தமிழ் சினிமா


என்னை அறிந்தால்


என்னை அறிந்தால் - Cineulagam

என்னை அறிந்தால் படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, நம் அண்டை தேசமான இலங்கையில் இன்று மாலை 6 மணிக்கு காட்சி தொடங்கியது.
தமிழகத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ அதே அளவிற்கு இலங்கையிலும் இப்படத்திற்கு பலத்த வரவேற்பு இருந்ததாம். மேலும், இப்படம் அங்கு 20க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியுள்ளது.
நம் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் படத்தை பற்றி பல ருசிகர தகவல்களை கேட்டு அறிந்தோம். அதை நம் மக்களுக்கு முதன் முதலாக பகிர்வதில் சினி உலகம் பெருமையடைகிறது.
படத்தில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே அஜித் ஒரு கேங்ஸ்டராக ஒரு கூட்டத்தில் நுழைந்து, அவர்களாலே செய்ய முடியாத பல வேலைகளை அவர் செய்து முடித்து, அனைவரின் நற்பெயரையும் சம்பாதிக்கிறார்.
இதை தொடர்ந்து அவர் எடுக்கும் அதிரடி முடிவு, அந்த கும்பலை அதிர்ச்சியாக்க, பின்பு தான் தெரிகிறது அஜித் ஒரு போலிஸ் அதிகாரி என்று. இந்த உண்மை தெரிந்த அருண் விஜய், த்ரிஷாவை கொலை செய்கிறார்.
மேலும், குழந்தையையும் கொலை செய்ய அவர் முயற்சிக்க, அஜித் ஏதும் வேண்டாம் என்று ஊரை விட்டு கிளம்ப, அவரை சுற்றி பல மர்ம சம்பவங்கள் நடக்கிறது, இதில் அஜித் தப்பித்தாரா? என்பதை யாரும் எதிர்பாராத கிளைமேக்ஸில் கூறியிருக்கிறார் கௌதம் மேனன்.
படத்தின் மிகப்பெரிய பலம் இசை மற்றும் ஒளிப்பதிவு தானாம், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வந்துள்ளதாம். அஜித் இந்த படத்தில் மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளாராம். இதற்கெல்லாம் மேலாக அருண் விஜய் மிரட்டியெடுத்துள்ளாராம்.
1 1/2 வருடம் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் செம்ம விருந்து தானாம். அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு காதல், எமோஷன், ஆக்‌ஷன் என அனைத்து வித கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடியிருக்கிறாராம். மொத்தத்தில் என்னை அறிந்தால் 1000 வால சரவெடி தான். என்ன தல ரசிகர்கள் ரெடியா? நன்றி cineulagam 


No comments: