நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உயர் விருதைப் பெற்ற தமிழர் பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜாநியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் (UNSW) Electrical Engineering & Telecommunications  பிரிவின் தலைவர் பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா அவர்களுக்கு தலைமைத்துவத்துக்கான உயர்விருது துணைவேந்தர் அவர்களால் 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதியில் வழங்கப்பட்டது. இந்த விருதுதான் நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உயர்ந்த விருதாகும். தமிழர் ஒருவர் இவ்வாறு உயர் விருதினைப் பெற்றமையையிட்டு அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

பேராசிரியர் அம்பிகைராஜா அவர்கள் ஸ்ரீலங்காவில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஸ்ரீலங்கா பல்கலைக்கழக கட்டுபெத்தை வளாகத்தில் படித்து 1975ல் Bachelor of Science Engineering  பட்டம் பெற்றார். 3 ஆண்டுகள் விஞ்ஞான ஆய்வாளராக ஸ்ரீலங்கா விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்தில் (CISIR) பணியாற்றினார். அவரது திறமையின் காரணமாக அரசாங்கம் நெதர்லாந்தில் உள்ள(Philips) சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பதற்கு புலமைப்பரிசில் கொடுத்து கௌரவித்தது, ஸ்ரீலங்காவிலிருந்து  Philips இற்கு சென்ற முதல் மாணவன் என்ற பெருமைக்குரியவர்.


அதனைத் தொடர்ந்து கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்ள அவருக்கு மற்றுமொரு புலமைப்பரிசில் கிடைத்தது. அங்கிருந்து 1982ல் ஐக்கிய ராச்சியத்தில் உள்ள Keele பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற அம்பிகைராஜா குறுகிய காலத்தினுள் அயர்லாந்து அத்லோன் தொழில் நுட்ப நிறுவத்தின் பொளியியல் துறைக்கான தலைவராக பதவி பெற்றார். அவருடைய பதினெட்டு ஆண்டுகால தலைவர் பதவியின் போது பல அனுபவ ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டிருந்தார்.1999ம் ஆண்டு தனது கும்பத்துடன் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து பேராசியர் அம்பிகைராஜா நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துணைதலைவராக பணியாற்றத் தொடங்கினார். நிர்வாகத் துறையில் மட்டுமல்லாமல் கற்பித்தல் துறையிலும் மிகுந்த ஆற்றலுள்ளவர். இவரது கற்பித்தல் திறமையைப் பாராட்டி நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சிறந்த விருதான Vice Chancellors Award for teaching Excellence 2004 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. மிகக்குறுகிய காலத்தில் இவ்விருதினைப் பெற்று மிகத்திறமையான பேராசியராக இவர் அடையாளம் காணப்பட்டார்.
பேராசிரியர் அம்பிகைராஜா அவர்கள் எஞ்சினியரிங் துறையில் பல புதிய முறைகளை அறிமுகப் படுத்தியமை காரணமாக சிங்கப்பூரில் உள்ள (I2R) ஆராச்சி நிலையத்தில் visiting scientist  ஆக நியமிக்கப்பட்டார். இப்பல்கலைக் கழகத்திற்கு (UNSW) மிகவும் திறமையான தலைமைத்துவத்தை வழங்கியமை காரணமாக நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம் தலைமைத்துவத்துக்கான மிக உயர்ந்த விருதினை கடந்த மார்கழி மாதம் இவருக்கு வழங்கியது. புதுவிதமான Degree Programmes  ஐ அறிமுகம் செய்தார். இவை இப் பல்கலைக்கத்தில் மட்டுமல்லாது அவுஸ்திரேலியாவிலேயே முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 6 வருடங்களில் Largest Electrical Engineering School  ஆகவும் High research Performing School ஆகவும் ஆக்கியுள்ளார். இத்தகை இவரது அப்பரிய சேவைகளைப் பாராட்டியே இவ் உயர்விருது நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் டிசம்பர் மாதம் 2014இல் வழங்கப்பட்டது.கல்வித்துறையில் மட்டுமல்லாது கலைத்துறையிலும் மிகுந்த ஆர்வமுடையவர். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தலைவராக இருந்த போது 2006ல் கீதவாணி விருதுகள் என்ற புதிய போட்டி முறையினை அறிமுகப்படுத்தியவர். யாழ் இந்துக் கலலூரி உருவாக்கிய ஸ்ரீலங்காவின் தமிழ் மகன் ஒருவர் அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகத்தில் உயர் விருதினைப் பெற்றமை அனைத்து தமிழ் மக்களுக்கும் பெருமையிளிப்பதாகும். இளம் சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டியாய விளங்குகின்றார். சமூகத்திற்கு பேராசிரியர் அம்பிகைராஜா ஆற்றிய தொண்டுகள் அளப்பரியவை.

பேராசிரியார் அம்பிகைராஜா காலஞ்சென்ற சித்தாந்த வித்தகர் முருகேசு இளையதம்பிஇ மனோன்மணி தம்பதியினரின் இரண்டாவது புத்திரர் ஆவார். பேராசிரியர் அம்பிகைராஜாவின் சமூகப்பணிகள் மேன்மேலும் தொடர நாம் அனைவரும்  வாழ்த்துவோம்.

See following links for more details:
Also the interview link:  SBS radio 2 (Tamil) Monday 12 January 2015

No comments: