ஆறுமுக நாவலருக்கு மத்திய அரசு தபால்தலை வெளியிட வேண்டும்: பாஜக கோரிக்கை

.
ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம்
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்து சைவத்தையும், தமிழையும் வளர்த்த ஸ்ரீஆறுமுக நாவலருக்கு, மத்தியஅரசு தபால் தலை வெளியிட்டு கவுரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரகாஷ் ஜாவேட்கருக்கு கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவரது கடித விபரம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் 1822-ல் பிறந்து இந்தியாவிற்கு வந்து சைவத்தையும், தமிழையும் வளர்த்தவர் ஸ்ரீஆறுமுக நாவலர்கள். மேலும் அவர் கல்வி பணிக்காக அரும்பாடுபட்டார். தமிழகத்தில் சிதம்பரத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஆறுமுகநாவலர் பள்ளியை நிறுவி கல்விப்பணி மேற்கொண்டுள்ளார். அவர் வாழ்ந்த காலம் இலங்கையும், இந்தியாவும் பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்தது. அப்படி இருந்தும் கூட தமிழை வளர்க்க பல்வேறு நூல்களை இயற்றி வெளியிட்டு தமிழுக்கு பெருமைபடுத்தியவர் ஆறுமுகநாவலர். தமிழுக்காகவும், சைவத்திற்கு இறுதி மூச்சு வரை பாடுபட்ட நாவலர் தமிழகசதத்திலேயே இயற்கை எய்தினார். 1971-ம் ஆண்டே இலங்கை அரசு அவருக்கு தபால்தலை வெளியிட்டுள்ளது. அவர் நிறுவிய சிதம்பரம் ஸ்ரீஆறுமுக நாவலர் பள்ளியின் 150வது ஆண்டை முன்னிட்டு மத்தியஅரசு, அவருக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பிக்க வேண்டும் என கடிதத்தில் வே.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி.காம் 

No comments: