உலகச் செய்திகள்


ஜப்பானிய எரிமலை குமுற ஆரம்பிப்பு

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ. பன்னீர்செல்வம்

ஜெ : சில குறிப்புகள்

இந்திய அரசியலின் மிகப்பெரிய புற்றுநோய் ஊழல்

எமது இணைந்த முயற்சிகள் சர்வதேச பாதுகாப்பையும் சமாதானத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு உதவும்

சிரியாவில் ஐ.எஸ். போராளிகளால் ஐவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை - தண்டனை விதிப்புக்குள்ளானவர்களில் மூவர் பெண்கள்


ஜப்பானிய எரிமலை குமுற ஆரம்பிப்பு

29/09/2014  ஜப்­பா­னி­லுள்ள ஒன்டேக் எரி­மலை சனிக்­கி­ழமை குமுற ஆரம்­பித்­த­தை­ய­டுத்து, அந்த எரி­ம­லைக்கு அருகே 31 மலை ஏறு­ப­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அஞ்­சப்­ப­டு­கின்­றது.


அவர்கள் 31 பேரி­டமும் சுவாசம் இல்­லா­தி­ருந்­த­துடன் அவர்களது இரு­தய இயக்­கமும் ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. எனினும், அவர்கள் உயி­ரி­ழந்­துள்­ளார்கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான மருத்­துவப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்ட பின்­னரே அவர்­க­ளது மரணம் தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
அந்த எரி­ம­லையை அண்­மித்­துள்ள பிராந்­தி­யங்­களில் சுமார் 250 பேர் வெளி­யேற முடி­யாது சிக்­கி­யி­ருந்­த­தா­கவும் அவர்­களில் பலர் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அவர்­களின் 7 பேர் இரா­ணுவ உலங்குவானூர்­திகள் மூலம் ஞாயிற்­றுக்­கி­ழமை காப்­பாற்­றப்­பட்­டுள்­ளனர்.


ஜப்பான் உலகில் எரி­மலை உயிர்ப்­பு­மிக்க பிராந்­தி­யத்தில் அமைந்­துள்ள போதும் 1991 ஆம் ஆண்­டிற்­குப்­ பின்னர் உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் மோச­மான எரி­மலை குமுறல் எத­னையும் எதிர்­கொள்­ளா­தி­ருந்து வந்­தது. 1991 ஆம் ஆண்டு அந்­நாட்டின் தென்­மேற்­கே­யுள்ள உன்ஸன் எரி­மலைக் குமு­றி­யதில் 43 பேர் பலி­யா­கி­யிருந்தனர்.


இந்­நி­லையில், சனிக்­கி­ழமை எரி­மலை குமுற ஆரம்­பித்­த­தை­ய­டுத்து அபாய எச்­ச­ரிக்கை எதுவும் ஏன் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறித்து அறியப்படவில்லை.
3.067 மீற்றர் உயரமான ஒன்டேக் எரிமலையானது மலை ஏறும் வீரர்கள் மத்தியில் பிரபலம் பெற்று விளங்குகின்றது.
நன்றி வீரகேசரி 

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ. பன்னீர்செல்வம்


29/09/2014  தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து ஏனைய அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த பதவியேற்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி

ஜெ : சில குறிப்புகள்
மருதன்
சட்டத்துக்கு விரோதமான முறையில் சொத்துகள் சேர்த்த வழக்கில் ஜெயலலிதாjeyalalitha-5குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்திருக்கிறது.   இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்து அவரைச் சிறையிலும் தள்ளியுள்ள இந்தத் தீர்ப்பு வழக்கத்துக்கு மாறான சில எதிர்வினைகளையும் அசாதாரணமான ஒரு சூழலையும் இங்கே ஏற்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?
1) நிலப்பிரபுத்துவ மனோபாவம்

அஇஅதிமுக மீது பெரிதளவு பற்றோ ஆர்வமோ இல்லாத   திரளான மக்களும்கூட (குறிப்பாக, பெண்கள்) ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெயலலிதா இழைத்த குற்றங்கள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டபிறகும்   அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவரைக் கொண்டாடாடும் மனோபாவமும் அவர் தண்டிக்கப்பட்டவுடன் உடைந்து அழும் மனநிலையும் நீடிப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?

நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டம் நம் சமூகத்தில் வலுவாக வேறூன்றியிருப்பதன் விளைவே இது. நம்மை ஆளும் ஒருவர் கடவுளாகவோ அல்லது குறைந்தபட்சம் எஜமானராகவோதான் இருக்கமுடியும் என்று கருதும் எளிய அதே சமயம் ஆபத்தான இந்த மனோபாவம் தமிழகத்தில் (ஏன், முழு இந்தியாவிலும்கூட) பலமாக வளர்ந்துள்ளது. இந்த எஜமான விசுவாச மனோபாவத்தை ஆட்சியாளர்கள் இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்தி வளர்த்தெடுக்கிறார்கள். ஒன்று, பாப்புலிசம். இரண்டு, அச்சுறுத்தல். ஜெயலலிதா இந்த இரண்டையும் திறமையாகக் கையாண்டவர். ஆனாலும் பின்னதைக் காட்டிலும் முந்தையதே பளிச்சென்று வெளியில் தெரிவதால் அவருடைய பதவி இழப்பைத் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக மக்கள் கருதுகிறார்கள்.

2) சந்தர்ப்பவாத அமைதி

ஜெயலலிதா அரசின் குறைபாடுகளும் அத்துமீறல்களும் வெளியில் தெரியாமல் போனதற்கும் அவருடைய நல்ல முகம் மட்டுமே பிரகாசமாக வெளியில் தெரிவதற்கும் காரணம் மீடியா (குறிப்பாக, அச்சு மற்றும் காட்சி ஊடகம்). நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து மக்களை மீட்டெடுத்து ஆட்சியாளர்கள் குறித்த மாயைகளை உடைத்தெறிந்து உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய கடமை மீடியாவுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் இவற்றைச் செய்வதில்லை என்பதோடு ஆட்சியாளர்களின் மாய பிம்பங்களை மேற்கொண்டு வலுவாகக் கட்டமைக்கும் பணியையே மேற்கொள்கிறார்கள்.

அரசியல், புலனாய்வு, ஆய்வு என்றெல்லாம் பெயர்கள் இட்டு அவர்கள் உற்பத்தி செய்யும் எழுத்துக்குவியல்கள் கதநாயாக(கி) வழிபாட்டுணர்வை மேலும் ஆழமாக்குகின்றனவே தவிர குறைக்கவில்லை. ஜெயலலிதா அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை வசதியாக மறைத்துவிட்டு தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களையே செய்திகளாக இவர்கள் வழங்குகிறார்கள். செய்தித்தாள்கள், பத்திரிகைகள், டிவி சானல்கள் அனைத்தும் ஜெயலலிதாவை அப்பழுக்கற்ற ஒரு தூய நபராக, புனிதமான ஓர் அரசியல் தலைவராக, துதிபாடத்தக்க ஒரு கடவுளாக மக்கள் முன்னால் தூக்கி நிறுத்துகின்றன. அரை உண்மையான அல்லது போலியான இந்தப் பிம்பங்களை மட்டுமே நீண்டகாலமாக உட்கொண்டு வளர்ந்த மக்களால் திடீரென்று ஜெயலலிதாவை ஓர் ஊழல்வாதியாகக் காணமுடியவில்லை. இந்த முரண்பாடு அழுத்தும்போது கோபமும் சோகமும் வெடிக்கின்றன. மக்களின் இந்தத் தடுமாற்றத்துக்கு மீடியாவும் அதில் இயங்குபவர்களும் ஒரு வகையில் பொறுப்பேற்கவேண்டும்.

3) செயல்படாத கட்சிகள்

ஜெயலலிதாவின் சட்டவிரோதச் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களுக்கு அரசியலறிவும் விழிப்புணர்வும் ஊட்ட இங்கே எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. குறிப்பாக, திமுக. தற்போது அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக இயங்கவில்லை என்றபோதும் வரலாறு நெடுகிலும் அதிமுகவை எதிர்த்து அரசியல் களத்தில் செயல்பட்டு வந்த திமுக, தற்போதைய இந்த அசாதாரணமான சூழ்நிலையை கிட்டத்தட்ட அமைதியாகவே கடந்துசெல்ல விரும்புகிறது. இத்தனைக்கும் ஜெயலலிதா மீதான வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதற்கும் அவருக்குப் பாதகமான (எனவே திமுகவுக்கு அனுகூலமான) தீர்ப்பு அங்கிருந்து வெளிவந்ததற்கும் காரணம் திமுக. இருந்தும் திமுக இந்த வாய்ப்பைத் தன்னுடைய அரசியல் லாபத்துக்காகக்கூடப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்குகிறது. காரணம் திமுகமீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் நீடிப்பதுதான். அதனாலேயே ஜெயலலிதாவைத் தனிமைப்படுத்தி அவரை எதிர்க்கவும் விமரிசிக்கவும் முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது. அந்த வகையில், ஆளுங்கட்சியின் தவறுகளை வலுவாகவும் துணிவாகவும் எதிர்க்க இன்று அரசியல் களத்தில் கிட்டத்தட்ட யாருமில்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் ஏன் மத்தியில்கூட இப்போது இதுதான் நிலை. எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சியின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். பலகட்சி ஜனநாயகத்தின் அடிப்படையும்கூட இதுதான். ஆனால் நடைமுறையில் எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதாரக் கண்ணோட்டமும் கொள்கையும் ஒன்றுபோலவே இருக்கின்றன. எனவே, ஊழலிலும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். சிற்சில வேறுபாடுகள் கடந்து இரண்டும் மக்களை ஒன்றுபோலவே ஏய்த்துப் பிழைக்கின்றன.

இந்த உண்மை தெரிந்தும், ஜெயலலிதாவை இன்றுவரை ஒரு புனித பிம்பமாக மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் மீடியா கருணாநிதியை அவ்வாறு பாவிப்பதில்லை என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கருணாநிதி என்று வரும்போது மட்டும் மீடியாவின் அற உணர்வும் விமரிசனப் பார்வையும் திடீரென்று கூர்மையடைந்துவிடுவதன் பொருள் என்ன? அச்சமா? ஜெயலலிதாமீதான அனுதாபமா? எனில், இந்த அனுதாபத்தின் அடிப்படை என்ன?
இடதுசாரிக் கட்சிகளின் தோல்வியையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். சமரசங்கள் கைவந்தால் மட்டுமே இங்கே தேர்தல் அரசியல் சாத்தியம் என்னும் நிதர்சனத்தை சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். மேலே கண்ட முக்கியக் குறைபாடுகளான நிலப்பிரபுத்துவ மனோபாவம், தனிநபர் வழிபாடு, அரசியல் உணர்வற்ற நிலை, மீடியாவின் சார்புத்தன்மை போன்றவற்றுக்கு எதிராகப் போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் போதுமான உழைப்பைச் செலுத்தவில்லை, போதுமான அளவுக்கு மக்களை நெருங்கவில்லை.

4) மழங்கடிக்கப்படும் அறிவு


வேலை, வீடு, குடும்பம், பிரச்னைகள் என்று ஒரு சிறிய வட்டத்தில் சிக்கி, மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களால் ஆட்சிமுறை குறித்தோ அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தோ ஆராயவோ, விவாதிக்கவோ முடிவதில்லை. இவர்களில் பலர் அரசியலை சினிமாவின் நீட்சியாக, அதாவது மற்றொரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்கின்றனர். தம்மைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளின் அடிப்படைகளைக்கூட தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அரசியல் என்பது அவர்களுக்குப் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கும் சுவாரஸ்யமூட்டும், பதைபதைப்பூட்டும், பிரமிக்கவைக்கும், அதிர வைக்கும் கதைகள் மட்டுமே. தாம் வாசித்துக்கொண்டிருப்பது (அல்லது பார்த்துக்கொண்டிருப்பது) நிஜமா, கற்பனையா என்று தெரிந்துகொள்ளக்கூட அவர்கள் விரும்புவதில்லை.

அரசியல் உணர்வற்ற, அரசியலற்ற இத்தகைய மக்கள் மிக எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். அவர்களைத் தேவைப்படும்போது தூண்டிவிடமுடிகிறது. தலைவருக்காக இவர்களில் சிலர் உயிரைக் கொடுக்கவும், எடுக்கவும் முன்வருகிறார்கள். இவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது. தேவைப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினரை இன்னொன்றுக்கு எதிராகத் திருப்பிவிட முடிகிறது. மக்களின் அறிவு மழங்கடிக்கப்பட்ட நிலையில் இருக்கும்வரை குருட்டுத்தனமான தலைவர் ஆராதனையும் இன்னபிற சமூக அவலங்களும் தொடரவே செய்யும். இதைத்தான் அரசியல் கட்சிகளும்  விரும்புகின்றன.

5) மத அரசியலும் சீர்திருத்தமும்

ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆர்வமும் வேகமும் தற்போதைக்கு பாஜகவிடம் மட்டுமே இருக்கிறது என்பதைப் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இது உடனடியாகச் சாத்தியப்படும் என்று சொல்லமுடியாது என்றபோதும் பாஜக அந்தத் திசையில்தான் இனி செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் காலூன்ற இரு வழிகளை  பாஜக கையாளும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்று, இந்து மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது.  இரண்டு, திராவிட அரசியலுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துவது.

பிற மாநிலங்களைப்போலன்றி மத அடையாளங்கள் தமிழகத்தில் முக்கியத்துவம் பெறாமல் இருப்பதற்குக் காரணம் அத்தனை குறைபாடுகளையும் கொண்டிருக்கும் இந்த இரு பெரும் திராவிட அரசியல் கட்சிகள்தாம் என்பதை மறுப்பதற்கில்லை. தற்போதைய வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாஜக தனது மதவாத அரசியலை இங்கே பரப்பத் தொடங்கும்போது அதை எதிர்கொண்டு முறியடிக்கவேண்டிய அவசியம் திமுகவுக்கு இருக்கிறது. வேறு காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், பதவிக்காகவாவது இதனை திமுக செய்தாகவேண்டும். அப்போது திமுக சில சமரசங்களைச் செய்தாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.

பெரும்திரளான மக்கள் பாஜக பக்கம் நகர்ந்து செல்வதைத் தடுக்க திமுகவுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, தனது நாத்திகவாதத்தை (என்றால் மிச்சமிருக்கும் அதன் கூறுகள் அனைத்தையும்) அது முற்றிலுமாகக் கைவிடவேண்டும். அல்லது, தனது நாத்திகவாதக் கொள்கையைத் தீவிரமாக்கி, வகுப்புவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராக இப்போதிருந்தே குரல் கொடுத்துப் போராடத் தொடங்கவேண்டும். கிட்டத்தட்ட இதே இரு வழிகள்தான் இடதுசாரிக் கட்சிகளுக்கும் உள்ளன.
நன்றி: தமிழ்பேப்பர்  & (தேனீ )
இந்திய அரசியலின் மிகப்பெரிய புற்றுநோய் ஊழல்
இந்திய அரசியலையே ஒரு கணம் உறையவைத்திருக்கிறது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு.தன்னுடைய முந்தைய ஆட்சியின்போது சட்ட விரோதமான வகையில், சொத்துகளைக் குவித்தார் என்று தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13 (1) (இ) மற்றும் 13 (2) பிரிவுகளின் கீழ், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதத்தையும் விதித்திருக்கிறார். மேலும், இந்த வழக்கில் ஜெயலலிதாவோடு குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பின் தொடர்ச்சியாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, முதல்வர் பதவியையும் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்ததோடு, தண்டனைக் காலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகான 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்திருக்கிறார் ஜெயலலிதா.

இதுவரையிலான ஜெயலலிதாவின் எழுச்சிகள், வீழ்ச்சிகளோடு பட்டியலிட்டு ஒப்பிடக் கூடிய விஷயம் அல்ல இது. அதேபோல, ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு அரசியல் தலைவர் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே இதை அணுகுவதும் சரியான வழிமுறை அல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கோடு ஒப்பிட்டு நாம் அணுக வேண்டிய விவகாரம் இது.

இந்திய அரசியலைச் செல்லரிக்கும் மிகப் பெரிய புற்றுநோயாக உருவெடுத்துவருகிறது ஊழல். அரசியல் வர்க்கத்துக்கு இணையாக அதிகார வர்க்கமும் ஊழலில் திளைக்கிறது. நாட்டின் எந்த மாநிலமும் ஊழலுக்கு விதிவிலக்கானதாக இல்லை. அறத்தின் மையமாக இருக்க வேண்டிய அமைப்புகளும், அதைப் பாதுகாக்க வேண்டிய மனிதர்களும் நெறி பிறழும்போது, சாதாரணக் குடிமக்கள் செய்வதறியாது நிற்கிறார்கள். ஒட்டுமொத்த அமைப்பின் மீது மட்டுமல்லாமல், அறத்தின் மீதே நம்பிக்கையற்றவர்களாக மாறிப்போகிறார்கள்.

நீதிமன்றங்கள் தங்களுடைய கடமையைச் சரியாகச் செய்யும்போது சமூகத்தில் நடக்கும் முக்கியமான பணி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோ, அவர்கள் தண்டிக்கப்படுவதோகூட இல்லை; அறத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் இப்படிப்பட்ட சாதாரண மக்களை மீட்டெடுப்பதே ஆகும். அறத்தின் முன் அனைவரும் ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற ஒளிவிளக்கைக் காப்பதே ஆகும்.

ஏறத்தாழ 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இது. அதிகார உச்சத்தின் உக்கிரத்தை, அழுத்தங்களை, எண்ணற்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட விசாரணை. இறுதியில், அரசுத் தரப்பும் இந்த வழக்கை வெவ்வேறு காலங்களில் விசாரித்த பல்வேறு நீதிபதிகளும் எல்லா இடர்ப்பாடுகளையும் தாண்டி, தம்முடைய கடமையை நிறைவேற்றியிருக்கிறார்கள். நீதியின் முன் எல்லோருமே சமம் எனும் ஒளி பொருந்திய உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்திய நீதித் துறையின் பணி இந்திய ஜனநாயகத்தின் மீதான கம்பீரத்தை மேலும் ஒருபடி உயர்த்தியிருக்கிறது. எப்போதும் வாய்மையே வெல்லட்டும்!

-தி இந்து தலையங்கம்
நன்றி: தேனீ 
எமது இணைந்த முயற்சிகள் சர்வதேச பாதுகாப்பையும் சமாதானத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு உதவும்

02/10/2014 அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­வாலும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யாலும் இணைந்து எழு­தப்­பட்ட பெரும் எதிர்­பார்ப்­புக்­குள்­ளா­கி­யி­ருந்த ஆசி­ரியர் தலை­யங்கம் செவ்­வாய்க்­கி­ழமை அமெ­ரிக்க வாஷிங்டன் போஸ்ட் பத்­தி­ரி­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.மேற்­படி ஆசி­ரியர் தலையங்­க­மா­னது 21 ஆம் நூற்­றாண்­டி­லான இந்­திய – அமெ­ரிக்க உற­வு­களை மீளப் புதுப்­பிப்­பது தொடர்பில் விப­ரிக்­கி­றது.
இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் பொது­வான தகை­மை­க­ளாலும் பரஸ்­பர அக்­க­றை­க­ளாலும் பிணைப்பைக் கொண்­டுள்­ளன. அதனால் எமது இணைந்த முயற்­சிகள் எமது இயற்­கை­யான பங்­கா­ளித்­துவம் என்­பன எதிர்­வரும் வரு­டங்­களில் சர்­வ­தேச பாது­காப்­பையும் சமா­தா­னத்­தையும் ஒழுங்­கு­ப­டுத்­து­வ­ன­வாக அமையும் என்று தலை­யங்­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
எனினும் அமெ­ரிக்க இந்­திய உற­வு­களின் உண்­மை­யான முக்­கி­யத்­து­வத்தை முழு­மை­யாக உணர வேண்­டி­யுள்­ளதை இரு தலை­வர்­களும் ஒப்புக் கொண்­டுள்­ளனர்.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­வாலும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யாலும் எழு­தப்­பட்ட மேற்­படி ஆசி­ரிய தலை­யங்­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தா­வது;
ஜன­நா­யகம் சுதந்­திரம் பல்­வ­கைமை தொழில் முயற்சி என்­ப­ன­வற்றில் ஈடு­பா­டுள்ள நாடுகள் என்ற வகையில் அமெ­ரிக்­காவும் இந்­தி­யாவும் பொது­வான தகை­மை­க­ளாலும் பரஸ்­பர அக்­க­றை­க­ளாலும் பிணைக்­கப்­பட்­டுள்­ளன. நாங்கள் ஒவ்­வொ­ரு­வரும் மனித வர­லாற்றின் நேர்­மு­க­மாக முன் செல்­லலை ஒழுங்­கு­ப­டுத்­தி­யுள்­ள­துடன் எமது இணைந்த முயற்­சிகள் மற்றும் இயற்­கை­யான அரிய பங்­கா­ளித்­துவம் என்­ப­ன­வற்­றி­னூ­டாக எதிர்­வரும் வரு­டங்­களில் சர்­வ­தேச பாது­காப்பு மற்றும் சமா­தா­னத்­திற்கு உருக்­கொ­டுக்க உதவ முடியும்.
அமெ­ரிக்­கா­வுக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டை­யி­லான பிணைப்­புகள் எமது பிர­ஜை­களின் நீதி மற்றும் சமா­தா­னத்­துக்­கான பகி­ரப்­பட்ட ஆவலை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாகும்.
சுவாமி விவே­கா­னந்தர் 1893 ஆம்­ஆண்டு சிக்­கா­கோவில் இடம்­பெற்ற உலக மத நிகழ்வில் இந்து மதத்தை உலகின் மத­மொன்­றாக முன்­வைத்தார். அதே சமயம் மார்டின் லூதர் கிங் ஆபி­ரிக்க அமெ­ரிக்­கர்­க­ளுக்கு எதி­ரான பார­பட்சம் மற்றும் அநீ­தியை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு எதிர்­பார்த்தார். அவர் மகாத்மா காந்­தியின் அஹிம்சை போத­னை­களால் ஈர்க்­கப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் காந்­தியோ (அமெ­ரிக்க தத்­து­வ­வி­ய­லாளர்) ஹென்றி டேவிட்டால் கவ­ரப்­பட்­டி­ருந்தார்.
நாடுகள் என்ற வகையில் நாம் எமது மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­தியை நல்­கு­வது தொடர்பில் பல தசாப்த காலங்­க­ளுக்கு மேலாக பங்­கா­ளித்­து­வத்தைக் கொண்­டுள்ளோம். எனது கூட்­டு­றவின் பல­மான அடிப்­ப­டையை இந்­திய மக்கள் ஞாப­கத்தில் வைத்­துள்­ளனர்.
பசுமைப் புரட்­சியின் விளை­வான உணவு உற்­பத்தி அதி­க­ரிப்­புகள் இந்­திய தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் என்­பன எமது கூட்­டி­ணைப்பின் விளை­வாக இடம்­பெற்ற பல­வற்றில் உள்­ள­டங்­கு­கின்­றன.
இன்று எமது பங்­கா­ளித்­துவம் பல­மா­ன­தா­கவும் நம்­ப­க­ர­மா­ன­தா­கவும் நிரந்­த­ர­மா­ன­தா­கவும் உள்­ள­துடன் அது விரி­வு­பட்டு வரு­கி­றது. எமது உறவு அர­சாங்க மட்­டத்தில் மட்­டு­மல்­லாது நாட்டு மட்­டத்­திலும் உள்ளூர் மட்­டத்­திலும் எமது இரு தரப்பு இரா­ணு­வங்கள் தனியார் துறைகள் சிவில் சமூகம் என்­ப­வற்­றுக்­கி­டை­யிலும் முன்­பி­ருந்­ததை விடவும் மேல­திக பரஸ்­பர கூட்­டு­றவைக் கொண்­டுள்­ளது. நாம் இயற்­கை­யான நண்­பர்கள் என 2000 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரகடனப்படுத்திய போது இவற்றில் அநேகமானவை நிகழ்ந்தன.

பல வருட காலமாக வளர்ந்து வரும் எமது கூட்டுறவால் இன்று எமது மாணவர்கள் ஆராய்ச்சி திட்டங்களில் ஒன்றாக பணியாற்றுகின்றனர். எமது விஞ்ஞானிகள் அதி முன்னேற்றகர தொழில் நுட்பங்களை அபிவிருத்தி செய்கின்றனர். சிரேஷ்ட அதிகாரிகள் உலக பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுகின்றனர்.
நன்றி வீரகேசரி


சிரியாவில் ஐ.எஸ். போராளிகளால் ஐவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை - தண்டனை விதிப்புக்குள்ளானவர்களில் மூவர் பெண்கள்

வட சிரியாவிலுள்ள குர்திஷ் பிரதேசத்தில் ஐ.எஸ். போராளிகளால் 3 பெண்கள் உட்பட 7 ஆண்களுக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்தது.


அவர்களுக்கு கோபானி நகருக்கு அண்மையில்  தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. பிரதான  குர்திஷ் நகருக்கு அண்மையில் போராளிகளுடனான மோதல்களில் ஈடுபட்ட வேளை குர்திஷ் படையணியைச் சேர்ந்த மேற்படி போராளிகளால்  கைதிகளாக பிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 
அவர்களுக்கு எதற்காக தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது  அறியப்படவில்லை என சிரிய மனித உரிமைகள் அவதான நிலையத்தைச்சேர்ந்த ரமி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி

No comments: