மலேசியாவில் நடந்த ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

.
வழக்குரைஞர் சந்திரிகா  சுப்ரமண்யன்
அண்மையில் மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்மலாயா பல்கலைக்கழகத்தின்இந்திய ஆய்வியல் துறை ஆகியன இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் 9-வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை  நடத்தின.
இந்த மாநாட்டில்சிங்கப்பூர்இந்தியாஇலங்கைஆஸ்திரேலியாகுவேத்மொரிசீயஸ் எனப் பல்வேறு  நாடுகளில் இருந்து இரண்டாயிரத்து  ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தமிழ்ஆர்வலர்கள் வந்து  உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.தமிழ் மொழிஇலக்கியம்பண்பாடுகலைகலாசாரம்சமயம்மானிடவியல்வரலாறு,உளவியல்சமூகவியல் எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள்,கல்விமான்கள்எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைச்சமர்ப்பித்து உரையாற்றினர்.

முதன் முதலாக 1964 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற 26 ஆவது அனைத்துலகதென்கிழக்காசியப் பிராந்திய அறிஞர்கள் சந்தித்த போதுஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்தோற்றுவிக்கப்பட்டது.
குறிப்பாக இலங்கையின் தமிழ் அறிஞர் தனி நாயகம் அடிகளாரின் பெரு முயற்சியால் முதல்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்ததுஇவர் மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறைத்தலைவராகவும் பேராசிரியராகவும் 1961-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வநதார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது தமிழின் சிறப்பை உலக அரங்கில்எடுத்தோதுவது தமது தலையாய கடமை என்று உணர்ந்தார்அதற்காக 1949-1951 ஆம்ஆண்டுகளில் உலகப் பயணத்தை மேற்கொண்டு தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.
தமிழாய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்திலு எழுதினால் தான்  உலக அரங்கினைச்சென்றடைய முடியும் என்பதை தம் உலகத் தமிழ்தூதுப் பயணத்தின்போது அடிகளார்உணர்ந்தார். 1952-ஆம் ஆண்டில் ""தமிழ் கல்ச்சர்'' என்னும் ஆங்கில முத்திங்கள் இதழைஅடிகளார் வெளியிடத் தொடங்கினார்.

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரில் நடந்ததுஅடுத்த மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைபெற்றதுமூன்றாவது மாநாடுபிரான்ஸின் பாரிஸிலும் 1970 ஆம் ஆண்டும்நான்காவது மாநாடு 1974 ஆம் ஆண்டுயாழ்ப்பாணத்திலும், 5 ஆவது மாநாடு 1981 ஆம் ஆண்டு மதுரையிலும், 6ஆவது மாநாடு 1987 ஆம்ஆண்டு கோலாலம்பூரிலும், 7ஆவது மாநாடு 1989 ஆம் ஆண்டு மொரீசியஸிலும், 8 ஆவதுமாநாடு 1995 ஆம் ஆண்டு தஞ்சாவூரிலும் நடைபெற்றன.

தற்போது ஒன்பதாவது மாநாடு  கோலாலம்பூரில்  ’உலகமய கால கட்டத்தில் தமிழுக்கு வளம்சேர்த்தல்’ என்ற   பொதுக் கருப்பொருளில் நடத்தப்பட்டது.
இலங்கையிலிருந்து   இருந்து சுமார் இருபது பேர் கட்டுரைகளை வழங்கவந்திருந்தனர்.ஆஸ்திரேலியாவில் இருந்துதமிழ் ஆஸ்திரேலியன் சார்பில் ஆசிரியர்கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்,   ”புலம் பெயர்ந்த தமிழர்கள் மரபு காப்பதில் உள்ளநடைமுறைச் சிக்கல்கள்” என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினார்அன்பு ஜெயா  தமிழ்கற்பித்தல் தொடர்பாக  கட்டுரை வழங்கினர்.


தமிழ்  மரபு சார்ந்த கண்காட்சி ஒன்றும்பல கலை கலாச்சார   நிகழ்வுகளும் , சிறப்புசொற்பொழிவுகளும் இடம் பெற்றன.
நிறைவு நாளில் மலேசிய கல்வி அமைச்சர் – இரண்டாவது நிலைசென்னைப்பல்கலைக்கழக ,பாரதி தாசன் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.சிறப்புபேச்சாளாராக மொரிஷியசின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்புரைஆற்றினார்.

தனி நாயகம் அடிகள் பற்றி மா நாட்டு அமைப்பாளர் குறிப்பிடாவிட்டாலும் ஆறுமுகம்பரசுராமன்சந்திரிகா சுப்ரமண்யன் , யுனெஸ்கோவைச் சேர்ந்த சாம் விஜய் ஆகியோர்குறிப்பிட்டு பேசியது ஆறுதலாக இருந்தது.அடுத்த மா நாடு சிக்காகோவில் 2017 இல் நடக்கஉள்ளது.

No comments: