விழுதல் என்பது எழுகையே" - பகுதி 38 மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்

அறிமுகம்

மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்
இவர் இலங்கை யாழ்மாவட்டத்தில் வலிகாமம்  மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட பண்ணாகம் கிராமத்தில் பிறந்தார். யாழ்/பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பயின்ற இவர் 11வது வயதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்த இவர் 2011ஆம் ஆண்டு தனது முதல் நூலான "வைரம்" கவிதைதொகுப்பை தனது பாடசாலையில் நடந்த முத்தமிழ் விழாவில் மிகச்சிறப்பாக வெளியிட்டார் வலிகாமம் கல்விவயத்தில் 11வயதில் நூல் வெளியிட்ட முதல்மாணவர் என்ற பெருமைக்குரியர் குலராஜ். 
2012ஆம் ஆண்டு தனது இரண்டாவது நூலான "சீரழிந்துபோகும் தமிழரின் பண்பாடு"என்ற கவிதைநூலை வெளியிட்டுவைக்கப்பட்டது. 
இவ் நூலுக்காக வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இவருக்கு "கவி அரசு"என்ற கௌரவத்தையும் வளங்கி கௌரவித்தார்.  பல பத்திரிக்கைகள் ,சஞ்சிகைகள் >இணைய வலைத்தளங்கள் பலவற்றிலும் இவரது படைப்புக்கள் இடம்பெற்றது பன்முகம் ஆற்றல் மிக்கவராக சிறுவயதில் திகழ்கிறார்  
 தற்போது இருஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இவர் அங்கு கல்விற்றுக்கொண்டிருக்கும் மாணவன் 16 வயது சிறுவன் குலராஜ் இலக்கியத்துறையில் தன்னை அடையாளம் காட்டிவருகின்றார். அவர் எமது பெருந் தொடர் கதையை வாசித்து தானும் இதில் எழுத வேண்டும் என்று வாய்ப்பை தானாக வலிந்து பெற்றுக் கொண்டார். விழுதல் என்பது எழுகையே தொடரை எழுதிய ,எழுதவிருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் மிக பிரபலியமான நிலையில் இருப்பவர்கள். அவர்கள் சார்பாகவும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் சார்பாகவும் சிறுவன் குலராஜ்சை ஊக்கமளிக்கவேண்டியது எமது கடமையாகும்.
அன்புடன்
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு ஏலையா முருகதாசன்
(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்  - யேர்மனி)

தொடர்கிறது பகுதி  -38

 போன் மணி அடிக்கத் தொடங்கியது.கலோ சீலன் நான்
அங்கிள் கதைக்குறேன்.என்று அங்கிளின் குரல் எதிரொலித்தது.  
"என்ன அங்கிள் இப்பதானே போன் பண்ணினீங்க"என்று சீலன் கேட்க "ஓமடா சீலா 

இப்பதான் போன் பண்ணினான்"என்று அங்கிள் கூறிவிட்டு "சீலா"என்று அங்கிளின் குரல் மெல்ல தளர்ந்தது."என்ன விடயம் அங்கில் சொல்லுங்கோ பறுவாயில்லை"என்று சீலன் கேட்டான்."சீலா என்னை குறை நினைக்காதே  நான் அனுப்புகின்றேன் என்று சொன்ன இரண்டாயிரம்  பிராங் இப்போ வராது"என்று அங்கிள் சொன்னார்.சீலன் "ஏன் எதற்காக"என்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை."சரி அங்கிள் பறுவாயில்லை அங்கிள் நான் பார்த்துக்கிறேன்"என்று சொல்லி விட்டு போனை வைத்துவிட்டான்."என் கையே எனக்கு உதவி"என்ற பழமொழியை தனக்காக புதுப்பித்து நெஞ்சில் பதித்தான்.
  
        "எங்கே போவது யாரைப்பார்ப்பது"என்ற வினா மட்டும் சீலனின் மூளையின் ஓடிக்கொண்டிருந்தது."என்னடா இந்த வாழ்க்கை"என்று  நினைத்துக்கொண்டு வீதியில் நடந்தான்.உடல் மட்டும்தான் வீதியில் உள்ளம் எங்கே என்று தெரியவில்லை."யாரிடம் போவது என்ன செய்வது"என்ற ஒன்றும் புரியாது திக்கித் தவித்தான். 
               இங்க தானே நிறைய தமிழ் கடைகள் இருக்கு.அவங்ககிட்ட எதாவது வேலை கேட்டுப்பார்ப்போம்.என்று யோசித்து முயன்றான் எல்லா தமிழ் கடைகளிற்கும் ஏறி இறங்கினான்."இப்ப ஆள் இருக்கு பிறகு பார்ப்போம்"என்ற ஒரே பதிலே எல்லோர் வாயிலும் இருந்து வந்தது. சீலன் ஏறி இறங்கிய கடைகளில் ஒரு கடையில் பணிபுரிந்த ஒருவர். "உங்களுக்கு என்ன?..வேலைதானே வேனும்"என்று சீலனிடம் கேட்க சீலனும் "ஆம் ஆம்"என்று கொஞ்சம் புன்னகை பூத்த முகத்துடன் தலை அசைத்தான்.
"தம்பி எனது பெயர் காந்தன்"என்று அந்த நபர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். "எனது பெயர் சீலன் என்று"சீலனும் தன்னை அடையாளம் காட்டினான்."தம்பி எனக்குத் தெரிந்த ஒரு முதலாளி இருக்கிறார் தமிழ் ஆள்தான் அவர் நல்ல மனுசன் நான் உங்களை அவருடம் அறிமுகப்படுத்துறேன் அவர் உங்களுக்கு நிச்சயம் வேலை தருவார்"என்று சீலனிடம் காந்தன் கூறி அவரிடம் சீலனை அழைத்துச் சென்றான். 
           •வணக்கம் அண்ணா என்று காந்தன் வணக்கம்      வைத்தான்
            •வணக்கம் தம்பி பார்த்து கனநாள் ஆச்சுது இந்தப்பக்கம் இப்ப வாறதே இல்லை என்று அந்த முதலாளி காந்தனிடம் கேட்டார்
           •உடனே காந்தன் என்ன அண்ணா பண்ண நேரமே இல்லை வேலை.வேலை முடிஞ்சா வீடு அப்படி வாழ்கை போகுது என்று காந்தன் பதில் அளித்தான்

அவர்களின் தனிப்பட்ட உரையாடல் முடிவுக்கு வந்தது முதலாளி காந்தனிடம்"யார் இந்த தம்பி "என்று சீலனை பற்றி விசாரித்தார்."எனக்கு தெரிந்தவர் தான் இவர் பெயர் சீலன்
இப்பதான் இவர் இங்கே வந்தார் இவருக்கு வீசா இல்லை ஒன்றும் இல்லை.இவருக்கு உங்க கடையில் ஒரு வேலை பொட்டு கொடுங்களேன்"என்று காந்தன் முதலாளியிடம் கேட்டான். 
       கொஞ்சநேரம் முதலாளி சீலனை பார்தபடி யோசித்தார்
சரி நான் வேலை கொடுக்கிறேன்.என்ன வேலை என்றால் என் கடையில் சாமான்கள் அடுக்கும் வேலை. ஒவ்வொரு நாளும் ஒன்பது மணியில இருந்து பத்து மணிமட்டும் வேலை. 
ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் லீவு சம்பளம் அறுநூறு பிராங்
ஓகே என்றால் இன்றே வேலையில் சேருங்கள் என்று சீலனிடம்
முதலாளி கூறினார்.சீலன் உடனே கடவுள் இப்ப கண்ணை திறந்திட்டார் என்று சரி அண்ணை என்று கூறிவிட்டு வேலையில் சேர்ந்தான்.சீலன் வேலை செய்து கொண்டிருக்கும் போது முதலாளி வந்தார் "தம்பி நீங்கள் இப்ப எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார்"" இப்போதைக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை இனித்தான் இடம் பார்க்கனும்"என்று சீலன் பதில் அளித்தான். சீலனின் நிலை முதலாளிக்கு புரிந்து விட்டது 
"தம்பி இந்த கடைக்கு மேல ஒரு றூம் இருக்கு அதில தங்குறிங்களா?"என்று சீலனைக் சீலன் ஓம் அண்ணை என்று பதில் அளித்தான்.தம்பி அங்க ஒரு சின்ன அடுப்பு வைத்து சமைக்கலாம் அடுப்பு பானை எல்லாத்தையும் எடுத்து சீலனிடம் கொடுத்தார் தம்பி இது நான் பாவித்தது தான் நான் திருமணம் செய்யமுதல் இந்த றூமில்தான் தங்கினான் நான் பாவித்த சாமான்கள் தான் இவை என்று சொன்னார்"உங்களிடம் இப்ப பணம் இருக்கா "என்று முதலாளி சீலனை கேட்க
"இல்லை"என்று சீலன் கூற முதலாளி தனது சட்டைப்பையில் இருந்து ஐம்பது பிராங் எடுத்துக்கொடுத்து இதை சம்பளத்தில கழிப்போம் கடைகள் எல்லாம் பூட்டப்போகுது நீங்கள் போய் உங்களுக்கு தேவையான சமயல் சாமான்களை வாங்கிவாருங்ள். என்று சீலனை அனுப்பி வைத்தார்.
 சீலனும் விறுவிறுவென கடைக்கு சென்று தனக்குத்தேவையான உணவு பொருட்களை வாங்கிவந்து சமைத்துவிட்டு உறங்குவதற்காக படுத்தான் தற்போது சீலனுக்கு கடவுள் அந்த முதலாளி மட்டுமே இனி எனது வானில் இருள் விலகி சூரியன் துளிர் விடுகின்றான் என்று நினைத்தபடி கண் அயர்ந்தான். 
  விடிந்ததும் மீண்டும் சீலன்எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு  கடை திறப்பதற்கு சென்றான் பணி தொடர்ந்தது முதலாளி சீலனிடம் ஒரு கைபேசி ஒன்றையும் ஒரு சிம் ஒன்றையும் கொடுத்தார் இந்தாங்க இதை வைத்திருங்கள் வெளிநாட்டில் போன் இல்லாமல் ஒரு மனிதன் வாழவே முடியாது என்று கூறிவிட்டு இதில பத்து பிராங் இருக்கு நீங்க இருக்கும் போன் பண்ணிகதைக்கலாம் என்று கூறி சீலனீன் கையில்  போனை வைத்தார் முதலாளி. 
தொடரும் 39

No comments: