குடும்பங்களின் வீடுகளை உள்ளடக்கிய வளாகத்தை தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஈராக்கிய அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமக்கு உதவ வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். உக்கிர மோதல்கள் மற்றும் தொடர்பாடல் வசதியின்மை காரணமாக மேற்படி 45 பேரும் எரித்து படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய் தியை உறுதிப்படு த்த முடியாதுள்ள தாக அதிகாரிகள் தெரி விக்கின்றனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment