வில்லவராயர்-சின்னத்தம்பிப் புலவர் - வேதா இலங்காதிலகம், டென்மார்க்

.
ரராச சேகர மன்னர் பரம்பரையில்
வில்லவராய முதலியாரொரு வித்துவான்,
ஒல்லாந்த ராட்சிக்காலக் கச்சேரி முதல்வர்.
வல்லவனான தன் இளையமகனுக்கு இவர்
வைத்த பெயர் செயதுங்கமாப்பாண முதலி.
நிலைத்தது சின்னத்தம்பியென அழைத்த பெயர்.
பாடத்தில் கருத்தற்றுச் சிறாருடன் சின்னத்தம்பி
ஓடி விளையாடிக் களித்தார் இளமையில்.
விளையாடினும் கவிபுனையும் ஆற்றலுடனிருந்தார். 
மாலையில் கூழங்கைத் தம்பிரானின் வித்தியா 
கலாட்சேபங்கள் கேட்டு ஏழு வயதிலேயே 
பாடல்களை அவதானித்து ஒப்புவித்தார் – ஒருநாள்
வடதேச வித்துவானொருவர் நல்லூருக்கு வந்தார்.
தடம் தெரியாது, வில்லவராயர் வீடெதுவென்று 
தெருவில் விளையாடிய சிறுவரிடம் வினவினார்.
சிறுவனொருவன் துணிந்து பாட்டிலேயே பதிலிறுத்தான்.

   
”  பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
      நன் பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் – மின்பிரபை
      வீசுபுகழ் நல்லூரான்வில்லவரா யன்கனக
      வாசலிடைக்கொன்றை மரம்.”
( வில்லவராய முதலியாரின் வீட்டு வாசலில் ஒரு கொன்றை மரம் நிற்கிறது. அது அவ்வாசலைத் தங்க(கனகம் – தங்கம்) மயமாக்கிக் கொண்டு நல்ல நிழலைத் தருகிறது. என்பதே இப் பாடலின் கருத்தாகும்.)
ந்தையாரிடம் வித்துவான் சம்பவத்தைக் கூறினார்.
விந்தையல்ல சின்னத்தம்பி வேலையிதுவெனத் தந்தையுணர்ந்தார்.
யாழ்ப்பான சண்டிலிப்பாய் கல்வளை தல
விநாயகருக்கு யமக அந்தாதி பாட விரும்பி
காப்புச் செய்யுள் முதலிரு அடிகளையெழுதி வீட்டு
இறப்பில் செருகிச் சென்றார்  வில்லவராயர்.
பிதா அற்ற நேரம் வீடு வந்த சின்னத்தம்பி
ஏடு எழுத்தாணியை இறப்பிலே கண்டார்.
றுதியிரு வரிகளையும் எழுதி முடித்து
இறப்பிலே செருகிவிட்டுச் சென்றுவிட்டார்.
புpறப்பான இறுதி வரிகளைக் கண்ட தந்தை
பெரு மகிழ்வாய் மாதாவிடம் வினவினார்.
தந்தை மகனைத் தண்டிப்பாரென அஞ்சியதாய்
மகன் வீடுவரவில்லையெனப் பொய் மொழிந்தார்.
காப்புச் செய்யுள் சிறப்பு, தப்பில்லையென்றதும்
ஒப்புக் கொண்டார் தாயார் மகன் வந்ததாக.
சாதாரணன்  அல்ல தன் மகன் 
புலவர் சிகாமணியென அந்தாதி பாட
ஓப்படைத்தார். கல்வளையந்தாதி, 
மறைசையந்தாதிகளைப் பாடினார்.
கரவைவேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு
நாலு மந்திரி கும்மி, தனிப்பாடல்களெனப் பாடியுள்ளார்.
இவர் காலம் -1716-1760.
nantri anthimaalai.blogspot

No comments: