உலகச் செய்திகள்


ஸ்பெயினில் பாரிய ஆர்ப்பாட்டம் 100000 பேர் பங்கேற்பு

தாய்வானில் விமான விபத்து : 12 பேர் பலி

அமெரிக்காவில் புகையிரதம் வாகனத்தில் மோதி விபத்து : 7 பேர் பலி

தாய்வான் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு



ஸ்பெயினில் பாரிய ஆர்ப்பாட்டம் 100000 பேர் பங்கேற்பு




02/02/2015 ஸ்பெயினின் மட்றித் நகரில் கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். 
மாற்றத்துக்கு ஊர்வலம் என்ற தலைப்பில் இடது சாரி பொடெமொஸ் கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. 
மாற்றம் இப்போது என பொருள்படும் பதாகைகளை ஏற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆம் எம்மால் முடியும் என கோஷம் எழுப்பினர். நன்றி வீரகேசரி 








தாய்வானில் விமான விபத்து : 12 பேர் பலி

04/02/2015 தாய்வானில் டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்திற்குள்ளானதில் 12 பயணிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இன்று புதன்கிழமை காலை 58 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுடன்  பயணித்த டிரான்ஸ் ஏசியா ஏயார்வேய்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான  ATR-72 என்ற விமானம், பாலத்துடன் மோதி  தைபே ஆற்றில் விழுந்துள்ளது.
இந்த விபத்தின்போது பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் விமானத்தினுள் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தைபே சொங்ஸான் விமான நிலையத்திலிருந்து  கீன்மென் தீவு நோக்கி இந்த விமானம் புறப்படுகையிலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




நன்றி வீரகேசரி 











அமெரிக்காவில் புகையிரதம் வாகனத்தில் மோதி விபத்து : 7 பேர் பலி

05/02/2015 அமெ­ரிக்க நியூயோர்க் நக­ருக்கு வடக்கே புகை­யி­ர­த­மொன்று வாக­ன­மொன்­றுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் குறைந்­தது 7 பேர் பலி­யா­ன­துடன் 12 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
செவ்­வாய்க்­கி­ழமை மாலை நியூயோர்க் நக­ரி­லி­ருந்து 32 கிலோமீற்றர் தொலைவில் வல்­ஹல்லா நக­ருக்கு அண்­மையில் சுமார் 800 பய­ணி­க­ளுடன் பய­ணித்த புகை­யி­ரதம் வாக­னத்­துடன் மோதி­யுள்­ளது. இந்த விபத்தில் வாக­னத்தின் பெண் சார­தியும், புகை­யி­ர­தத்­தி­லி­ருந்த 6 பேரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். இதன்­போது வாகனமும் புகை­யி­ர­தத்தின் முன் பக்­க­மாக அமைந்­தி­ருந்த பெட்­டி­களும் தீப்­பற்றி எரிந்­துள்­ளன.
புகை­யி­ரத கட­வையின் வாயில்கள் வாக­னத்­துக்கு மேலாக கீழி­றங்­கி­யதால் வாகனம் தண்­ட­வா­ளத்தில் நின்­றுள்­ளது.
இதனையடுத்து வாக­னத்­துக்கு மேற்­படி வாயிலால் சேத­மேற்­பட்­டுள்­ளதா என பார்­வை­யிட வாக­னத்தை விட்டு வெளியே இறங்­கிய பெண் சாரதி, புகை­யி­ரதம் வரு­வ­தற்குள் வாக­னத்தை தண்­ட­வா­ளத்­தி­லி­ருந்து அப்பால் செலுத்திச் செல்ல வாக­னத்தில் மீண்டும் ஏறிய போதே விபத்து இடம்­பெற்­றுள்­ளது. நன்றி வீரகேசரி 







தாய்வான் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

05/02/2015 தாய்வானில் டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்திற்குள்ளானதில் உயரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது.


இந்நிலையில் ஏனையோரை மீட்பதற்கான மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்து.

தாய்வானின் தலைநகர் தைபே விமான நிலையத்திலிருந்து நேற்றுக் காலை 53 பேருடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா ATR 72-600 பயணிகள் விமானம், கின்மென் தீவைத் தாண்டி செல்லும்போது பாலம் மீது மோதி விபத்துக்குள்ளாகி கீலுங் என்ற ஆற்றில் விழுந்தது. 
விமானத்தின் அரைப்பாகம், கீலுங் ஆற்றில் மூழ்கியுள்ளது எனவும் நேற்றைய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தாய்வான் உள்நாட்டு செய்திகள் தெரிவித்தன. 
பின்னர் இரவு நேர மீட்புப்பணியின் பின்னர் 31 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் வரை கடும் காயங்களுக்கு உள்ளானதாகவும் 12 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் செய்திகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி








No comments: