இலங்கைச் செய்திகள்


கடினமான சவால்களை இன்னமும் இலங்கை சந்திக்க 

வேண்டியேற்படும் : அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிஷா

அத்தநாயக்க கைது : பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்...!

சவால்களை எதிர்கொள்வதற்கு இணைந்து பணியாற்ற தயார்
கே.பி. க்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை

கடினமான சவால்களை இன்னமும் இலங்கை சந்திக்க வேண்டியேற்படும் : அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிஷா


03/02/2015 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் குறு­கிய காலத்தில் பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். ஆனால் இலங்கை இன்னும் செய்­ய­வேண்­டிய பல கடி­ன­ மான நட­வ­டிக்­கைகள் உள்­ளன. மீண்டு வரு­வ­தற்கு பல கடி­ன­மான சவால்கள் இன்னும் காணப்­ப­டு­கின்­றன என்­ப­தனை நாம் அறிந்­துள்ளோம் என்று மத்­திய மற்றும் ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்கச் செய­லாளர் நிஷா பிஷ்வால் தெரி­வித்தார்.
பொரு­ளா­தா­ரத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல், ஊழலை தடுத்தல் மற்றும் நல்­லாட்­சியை முன்­னி­றுத்தல், அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் மனித உரி­மைகள் மற்றும் ஜன­நா­யக பங்­கேற்­பினை உறுதி செய்தல் என்­ப­வற்றில் பங்­கா­ள­ரா­கவும் நண்­ப­ரா ­கவும் இருக்கும் அமெ­ரிக்­காவை நம்­பலாம். இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.


இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ள மத்­திய மற்றும் ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்கச் செய­லாளர் நிஷா பிஷ்வால் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிதன் பின்னர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
கொழும்பில் அமைந்­துள்ள வெளி­வி­வ­கார அமைச்சு அலு­வ­ல­க­ததில் நேற்­றுக்­காலை இந்த சந்­திப்பு நடை­பெற்­றது. வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் நிஷா பிஷ்­வாலும் இதன்­போது சுமார் ஒரு மணி­நேரம் இரு­த­ரப்பு கலந்­து­ரை­யா­டலை நடத்­தினர்.
நேற்று முன்­தினம் இலங்கை வந்­த­டைந்த நிஷா பிஷ்வால் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.
அத்­துடன் இன்­று­காலை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ள நிஷா பிஷ்வால் இன்று யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­துடன் வட மாகாண முதல்வர் சி.வி. விக்­னேஷ்­வ­ர­னையும் சந்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்ளார்.

இந்­நி­லையில் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்பின் பின்னர் அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஷ்வால் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கையில்
இலங்­கையின் ஜன­நா­யகம் தொடர்பில் உலகை பேச வைத்த சக்­தியை கண்­கூ­டாக காண்­ப­தற்கு இலங்­கைக்கு வருகை தந்­தி­ருப்­பது மிகுந்த மகிழ்ச்­சி­யாக உள்­ளது.

இலங்­கையில் நடை­பெற்ற வர­லாற்றுச் சிறப்­பு­டைய தேர்தல் மற்றும் அது திறந்­து­விட்­டுள்ள புதிய சந்­தர்ப்­பங்­க­ளுக்­காக இலங்கை வாக்­கா­ளர்­க­ளுக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவும் செய­லாளர் கெர்­ரியும் விடுத்த வாழ்த்துச் செய்­தி­களை மீண்டும் நினை­வுப்­ப­டுத்­து­கின்றேன்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தமது 100 நாள் இலட்­சிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்­வைத்­துள்­ள­துடன்இ மிகவும் குறு­கிய காலப்­ப­கு­தியில் அவற்றில் பல­வற்றை நிறை­வேற்­றி­யு­முள்­ளனர்.
ஆனால்இ இன்னும் புரிய வேண்­டிய விட­யங்கள் நிறை­யவே உள்­ளன. அத்­துடன் எதிர்­கொள்ள வேண்­டிய சிக்­க­லான சவால்கள் பலதும் உள்­ளதை நாம் அறிந்­துள்ளோம்.
பொரு­ளா­தா­ரத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல். ஊழலை தடுத்தல் மற்றும் நல்­லாட்­சியை முன்­னி­றுத்தல். அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் மனித உரி­மைகள் மற்றும் ஜன­நா­யக பங்­கேற்­பினை உறுதி செய்தல் என்­ப­வற்றில் எம்மை பங்­கா­ள­ரா­கவும்இ நண்­ப­ரா­கவும் இலங்­கை­யா­னது அமெ­ரிக்­காவை நம்­பலாம். இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா உள்­ளது.

எமது நட்பு பல தலை­மு­றை­களைக் கொண்­டது. இலங்கை சுதந்­திரம் அடைந்­தது முதல் அமெ­ரிக்­கா­வா­னது. 2 பில்­லியன் டொலர்­க­ளுக்கும் மேற்­பட்ட உத­வி­களை இலங்­கைக்கு வழங்­கி­யுள்­ளது.
அமெ­ரிக்­காவைப் போன்று வேறு எந்த நாடு­களும் அதி­க­ளவில் இலங்கை உற்­பத்­தி­களை கொள்­வ­னவு செய்­வ­தில்லை. வர்த்­தகம் மற்றும் முத­லீட்­டினை மேம்­ப­டுத்­து­வதில் எமது பங்­கா­ளித்­து­வத்தை வளர்ப்­ப­தற்கும். வலுப்­ப­டுத்­து­வ­தற்கும். எமது மக்கள். அர­சாங்­கங்கள் மற்றும் சிவில் சமூ­கங்கள் வர்த்­த­கங்கள் ஆகி­ய­வற்­றுக்கு இடையில் உறவை வளர்ப்­ப­தற்கும் நாம் எதிர்­பார்த்­துள்ளோம்.
வெளி­நாட்டு விவ­கார அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்பின் போது. எனது அர­சாங்­கத்தின் சார்பில் இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் ஆர்வம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கப்பூர்வமான வழிவகைகளை கண்டறிவதில் அவருடனும். அரசாங்கத்துடனும் பணியாற்றுவதற்கான எமது ஆர்வத்தை தெரிவித்தேன்.
அத்துடன், அடுத்த வாரம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்யும் போது உங்களை சந்திப்பதிலும். எமது இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொடர்பை மேம்படுத்துவதிலும்இ ஆழமாக்குவதிலும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஆர்வமாக உள்ளார் என்றார்.  நன்றி வீரகேசரி 
அத்தநாயக்க கைது : பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்...!
03/02/2015 திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.யை பொலிஸார் கைது செய்தமை தொடர்பாக நேற்று பாராளுமன்ற சபைக்கூட்டத்தின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தரப்பினருக்கு இடையே கடும் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டது.
சபாநாயகரின் அனுமதியில்லாமல் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டமை பாராளுமன்ற சட்டங்களை மீறிய செயல் என்று எதிர்க்கட்சியினரும் குற்றம் செய்த சந்தேக நபரொருவரை எம்.பி.யை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என ஆளும் தரப்பினர் வாதிட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக சபாநாயகர் ஆராய்ந்து தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டுமென்றும் இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டனர்.
இதனை செவிமடுத்த சபாநாயகர் சமல் ராஜபக்ச  இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து சபையில் தீர்ப்பை  வழங்குவதாகவும் அறிவித்தார்.
இந்த வாத பிரதிவாதங்களின் போது திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி சபாநாயகரின் அனுமதியில்லாமல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறிய செயலாகும் என தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எம்.பி.யை பொலிஸாரால் கைது செய்ய முடியும் அதற்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை. 
பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார கருத்து தெரிவித்த போது குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட எம்.பி. யொருவரை கைது செய்ய முடியாது என எங்கும் கூறப்படவில்லை. திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி பொய்யான அறிக்கையை தயாரித்து கையெழுத்திட்டு வெளியிட்டதினாலேயே கைது செய்யப்பட்டார்.
கடந்த காலங்களில் பல தடவை நானும் கைது செய்யப்பட்டேன். ஆனால், அப்போது சபாநாயகரின் அனுமதி பெறப்படவில்லை என்றார். 
இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச உங்களை கைது செய்த போது நல்ல வேளை நான் உள்நாட்டில் இருக்கவில்லை. ஆனால் அத்தருணத்தில் பிரதி சபாநாயகரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றார். இதன் போது பேசிய பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க இது விடயம் தொடர்பாக ஆளும் தரப்பினர் எதிர்த்தரப்பினர் மத்தியில் தெளிவற்ற நிலை தோன்றியிருப்பதால் இதனை ஆராய்ந்து சபாநாயகர் தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டுமென்றார். இதற்கு  பதிலளித்த சபாநாயகர் கடந்த கால பாராளுமன்ற தீர்மானங்கள் நடவடிக்கைகளை ஆராய்ந்து தீர்ப்பை வழங்குவேன் என்றார்.  நன்றி வீரகேசரி


சவால்களை எதிர்கொள்வதற்கு இணைந்து பணியாற்ற தயார்

05/02/2015 இலங்­கையில் உண்­மை­யாக, நிறை­வேற்ற வேண்­டி­யவை இன்னும் அதி­க­மா­கவே உள்­ளன. சவால்­களை எதிர்­கொள்­வ­தற்கும், இலங்­கை­யர்கள் தமது உண்­மை­யான ஆற்­றலை அறிந்து கொள்ள உத­வு­வ­தற்கும் இலங்கை மக்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு அமெ­ரிக்கா எதிர்­பார்த்­துள்­ளது என்று தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஷ்வால் தெரி­வித்­துள்ளார்.
மேலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யு­ட­னான எனது உரை­யா­டலின் போது, இலங்­கைக்குள் தமது வாக்­கா­ளர்­களின் அமை­தி­யான, செழிப்­பான எதிர்­கா­லத்தை உறுதி செய்­வ­தற்கு நல்­லி­ணக்கம் மற்றும் அர­சியல் உள்­ள­டக்கம் சார்ந்த அர்த்­த­முள்ள முன்­னேற்­றத்­திற்­கான அவர்­க­ளது கண்­ணோட்­டத்­தி­னையும் தெரிந்து கொண்டேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
இலங்­கைக்கு இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்த தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஷ்வால் தனது விஜ­யத்தின் முடிவில் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
நிஷா பிஷ்வால் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
வர­லாற்றுச் சிறப்பு மிக்க, ஜன­வரி 8ஆம் திகதி தேர்­தலில் இலங்கை மக்கள் வெளிப்­ப­டுத்­திய ஆர்­வத்­தையும், நம்­பிக்­கை­யையும் நானா­கவே கண்­டு­கொள்­வ­தற்கு கொழும்­புக்கு விஜயம் செய்­தமை சிறப்­பா­ன­தாக அமைந்­தது.
அர­சாங்கம், சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் அர­சியல் கட்­சி­க­ளுடன் சந்­திப்­புக்­களை நடத்­தினேன். இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும் பிர­கா­ச­மான யதார்த்­த­மாக மாற்­று­வ­தற்­கான நம்­பிக்கை என்ற செய்­தியை அவர்கள் கொண்­டி­ருந்­ததை அறிந்து கொண்டேன்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, நகர அபி­வி­ருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் இரா­ஜாங்க பாது­காப்பு அமைச்சர் ருவன் விஜே­வர்­தன ஆகி­யோ­ருடன் ஆக்­க­பூர்­வ­மான உரை­யா­டல்­களில் நான் கலந்து கொண்டேன்.
அத்­துடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யு­ட­னான எனது உரை­யா­டலின் போது, இலங்­கைக்குள் தமது வாக்­கா­ளர்­களின் அமை­தி­யான, செழிப்­பான எதிர்­கா­லத்தை உறுதி செய்­வ­தற்கு நல்­லி­ணக்கம் மற்றும் அர­சியல் உள்­ள­டக்கம் சார்ந்த அர்த்­த­முள்ள முன்­னேற்­றத்­திற்­கான அவர்­க­ளது கண்­ணோட்­டத்­தி­னையும் தெரிந்து கொண்டேன்.
ஏனைய அர­சியல், சிவில் சமூக, மத மற்றும் வர்த்­தக பிர­மு­கர்­க­ளை­யயும் சந்­திப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் எனக்கு கிடைத்­தது. இந்த சந்­திப்­புக்கள் அனைத்­திலும் இரு நாடு­க­ளுக்கும் பய­ன­ளிக்கும் வகையில் அமெ­ரிக்­க-­ – இ­லங்கை உற­வுகள் வளர்­வ­தனை காண்­ப­தற்­கான எமது ஆவலை நான் மீண்டும் வலி­யு­றுத்­தினேன்.
ஜனா­தி­பதி சிறி­சேன அடைந்த வெற்­றிக்­காக எனது வாழ்த்­தினை பரி­மாறிக் கொண்­ட­துடன், அமை­தி­யான, உள்­ள­டக்­க­மான மற்றும் செழிப்­பான இலங்­கையின் எதிர்­கா­லத்­திற்­காக முன்­னோக்கிச் செல்லும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தையும் வெளிப்படுத்தினேன்.
உண்மையாக, நிறைவேற்ற வேண்டியன இன்னும் நிறையவே உள்ளன. சவால்களை எதிர்கொள்வதற்கும், இலங்கையர்கள் தமது உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள உதவுவதற்கும் இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.  நன்றி வீரகேசரி


கே.பி. க்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை
05/02/2015
கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு இலங்கையை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நன்றி வீரகேசரி

No comments: